search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருது வழங்கும் விழா"

    • ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி பிசிசிஐ கௌரவித்து வருகின்றது.
    • கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை போட்டிகளுக்குத் தயார் செய்வது மட்டும் இல்லாமல் வீரர்களை ஊக்குவிக்கும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றது. இதில் ஆண்டு தோறும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தினால் வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. தற்போது அவை அனைத்திற்கும் சேர்த்து மொத்தமாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ வழங்கியுள்ளது.

    மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த சர்வதேச அறிமுக வீராங்கனைக்கான விருது:

    1. பிரியா புனியா : 2019 -20

    2. சபாலி வர்மா : 2020 - 21

    3. சபினெனி மேக்னா : 2021 - 21

    4. தேவிகா வைத்யா : 2022 23

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைக்கான விருது:

    1. பூனம் யாதவ் : 2019 -20

    2. ஜூலன் கோஸ்வாமி : 2020 -21

    3. ராஜேஸ்வரி கைக்வாட் : 2021 - 22

    4. தேவிகா வைத்யா : 2022 -23

    மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டரில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைக்கான விருது:

    1. பூனம் ரௌட் : 2019 - 20

    2. மித்தாலி ராஜ் : 2020 - 21

    3. ஹர்மன்ப்ரீத் கௌர் : 2021 - 22

    4. ஜெமிமா ரோட்ரிக்ஸ் : 2022 - 23

    மகளிர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட வருடத்தின் சிறந்த வீராங்கனை:

    1. தீப்தி சர்மா : 2019 - 20

    2. தீப்தி சர்மா : 2020 - 21

    3. ஸ்மிருதி மந்தனா : 2021 - 22

    4. ஸ்மிருதி மந்தனா : 2022 - 23

    சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது:

    1. மயங்க அகர்வால் : 2019 - 20

    2. அச்சர் படேல் : 2020 - 21

    3. ஸ்ரேயாஸ் ஐயர் : 2021 - 22

    4. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 2022 - 23

    சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது:

    1. முகமது ஷமி : 2019 - 20

    2. ரவிச்சந்திரன் அஸ்வின் : 2020 - 21

    3. ஜஸ்பிரித் பும்ரா : 2021 - 22

    4. சுப்மன் கில் : 2022 - 2023

    திலிப் சர்தேசாய் விருது:

    1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் : ரவிச்சந்திரன் அஸ்வின், 2022 - 23 (இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்)

    2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் : யசஸ்வி ஜெய்ஸ்வால், 2022 - 23 (இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்)

    சிகே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது:

    1. ரவி சாஸ்திரி மற்றும் பரூக் என்ஜினீயர்

    இந்த விழாவில் பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இருந்து விருதுகளை வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே தொகுத்து வழங்கிய நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முகமது சிராஜ் போன்ற அனைத்து வீரர்களும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரும் பங்கேற்றார்கள். 

    • கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
    • அதன் பிறகு இந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதே போன்று உள்ளூர் தொடர்களான ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, கூச் பெஹார் டிராபி என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது.

    கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஐதராபாத்தில் பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், இந்திய கிரிக்கெட் அணியினர், இந்திய மகளிர் அணியினர், ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், கிரிக்கெட் வீரர்களின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பை அளித்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த சர்வதேச அறிமுக வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 

    2019 - 20-ம் ஆண்டுகளில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது மாயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.

    2019 - 21-ம் ஆண்டுகளில் சிறந்த சர்வதேச அறிமுக வீரர் - அக்ஷர் படேல் (டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் விக்கெட்)

    2021 - 22: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் - ஷ்ரேயாஸ் ஐயர் (105 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)

    2022 - 23: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (171 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)

    • இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.
    • விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் என்னும் விருது 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளுடன் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோருக்கு பாராட்டுப் பட்டயம், நினைவு கேடயம் ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி என்னும் விருது வழங்கப்படுகிறது. இவ்விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.

    விழாவிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர்கள் சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அம்பேத்கர் சுடர் விருது சி.பி.ஐ.எம்.எல்-விடுதலை பொதுச்செயலாளர் பட்டாச்சார்யாவுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் ராஜாவுக்கும், காமராஜர் கதிர் விருது தமிழக சபாநாயகர் அப்பாவுக்கும் வழங்கப்படுகிறது.

    மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமிற்கு அயோத்தி தாசன் விருது, காயிதே மில்லத் பிறை விருது பெங்களூரு சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் மோகன் கோபாலுக்கும், செம்மொழி ஞாயிறு விருது தமிழறிஞர் தாயம்மாள் அறவாணனுக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார்.

    விருது வழங்கும் விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பஸ், கார், வேன்களில் வருகிறார்கள்.

    எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் உஞ்சை அரசன், வன்னிய அரசு, பாவரசு, பாலசிங்கம், தயாளன், பாவலன், வீர.ராஜேந்திரன், சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, வி.கோ.ஆதவன், அம்பேத்வளவன் விசங்கர், கவுன்சிலர்கள் யாழினி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
    • சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கு விழா நேற்று நடைபெற்றது. திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். விழாவில் அம்மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

    கோடைக்காலம் தொடங்கிய நிலையில், நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.

    நவி மும்பையில் உள்ள ஒரு பெரிய மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடந்தது.

    இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே கூறுகையில், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    மருத்துவர்களிடமிருந்து பெறப்பட்ட விளக்கத்தின்படி, இன்று (நேற்று) 7-8 பேர் இறந்துள்ளனர். சுமார் 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது வெயிலால் ஏற்பட்ட பாதிப்பு. முதன்மை சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.

    • சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    முத்தூர் :

    முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு ஆற்றல் அறக்கட்டளையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், முத்தூர், செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி குழு தலைவர் பி.அய்யாத்துரை தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் செயலாளர் எம்.கே.பழனிசாமி, பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.பி.சரவணன் வரவேற்று பேசினார்.

    விழாவில் ஈரோடு ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் தற்போதைய 2022-2023-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக தேர்வில் முதன்மையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலை, இலக்கிய துறையில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் என மொத்தம் 60 மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது, பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு கல்வியில் முக்கியமான காலகட்டம் கல்லூரி படிப்பு ஆகும். மேலும் மாணவர்கள் கல்வியில் முழுமையான கவனம் செலுத்தி சிந்தனையை சிதறவிடாமல் பட்டப்படிப்பு பயில வேண்டும். ஆற்றல் அறக்கட்டளையின் மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் கட்டிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் கல்வியே சிறந்த செல்வம் என கருதி நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டில் சிறப்பான எதிர்காலத்துடன் வாழ்வதற்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் துணை செயலாளர் வி.ஜி.ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை தங்கமணி நன்றி கூறினார்.

    • ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
    • விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் மற்றும் சிறந்த முதல்வர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பார்த்தசாரதி தலைமை வகித்தார். கோவை கற்பகம் பல்கலைக்கழக சிறப்பு பயிற்றுநர் ஆதிபாண்டியன், பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் முதல்வர்களுக்கான விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷன் பேசினார். நிகழ்ழ்சியில் மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள், கப்பத்தொரை ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி செயலாளர் மற்றும் இயக்குநர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
    • அறிவியல் அருங்காட்சியத்தில் நடந்தது.

    கோவை,

    உலக பிசியோதெரபி தினத்தையொட்டி தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் விருது வழங்கும் விழா கோவை மண்டல அளவிலான அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியத்தில் நடந்தது.

    விழாவில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதில் சென்னையை சேர்ந்த டாக்டர்.ஜெகதீசனுக்கு அப்துல்கலாம் விருது, டாக்டர்.ரகுநாத்திற்கு இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

    இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த டாக்டர்.ஆல்டரின் பிக்னாவிற்கு சிறந்த பிஸியோதெரபி மருத்துவர் விருதும், பிசியோதெரபி கல்லூரி முதல்வர்களுக்கு அங்கீகார விருதுகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இதில், சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் டாக்டர்.ராஜேஸ்கண்ணா நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் டாக்டர்.சுகன்யா தேவி, டாக்டர்.மஞ்சுளா ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனை செய்தவர்களையே போலீசார் கைது செய்துள்ளனர். கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மக்கள் அமைதியை விரும்புகின்றனர். பதட்ட நிலையை ஏற்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், துணைமேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், தளபதி முருகேசன், ரவி, டிஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.பி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×