என் மலர்
நீங்கள் தேடியது "பனை மரங்கள்"
- தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது.
- ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.
செய்துங்கநல்லூர்:
பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். இந்த பனைமரம் இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென்மாவட் டங்களில் தான் அதிகமாக பனைமரங்கள் காணப்படு கிறது.
வெகுவாக குறைந்தது
ஒருக்காலத்தில் தாமிரபரணி இருகரையிலும கோடிகணக்கில் பனை மரங்கள் இருந்தன. இங்கு ஒவ்வொரு ஊரிலும் பனைத்தொழில் அதிகமாக நடந்தது. பனைத்தொழிலாளிகளும் அதிகமாக வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடத்தில் பனைத் தொழில் வெகுவாக குறைந்தது. இங்கிருந்த பனை மரங்கள் சுமார் 80 சதவிகிதம் குறைந்துவிட்டது.
இதில் தப்பி தவறி ஆதிச்சநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.
தற்போது பனை மரங்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனை மரங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு அதற்கான ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 கோடி பனைமர விதைகள்
இது மனதுக்கு ஆறுதலை தந்து வந்தது. இதை தவிர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 1 கோடி பனைமர விதைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடப்பட்டு வரு கிறது. ஆனாலும் மரங் களை அழிக்க செயற்கை யோடு இயற்கையும் போட்டிப் போடுகிறது. தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் அடிக்கும் காற்றில் ஆங்காங்கே வருடம் தோறும் மரங்கள் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி விட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்று வட்டாரப்பகுதி களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் காரணமாக இந்த தீ விபத்துகள் அனைத்தும் பெரிய அளவில் மரங்களை பாதித்துள்ளது. குறிப்பாக பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.
மரங்கள் கணக்கெடுப்பு
கடந்த 1-ந் தேதி ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள கரை மற்றும் உள்பகுதியில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் தனி யாருக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து சேதமானது. தீ பிடித்த மறுநாள் இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை யினர் ஆய்வு மேற்கொண்டு தீயில் எரிந்த மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.
இந்த மரங்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித் துறையினருக்கு சொந்தமானது. ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள எந்த மரங்களையும் பராமரிப் பதில்லை.
எரிந்த பனைமரங்களை சுற்றி ஏராளமான காய்ந்த பனை ஓலைகள் கிடந்த காரணத்தி னால் தான் இந்த தீ விபத்து மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது.
இந்த மரங்களை பொதுப் பணித்துறையினர் பராமரித்து வைத்திருந்தால் அதிகமான பனை மரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தாமிர பரணிக்கரையில் உள்ள பனைமரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மரங்களையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
துளிர்விடத் தொடங்கியது
இதற்கிடையில் 2 வாரத்திற்கும் மேல் ஆன காரணத்தினால் தீயில் எரிந்த பனைமரங்களில் பெரும்பாலான பனை மரங்கள் குருத்தோலை விடத்தொடங்கி உள்ளது. இதைக்கண்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது:-
பனை மரங்கள் ஒரு முறை தீயில் எரிந்தால் அதன்பின்னர் அதை வளர்ப்பது மிகவும் கடினம். ஆனால் தாமிரபரணிக் கரையில் நீர் படுகையில் இருந்த காரணத்தினால் தற்போது இந்த மரங்கள் அனைத்தும் துளிர் விடத்தொடங்கி உள்ளன.
எனவே இந்த எரிந்த மரங்களில் உள்ள ஓலைகள், நுங்குகள் என அனைத்தை யும் அகற்றி அனைத்து பனை மரங்களையும் முறை யாக பராமரித்து வருடம் தோறும் இந்த பனைமரங்க ளில் உள்ள காய்ந்த ஓலைகளை அகற்றினாலே காற்றுக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே பொதுப்பணித் துறையினர் இந்த வேலைகளை முறை யாக செய்ய வேண்டும்.
தாமிரபரணி ஆற்றுப்படு கையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. இந்த பனைமரங்களில் வருடம் தோறும் ஏற்படும் தீ விபத்துக்களில் பனை மரங்கள் எரிந்து சேதமாகும் நிலை தொடர்ந்து வருகிறது. வருடம்தோறும் இந்த பனை மரங்களை பராமரித்து வைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாது.
எனவே இந்த மரங்களை பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.
- அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள 2 மரங்களை வெட்ட முற்படும்போது இது பற்றி தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், அவற்றை தடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்.
பின்னர் போச்சம்பள்ளி வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இயற்கை தந்த உன்னதமாகவும், மனித வாழ்க்கையில் அங்கமாகவும் விளங்கும் பனை மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பனை மரங்களை வெட்ட தடை செய்ய கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பனை மரங்கள் வெட்ட தடை விதித்தது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.
இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் பனை மரங்கள் வெட்டப்படுவது சகஜமாக நிலவி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெட்டப்படும் பனை மரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன.
- வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
திருப்பூர்:
பல்லடம் அடுத்த, மாதப்பூரை சேர்ந்தவர் வடிவேல், (42)விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே, 80 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள் இருந்தன. இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே வழித்தட பிரச்னையை தொடர்ந்து, 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன. இது குறித்து வடிவேல் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வடிவேல் மற்றும் இவரது உறவினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 'மண்ணைக் காக்கும் பனை மரங்களை அழிக்காதே', 'பனை மரத்துக்கு அஞ்சலி' என்பது உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
பொதுமக்கள் கூறுகையில், '80 ஆண்டுகளாக இருந்த பனை மரங்களை, வழித்தட பிரச்னைக்காக வெட்டி வீழ்த்தியுள்ளனர். இன்றைய சூழலில், பெற்ற குழந்தைகள் போல் மரங்களை வளர்க்க வேண்டியுள்ளது. வெட்ட ப்பட்ட பனை மரங்களுக்கு இணையாக மரங்கள் நட வேண்டும். மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறதுஸ என்றனர்.
- நில உரிமை தாரர் ஒருவர் அவருடைய நிலத்தை சீர்படுத்தும் பணியை செய்துள்ளார்.
- பனை மரங்களை அனுமதி பெறாமல் வேரோடு பிடுங்கி சாய்த்ததாக கூறப்படுகிறது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெங்களாபுரம் பகுதியில் இருந்து ஏலகிரி செல்லும் சாலையில் செல்லியம்மன் கோவில் அருகே தனியார் பட்டா நில உரிமை தாரர் ஒருவர் அவருடைய நிலத்தை சீர்படுத்தும் பணியை செய்துள்ளார். அப்பொழுது சாரையோரம் இருந்ததாக கூறப்பட்ட 4 -க்கும் மேற்பட்ட பனை மரங்களை அனுமதி பெறாமல் ஜே.சி.பி இயந்திரங்கள் வைத்து வேரோடு பிடுங்கி சாய்த்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் குறித்தும், மேலும் நிலத்தின் பின்புறம் குட்டை பகுதி கறைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் கூறிவரும் நிலையில் அதனையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
- துணை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குமார் தலைமை தாங்கி, ெபாதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.
இதில் பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் அளித்த மனுவில், எனது நிலத்தில் 6 பனை மரங்கள் இருந்தன. இந்நிலையில் சிலர் அந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பனை மரங்களை வெட்டக்கூடாது என்று அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அதை மீறி பனை மரங்களை வெட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
- உடன்குடி பகுதிகளில் பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் பனை மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து ஜே.ஜே.நகர் வழியாக திருச்செந்தூர் செல்லும் மெயின் ரோட்டின் கரையில் பல இடங்களில் சின்ன சின்ன பனை மரங்கள் வெட்டப்பட்டு கிடக்கின்றன. இவ்வாறு வெட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசுபனை மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும், விவசாயத்தை விருத்தி செய்ய வேண்டும், பனைமரம் வளர்ப்பதால் 100 வகையில் மக்களுக்கு பயன்தரும் என்பதை விளக்கி பனைமரங்களை வளர்க்க விழிப்புணர்வு பிரசாரம் செய்து, பனைமரம் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் பனை மரங்களை ரோட்டு ஒரமாகவெட்டி போட்டிருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்று பலர் கூறுகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பனை மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடந்தது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பனை மரங்கள், தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக பயண குழுவினர் தெரிவித்தனர்.
ராமநாதபுரம்
தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் விழுப்புரத்தில் பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி 38 நாட்கள் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், வைஷ்ணவி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் 34-வது நாளான நேற்று ராமநாதபுரம் வந்தனர். இவர்களை த.மு.மு.க., மாநில செயலாளர் சலிமுல்லாகான் ஆலோசனையின் பேரில், நகர் தலைவர் முகமது அமீன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து தொண்டி வழியாக புதுக்கோட்டை, திருச்சி சென்று சென்னையில் சைக்கிள் ஊர்வலத்தை நிறைவு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பனை மரங்கள், அதனை சார்ந்து உள்ள தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக பயண குழுவினர் தெரிவித்தனர்.