search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராய வியாபாரி"

    • போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் இதனை மாவட்ட கலெக்டர் பழனிக்கு பரிந்துரை செய்தார்.
    • சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவர் சூர்யா(வயது 24). இவர் கடந்த 6-ந் தேதி கொந்தமூர் மேல்நிலை பள்ளி அருகே சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

    இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் வைப்பதற்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாசிடம் கிளியனூர் போலீசார் அனுமதி கேட்டனர்.போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் இதனை மாவட்ட கலெக்டர் பழனிக்கு பரிந்துரை செய்தார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பழனி அனுமதி அளித்ததின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    அதன்படி, சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சாராயம் விற்பனையில் ஈடுபட்டு தனபாலன் என்பவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொ ருத்தானிருப்பு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனபாலன் (வயது 57).

    இவர் அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளதோடு தனபாலன் கைது செய்யப்பட்டு நாகை மாவட்ட சிறையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    தொடர்ந்து தனபாலன் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்கிற்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸக்கு பரிந்துரை செய்தார்.

    அதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் நாகை சிறையில் இருந்த தனபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சிக்கினார்.
    • குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சிமாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38) அவரது வீட்டின் அருகில் உள்ள ஓடை யில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்ன சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நட வடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், சாராய வியாபாரி ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் , ராமச்சந்திரனை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நேற்று ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

    • மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விஷ வாடையுடன் கூடிய சாராய ஊரல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் கள்ளச்சாரா யம் விற்பனை மற்றும் திருட்டு மது விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுவிலக்கு போலீசார் குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அருமனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் மடத்துவிளை வீடு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது அங்கு விஷ வாடையுடன் கூடிய சாராய ஊரல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப் படும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பாகோடு பேரை மடத்து விளை வீடு பகுதியை சேர்ந்த ராஜ ஜெபசிங் என்ற ஜினு (வயது 40) என்பவர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த ராஜ ஜெபசிங் தலைமறைவாகி விட்டார்.

    அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்ப டையில் தனிப்படை போலீ சார் அங்கு விரைந்துள்ளனர்.

    ஏற்கனவே ராஜஜெபசிங் மீது தக்கலை மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்பட 3 இடங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நல்லாளம் கிராமத்தில் அருள் (எ) சந்தானம் என்ற பெயரிலான பெண், சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடபட்டு வந்தார். இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் அருளை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க விழுப்புரம் கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து பிரம்மதேசம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்

    • கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள்.
    • சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    மரக்காணம், செங்கல்பட்டு பகுதியில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஏழுமலை சென்னை ரசாயன தொழிற்சாலையில் மெத்தனால் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்து சப்ளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம், செல்லன் தெரு, நகரான் தெரு, சம்புவெளி பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் குடித்ததில் 14 பேர் பலியாகினர்.

    மற்றவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி, விழுப்புரம் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் பலியான இந்த சம்பவம் தமிழகம், புதுவையை உலுக்கியுள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மரக்காணம் சாராய வியாபாரிகள் அமரன் முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி உள்ளிட்டவர்களையும் செங்கல்பட்டு பகுதியில் வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மெத்தனால் வாங்கி வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசித்து வரும் பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் ஏழுமலை ஆகிய 2 பேரையும் புதுச்சேரி போலீஸ் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில், கள்ளச்சாராயம் தயாரிக்க சென்னை வானரகம் அடுத்த மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் தொழிற்சாலையில் மெத்தனால் வேதிப்பொருள் வாங்கி புதுச்சேரியில் பதுக்கி வைத்தும், புதுச்சேரியில் இருந்து மரக்காணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்ததும் தெரியவந்தது.

    சென்னை மதுரவாயல் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பி தொழிற்சாலைக்கு வாங்கும் மெத்தனாலை ஏழுமலைக்கு விற்பனை செய்துள்ளார். இளையநம்பி கெமிக்கல் என்ஜினீயர் என்பதால் எவ்வளவு தண்ணீரில் மெத்தனால் மற்றும் மூலப்பொருள் சேர்த்து சாராயம் தயாரிக்க வேண்டும் என அவர் பயிற்சி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இளையநம்பி தொழிற்சாலையில் ஏழுமலை மற்றும் பர்கத்துல்லா கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்து புதுச்சேரியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    பின்னர் அதனை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர். அதிக விஷத்தன்மை வாய்ந்த மெத்தனாலை சாராய வியாபாரிகள் கலப்படம் செய்து விற்பனை செய்ததால் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர்.

    இதனை கேள்விப்பட்ட ஏழுமலை பதுக்கி வைத்திருந்த மெத்தனாலை கீழே ஊற்றி அழித்துள்ளார்.

    கடலூர் கெமிக்கல் என்ஜினீயர் இளைய நம்பியும், ஏழுமலையும் நண்பர்கள். புதுவை வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியில் சோப்பு கம்பெனி வைத்திருப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நம்புவதற்காக ஏழுமலை கொட்டகை அமைத்துள்ளார்.

    மெத்தனால் வாங்கி வந்து இங்கு தான் ஏழுமலை பதுக்கி வைத்துள்ளார். சென்னையில் இருந்து புதுவைக்கு வாகனத்தில் மெத்தனால் கொண்டு வரும்போது சோதனை சாவடிகளில் காட்டுவதற்கு மொத்தனால் சோப்பு கம்பெனிக்கு வாங்கி வருவது போல ரசீது தயார் செய்து மெத்தனாலை கடத்தியுள்ளார்.

    புதுச்சேரி என்றாலே மது என்பது எல்லோருடைய மனதிலும் எழக்கூடிய உளவியல் கலந்த உணர்வாக உள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் ரசாயன தொழிற்சாலையில் இருந்து வாங்கி வரப்பட்ட மெத்தனாலை ஏழுமலை வரும் வழியிலேயே சாராய வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை.

    தன்னுடைய சோப்பு கம்பெனிக்கு மூலப்பொருள் வாங்கி வருவதாக கணக்கு காட்டிவிட்டு புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மெத்தனாலை அனுப்பி வந்துள்ளார். புதுவையில் இருந்து மெத்தனால் கொண்டு வருவதால் 'இது பாண்டிச்சேரி சரக்கு' என சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    புதுவையில் இருந்து பர்க்கத்துல்லா வாகனம் மூலம் கொண்டுவரும் மெத்தனால் என்பதால் சாராய வியாபாரிகளுக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு வாங்கி உள்ளனர். இதுவே விஷசாராயமாக மாறி 22 பேர் உயிரை பறித்துள்ளது.

    • சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே மலையம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 47) அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் சாராய வியாபாரி விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    விழுப்புரம் கே. கே. ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யனார் (62). இவர் திருவெண்ணைநல்லூர் அருகே தென்மங்கலம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் சாராயம் விற்பனை செய்தார். அப்போது ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் பழனி இவரை பிடித்து கைது செய்தார். 

    • உளுந்தூர்பேட்டை அருகே சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார்.

    கள்ளக்குறிச்சி, செப்.18-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (எ) கன்னுகுட்டி (வயது 55). இவர் கடந்த மாதம் 17-ந்தேதி வடமாம்பாக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தார். அவரை திருநாவலூர் போலீசார் அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். இவர் மீது திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள்நிலுவையில் உள்ளது.

    இவ்வாறு தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அவரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி திருநாவலூர் போலீசார் ஏழுமலையை நேற்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    ×