என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்னணு எந்திரங்கள்"
- முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.
சின்ன சின்ன அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களோ, மோதலோ ஏற்படவில்லை. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலையில் நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகிறது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.
மாலை 6 மணிக்கு பிறகு வரிசையில் நின்றவர்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட நேரம் காத்திருந்து ஓட்டு போட்டனர். இதனால் சில மையங்களில் இரவு 7 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பிறகே பல வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதே போன்று 39 தொகுதிகளில் பதிவான வாக்குகளும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட மையங்களில் எண்ணப்படுகிறது.
தேர்தல் முடிந்து 45 நாட்கள் கழித்தே ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரு மாதத்துக்கும் மேலாக பாதுகாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினரும், 3-வதாக ஆயுதப்படை போலீசும், 4-வதாக உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகிறார்கள்.
டி.எஸ்.பி. அல்லது போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.
39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது. இன்று காலையிலும் பல இடங்களில் அந்த பணிகள் நீடித்தன.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு இன்று காலையில் கொண்டு சேர்க்கப்பட்ட மின்னணு எந்திரங்கள் 'ஸ்டிராங் ரூம்' என்று அழைக்கப்படும் அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அந்த அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
ஸ்டிராங் ரூம் அறையை சுற்றிலும் போலீசார் ரோந்து சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை தாண்டி மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் யாரும் நெருங்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்தபடியே போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
இப்படி வாக்கு எண்ணும் மையங்களில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 10 ஆயிரம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த பாதுகாப்பை மேலும் பல மடங்கு அதிகரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
- கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
- ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் 5 ஆண்டு பதவிகாலம் இன்னும் 4 மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. இதையடுத்து புதிய ஆட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் தயாராக தொடங்கி உள்ளது.
டெல்லியில் இது தொடர்பாக அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடி, தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பிரச்சார கட்டுப்பாடுகள் என்று பல்வேறு வகைகளில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக அடுத்த மாதம் (ஜனவரி) முதல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண் கோயல் ஆகிய மூவரும் மாநில வாரியாக சுற்றுப் பயணம் செய்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். 543 தொகுதிகளிலும் எத்தகைய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து பட்டியல் தயாரிப்பார்கள்.
அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது 7 கட்டமாக ஓட்டுப் பதிவு நடந்தது. இந்த தடவையும் அதேபோன்று ஓட்டுப்பதிவு நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 10 லட்சத்து 18 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்க முதல் கட்டமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச் சாவடி எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை கூடுதலாக தேவைப்படும். எனவே ரூ.1,900 கோடியில் புதிய மின்னணு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் மின்னணு எந்திரங்கள் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில் இந்த தடவை கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியும் என்று தேர்தல் ஆணையர்கள் கருதுகிறார்கள்.
இது தவிர சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
- வருவாய்த்துறையின் கண்காணிப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது.
- ராமநாதபுரம் கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையில் 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு அதில் உள்ள 2007-ம் ஆண்டின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் தெரிவிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2007 ம் ஆண்டு உள்ள மின்னணு எந்திரங்களான 771 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 310 கட்டுப்பாட்டு கருவி என மொத்தம் 1081 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருவாய்த் துறையின் கண்காணிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கணபதி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்