என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெர்சி"
- மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும்
- சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கானும் 97 நம்பர் ஜெர்சியையே அணிந்துள்ளார்
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 133 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.
இதற்கு முன்பாக கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி , அசாருதீன்,திலீப் வெங்சர்கார், ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். 113 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன்அவர் சதம் விளாசியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும். தொடர்ச்சியாக அவர் விளாசும் இரண்டாவது சதமும் இதுவே ஆகும். டோனி தொடங்கி ஒவ்வொரு வீரரும் தங்களுக்கே உரிய தனித்துவமான நம்பர் கொண்ட ஜெர்சியை அணிவது வழக்கம. இந்நிலையில் சர்பராஸ் கான் அணிந்துள்ள 97 நம்பர் ஜெர்சி குறித்த சுவாரஸ்ய விளக்கம் கிடைத்துள்ளது.
97 என்ற நமபிரின் 9 என்பது ஹிந்தியில் 'நவ்' என்று உச்சரிக்கப்டுகிறது. 7 என்பது 'சாத்' என்ற உச்சரிக்கப்படுகிறது. சேர்த்துப்படித்தால் நவுசாத். சுவாரஸ்யமானது என்னவென்றால் சர்பராஸ் கானின் தந்தை பெயர் நவ்சாத் கான். எனவேதான் சர்பராஸ் 97 நம்பர் ஜெர்சியை அணிந்துள்ளார். மேலும் சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கான், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2024 உலகப்கோப்பை போட்டிகளின்போது 97 நம்பர் ஜெர்சியையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
- இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.
ஆம்ஸ்டர்டாம்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.
இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.
இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
- சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.
- விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்து மிகுந்த வரவேற்பை பெற்ற படம் பிரேமலு. படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்திருந்தார். மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட மொழி ரசிகர்களையும் கவர்ந்தார்.
இதையடுத்து மமிதா பைஜூ திரையுலகினர் திரும்பி பார்க்கும் நடிகையாக உருவெடுத்தார். இந்த நிலையில் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரை தற்போது திரை உலகின் காதல் மன்னன் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டா ராணுவ வீரராக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெர்சி படத்தை இயக்கிய கவுதம் தின்னனூரி இயக்குகிறார். இப்படம் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படமாகும். தற்காலிகமாக VD-12 என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார். முதலில் ஸ்ரீலீலா இப்படத்தில் நடிக்கவிருந்தார் ஆனால் தற்பொழுது அவர் இதில் நடிக்கவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவார கோஷமிட்டனர்.ஆனாலும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் எளிதாக வென்றது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 103 வயது ராம்தாஸ் என்பவர் தோனியின் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தோனி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தவறாமால் பார்த்து ரசிப்பார்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி கேள்விபட்ட தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மேலும் அந்த ரசிகருக்கு தனது கையொப்பமிட்ட சிறப்பு பரிசாக ஜெர்சி சட்டை ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் தோனியை பாராட்டி வருகிறார்கள்.
A gift for the 1⃣0⃣3⃣ year old superfan ?
— Chennai Super Kings (@ChennaiIPL) May 3, 2024
Full story ? - https://t.co/oSPBWCHvgB #WhistlePodu #Yellove pic.twitter.com/hGDim4bgU3
- ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது.
- 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளமறுநாள் தொடங்க உள்ளது. 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. ஒவ்வோரு அணியும் ஜெர்சி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அணியும் தங்களது வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வது பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாம அதற்கான உபகரணங்களும் அணி வீரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் இப்போ வரையும் சில போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடுவதை வழக்கமாக ஆர்சிபி அணி கொண்டுள்ளது.
2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.
- சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது.
- முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.
சமீப காலமாக உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பலரும் பல்வேறு வகைகளில் உலக கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுமி ஒரே நேரத்தில் 45 ஜெர்சிகளை அணிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
சோபியா என்ற அந்த சிறுமி உலக சாதனை படைக்கும் போது அங்கிருந்த ஒவ்வொரு ஜெர்சியையும் இடுப்பு வரை இழுக்க வேண்டி இருந்தது. சோபியாவை போலவே அவரது தாயாரும் உலக சாதனை படைத்துள்ளார். முதலில் சிறிய அளவிலான ஜெர்சியும் பின்னர் அளவில் பெரிய ஜெர்சியும் அணிந்திருந்தார்.
சோபியா உலக சாதனையை தான் வசிக்கும் இடத்தில் உள்ள பொது நூலகத்தில் படைத்தார். முன்னதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் தோமஸ் உமாம்போ ஒரே நேரத்தில் 40 ஜெர்சிகளை அணிந்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை சோபியா முறியடித்துள்ளார்.
- 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றது.
- உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.
நியூயார்க்:
கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.
இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகி உள்ளதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது
- கோலி தருவதை அசாம் மகிழ்ச்சியுடன் பெறும் காட்சிகள் வைரலானது
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் (ICC) 2023 வருட ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இத்தொடரின் போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 7 ஆண்டுகளாக ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இம்முறையும் வெற்றி பெற்றதை அடுத்து 8-வது முறையாக இந்த பெருமையை இந்தியா தக்க வைத்து கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தோல்வியுற்றதால் அந்நாட்டில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆடிய விதத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணி வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு தனது கையொப்பமிட்ட இந்திய அணி டி-ஷர்டுகளை (jersey) பரிசாக அளித்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் பாபர் அசாம் பெற்று கொண்டார்.
இக்காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அசாமின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணியினரின் தோல்வியில் பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் பாபர் அசாம், கோலியிடமிருந்து டி-ஷர்ட் வாங்குவதை தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. தோல்வியில் மக்கள் வருந்தும் போது, பாபர் அசாம் இவ்வாறு செய்தது தவறு. அவர் இதை செய்திருக்க கூடாது. தனது உறவினர் மகனுக்காக கோலியிடம் டி-ஷர்ட்கள் வாங்க பாபர் நினைத்திருந்தால் கூட கேமிராக்களின் பார்வையில் படாமல் தங்கள் அறைக்கு சென்ற பிறகு அவரை தனியே சந்தித்து வாங்கியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெல்வதும் தோற்பதும் இயல்பான சம்பவங்கள் என்றும் இரு அணி வீரர்களின் நட்பான பரிமாற்றங்கள், போட்டியை போட்டியாக பார்க்கும் மனப்பக்குவம் மக்களிடம் வளர வளர இது போன்ற செயல்கள் சரியாக புரிந்து கொள்ளப்படும் என இச்சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
- அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.
இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ம் தேதி சென்னையில் மோதுகிறது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனம் இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை வடிவமைத்துள்ளது.
இந்திய அணியின் புதிய ஜெர்சியின் அறிமுக வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டது.
- லக்னோ அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார்.
- 2022-ல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது பச்சை-நீல நிற ஜெர்சியை அணிந்திருந்தது.
லக்னோ:
2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் டோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.
???? ????, ???? ????, ???? ?????, ???? ?????? ??#JerseyLaunch | #LucknowSuperGiants | #LSG pic.twitter.com/u3wu5LqnjN
— Lucknow Super Giants (@LucknowIPL) March 7, 2023
இந்நிலையில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இந்த சீசனுக்கான புது சீருடையை வெளியிட்டுள்ளது. லக்னோ அணியின் புதிய சீருடையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார்.
2022-ல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது பச்சை-நீல நிற ஜெர்சியை அணிந்திருந்த நிலையில், அவர்கள் இப்போது அடர் நீல நிற நிறத்துக்கு மாறியுள்ளனர். புதிய சீருடை வெளியீட்டு விழாவில் ரவி பிஷ்னோய், அவேஷ் கான், ஜெய்தேவ் உனத்கட், தீபக் ஹூடா மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரும் அணியினர் தங்கள் புதிய ஜெர்சியை வெளியிட்டனர். லக்னோ அணி கடந்த ஆண்டு ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது மற்றும் ராகுலின் தலைமையின் கீழ் 17 ஆட்டங்களில் ஒன்பதில் வெற்றி பெற்றது.
- இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி 20 ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
- மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணி புது சீருடையுடன் களமிறங்குகிறது.
மும்பை:
8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இத்தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 ஓவர் போட்டி வரும் 20-ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய டி20 ஜெர்சியை பி.சி.சி.ஐ. இன்று அறிமுகம் செய்துள்ளது. மொகாலியில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் போது இந்திய அணி இந்த புதிய சீருடையுடன் களம் இறங்குவார்கள்.
ஸ்கை புளு நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த புதிய ஜெர்சியை இந்திய வீரர் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கவுர், ஷபாலி வர்மா ஆகியோர் அணிந்திருக்கும் புகைப்படத்தை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்