search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனைச்சாவடி"

    • தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்தியூர்:

    கர்நாடகா மாநுலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரவு வதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி கர்நாட கத்தையொட்டி உள்ள தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என தமிழக சுகாதார துறை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை சோதனை ச்சாவடி மற்றும் பர்கூர் சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா மாநிலம் மைசூருக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த வழியாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் வருபவர்களும் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சரக்கு வாகனங்கள் இந்த வழியாக அதிகளவில் சென்று வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தமிழக சுகாதார த்துறை கர்நாடகா எல்லை பகுதிகளில் சோதனைக்கு பிறகு அனுமதிக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் கர்கே கண்டி செக் போஸ்ட் அருகே அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவி னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    அந்த பகுதியில் சுகாதார துறையினர் வாகனங்களில் வருபவர்களிடம் காய்சல், இருமல் மற்றும் நோய் தென்படும் அறிகுறிகள் இருந்தால் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வரட்டுபள்ளம் சோதனச்சாவடியிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத் துறையினர் சோதனை செய்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    இதே போல் சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரி, தாளவாடி, காரப்பள்ளம், மற்றும் புளிஞ்சூர் சோதனைச் சாவடிகளிலும் போலீசார் மற்றும் சுகதார துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அவர்கள் அந்த வழியாக வரும் சரக்கு வாகனம், பஸ், லாரி மற்றும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர்களிடம் விசாரணை நடத்திய பின்பே அனுப்பி வைக்கின்றனர்.

    காய்ச்சல் உள்ளிட்ட நோய் உபாதைகள் உள்ளதா என சோதனை செய்த பிறகே மருத்துவ குழுவினர் வாகன ஓட்டிகளை அனுமதிக்கின்றனர்.

    • சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், கவியருவி, சின்னகல்லார் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    அப்போது அந்த வாகனங்கள் ஆழியார் சோதனைச்சாவடி மற்றும் டாப்சிலிப் வழித்தடத்தில் உள்ள சேத்துமடை சோதனைச்சாவடி ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சுற்றுலாப் பயணிகள் போல ஒருசிலர் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களில் கொண்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின்பேரில் வனச்சரகர் ஞானமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ஆழியார் சோதனைச் சாவடியை கடந்து கவியருவி, வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் வனத்துறையின் பைரவா மோப்பநாய் மூலம் சுற்றுலா வாகனங்களில் ஏதேனும் போதைப் பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஆழியார் சோதனைச்சாவடி வழியாக கவியருவி, வால்பாறை மட்டுமின்றி அட்டக்கட்டி, சின்னகல்லார், சோலையார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். எனவே இந்த வழியாக செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே போதைப்பொருட்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்கும் வகையில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்களில் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

    மேலும் வனப் பகுதிகளுக்குள் எவரேனும் அத்துமீறி செல்கின்றனரா என்பதையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவை:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.

    மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
    • பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் உள்ளது. இந்த 2 எல்லைகளிலும் மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளன. நடுப்புணி, வடக்கு காடு, ஜமீன் காளியாபுரம், கோபாலபுரம், வேலந்தாவளம், வீரப்ப கவுண்டனூர், வாளையார், செம்மனாம்பதி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 14 சோதனைச்சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் தேஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தமிழகம் - கேரள மாநில எல்லையாக உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை மேற்கொண்டு பணம், மதுபானங்கள், போதைப்பொருட்கள், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்வது.

    சோதனைச்சாவடிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான சோதனைச்சாவடிகளை கண்டறிய வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டும்.

    மதுபானங்கள் கொண்டு செல்வதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், வெளிநாட்டு மதுவகைகள் இரு மாநிலங்களுக்கு இடையே நடமாட்டத்தை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் இருந்து பஸ்கள் செல்லவில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அம்மாநில அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த சட்டத்தில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் இன்று கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா வருகை தர உள்ளார். அவரது வருகைக்கு கண்டனம் தெரிவித்து இடுக்கி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் முழு வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று காலை முதல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. ஆட்டோ, வாகனங்கள் இயக்கப்படாததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    தமிழகத்தின் எல்லைப் பகுதியான போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் அனைத்து வாகனங்களும் போடி முந்தல் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டன.

    இதனால் கேரள தேயிலை மற்றும் ஏலத்தோட்டத்திற்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு தமிழகத்திற்கு உள்ளே திருப்பி விடப்பட்டது.

    அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் காய்கறி வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் தேனி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குமுளி, கம்பம் மெட்டு சோதனைச்சாவடியிலும் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் இருந்து பஸ்கள் செல்லவில்லை.

    • போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
    • மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

    கோவை

    குடியரசு தின விழா நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெறும் வ.உ.சி. மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபா ட்டுத் தலங்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலைய ங்கள் விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறா ர்கள் என கேட்டறிந்தார். மேலும் ரெயில் நிலைய த்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

    கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மத்திய ரெயில் நிலையம், போத்தனூர், சிங்கா நல்லூர், வடகோவை ரெயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோத னை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க ப்படுகிறார்கள். பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவித சுணக்கம் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பார்சல்கள் அனைத்தும் திறந்து பார்த்த பின்னர் தான் அனுப்பு அறிவுறு த்தப்பட்டுள்ளது. குடியரசு தினம் முடியும் வரை இந்த நடைமுறைகள் இருக்கும்.பாதுகாப்பு தொடர்பா ன வழக்குகளில் சம்மந்தப்ப ட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விபரங்களை சேகரிக்காத லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகர முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.

    இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.

    மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கோவை மற்றும் பொள்ளாச்சி தாலுகாவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல்சரக பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை டி.எஸ். பி., தேன்மொழிவேல் தலைமையில் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் இரவு பகலாக வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் தளி காவல் சரக பகுதியில் பள்ளபாளையம் அருகே உடுமலை- மூணாறு சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாகனங்களை தணிக்கை செய்தும் அதில் செல்கின்ற நபர்கள் குறித்த விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.

    • ஏற்காடு சோதனைச்சாவடி வன ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
    • ஏற்காடு அடிவார பகுதியில் பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் இருந்து முறையான அனுமதி பெறாமல் தனியார் எஸ்டேட்களில் இருந்து பல வகை மரங்களை வெட்டி கடத்துவதாக புகார்கள் எழுந்தது. மலைப் பாதை வழியே மர லோடு ஏற்றி வரும் லாரிகளை சோதனையிட அடிவாரப்பகுதியில் வனத்து றையின் சோதனைச்சாவடி இருக்கிறது.

    இங்கு பணியில் இருக்கும் வன ஊழியர்கள் சரியான முறையில் கண்காணிக்காமல் மரலோடு லாரிகளை விட்டு வந்தததாக கூறப்படுகிறது.

    இது பற்றி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ஏற்காடு அடிவார சோதனைசாவடியில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் புகழேந்தியை அஸ்தம்பட்டி சந்தன மர குடோனுக்கு அதிரடியாக இடமாற்றி உத்தரவிட்டுள்ளார். அேதபோல் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்தில் பணியாற்றி வந்த வனக் காப்பாளர் அசோகனை ஏற்காடு சோதனைசாவடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

    ×