என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் அதிர்ச்சி"
- புதிதாக கட்டப்பட்டு ஒரு மாதமே ஆன பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- கலெக்டரின் உத்தரவுப்படி உடனடியாக சீரமைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி பேருந்து நிலையம் அருகே தரைப்பா லம் இருந்தது. அந்த பாலமானது சேதம் அடைந்த காரணத்தினாலும், பாலத்திற்கு அடி யில் செல்லக்கூடிய கழிவுநீர் தேங்கி நின்றதன் காரணமாகவும், போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குறுகலாக இருந்ததன் காரணமாகவும் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
இந்த நிலையில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கி கடந்த 10 நாட்க ளுக்கு முன்பு பாலப்பணிகள் முழுவதும் நிறைவடைந்து. பாலத்தின் இருபுறமும் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட்டு பேருந்துகள், ஆட்டோக்கள், வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் வந்து செல் கின்றன.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென பாலத்தில் பள்ளம் விழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாலம் கட்டப் பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது மீண் டும் பள்ளம் விழுந்துள்ள தால் தரமற்ற முறையிலேயே பாலம் கட்டியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதற்கு முன்பு பாலத்திற்கு கம்பிகள் கட் டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்ற போது தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த னர். அந்த சமயம் எதிர்பா ராத விதமாக பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவச மாக பணியாளர்கள் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
பாலத்தில் பள்ளம் விழுந் துள்ளதன் காரணமாக பேருந்துகள் கூமாபட்டி பேருந்து நிலையத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் தற் போது இரண்டாவது முறை யாக இந்த விபத்து ஏற்பட் டுள்ளதால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஜெயசீ லன், உடனடியாக பள் ளத்தை சரி செய்வதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பள்ளம் சரி செய் யப்பட்டது.
- சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது.
- கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கியாஸ் ஏஜென்சி உள்ளது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் கியாஸ் சிலிண்டர்கள் இரும்புலியூர், கங்கை தெருவில் அமைந்து உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள காலி மைதானத்தில் இறக்கிவைத்து சிறிய வாகனங்களில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
வழக்கம்போல் வாகனங்களில் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றி, இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தூக்கி வீசப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன் அருகில் 20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த மற்ற கியாஸ் சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கியாஸ்சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கியாஸ் சிலிண்டரை தரையில் இறக்கி வைத்த போது வெயிலின் தாக்கத்தில் அது வெடித்ததாக ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
கியாஸ்சிலிண்டரை கொண்டு செல்லும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து சேலையூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களில் கருகியது.
தருமபுரி,
தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் அளவில் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து அறுபது ரூபாய்க்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, உழவர் சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கும், வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.100 முதல் 130 வரை விற்பனையாகிறது.
தக்காளி சாகுபடி குறைந்ததே விலை உயர்வுக்கான முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பேகாரஅள்ளி, வெள்ளிச்சந்தை உள்ளிட்டப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்வது வழக்கம்.
இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளி பாலக்கோடு பகுதியில் அமைந்துள்ள பிரத்யேக தக்காளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி பழங்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
தக்காளி விலை உயர்வுக்கான காரணம் குறித்து தருமபுரி மாவட்டம், மத்தான் கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் என்பவரிடம் கேட்டபோது, தக்காளி விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், செடிகளில் போதுமான அளவு காய்ப்பு திறன் இல்லாததால் குறைந்த அளவிலேயே தக்காளி மகசூல் கிடைக்கின்றது.
இந்த ஆண்டு கோடை வெயில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கியதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் வெயிலின் தாக்கம் காரணமாக, விவசாய நிலங்களில் கருகியது.
இதனால் தக்காளி நடவு செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதன் காரணமாகத் தான் தக்காளி நடவு செய்ய விவசாயிகள் முன் வர வில்லை. சாகுபடி பரப்பு குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்து உள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது வெயிலில் இருந்து தக்காளி செடிகளை காப்பாற்ற மாற்று யோசனை செய்து தற்போது தக்காளியை அறுவடை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் கடந்த மார்ச் மாதத்தில் தக்காளி நடவு செய்தபோது வெயில் காரணமாக வயலில் கருகியது.
அதன் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியிலிருந்து 12,000 எண்ணிக்கையிலான தக்காளி செடிகளை வாங்கி வந்து நடவு செய்தேன்.
வெயிலின் காரணமாக தக்காளிச் செடிகள் காய தொடங்கியதை அடுத்து கால்நடைத் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் மக்காச்சோள பயிர்களை விதைத்ததால் வேகமாக வளர்ந்து தக்காளி செடிகளுக்கு நிழல் ஏற்படுத்தும் என எண்ணி மக்காசோள பயிர்களை இடையிடையே விதைத்ததால் அது குறுகிய காலத்தில் வளர்ந்து நிழல் கொடுத்ததால் அருகில் இருந்த தக்காளிச் செடிகள் காயாமல் நன்றாக வளர்ந்து என தெரிவித்தார்.
மேலும், தற்போது செடிகளில் பழங்கள் பழுக்கத் தொடங்கியதை அடுத்து நிழலுக்காக நடப்பட்ட சோள தட்டுகளை அறுத்து அகற்றியதாகவும் கூறினார்.
தக்காளி விலை இன்னும் இரண்டு மாதத்திற்கு குறையாது என்றும், தற்பொழுது மழைக்காலம் தொடங்கியதால் விவசாயிகள் இனி வரும் காலங்களில் தக்காளி நடவு செய்து அதன் மூலம் கிடைக்கும் பழங்களால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் அவருடைய தனி திறமையால் தக்காளி செடிகளை காப்பாற்றிய சேகர், தற்போது லாபத்தை அள்ளி வருகிறார்.
- மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
- தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் பகுதியில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் மின் ஊழியர் யுவராஜ்க்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மின் ஊழியர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து டிரான்ஸ்பார்மர் மீது ஏறி மின்தடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாரத விதமாக திடீரென்று மின் ஊழியர் யுவராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- வாக்குவாதம் முற்றவே இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணா புரத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை உள்ளது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே அங்கு சென்று மோதலை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ் அப் மூலம் பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார். மேலும் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த அந்த மாணவனை காதலித்து வந்த மாணவி, எப்படி நான் காதலிக்கும் மாணவனுடன் சாட்டிங்கில் ஈடுபடலாம் என தட்டிக்கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் இந்த பிரச்சினை தொடர்பாக பேசி தீர்த்து கொள்வதற்காக 2 மாணவிகளும் தங்களுடன் படிக்கும் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சுமூக முடிவு ஏற்படாமல் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் உடனே இதனை பார்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் இரு தரப்பு மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார். காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம்.
- நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அங்கு வாரம் ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் பொருத்தியுள்ள பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை பிடித்தனர். இந்த நிலையில், குடிநீரில் புழுக்கள் நிறைந்தும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் 7 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியாது. குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம். இப்போது குடிநீருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- ஆலையில் தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் செல்கிறது,
- நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழும் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது,
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடி-தருமபுரி மெயின் ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை சுமார் 40 ஏக்கர் பரப்பில் மாநில அளவில் மிகப்பெரிய ஆலையாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை ஒரு லட்சத்து 9,715 சதுர அடி பரப்பிலும், நிரந்தர பணியாளர்கள் 89 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 800-க்கு மேற்பட்டவர்களும் வேலை செய்து வருகின்றனர். அதிநவீன இயந்திரங்களை கொண்டு இயக்கப்படுகின்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்
இந்த ஆலையில் தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் செல்கிறது, இந்த கால்வாயில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதக் கழிவுகளை கழிவு நீர் தொட்டியில் சேகரிக்காமல் நேரடியாக திறந்து விடப்படுவதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டுகின்றனர்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்:-
இந்த ஆலையில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு உள்ளே தங்கி வேலை செய்வதற்கான குடியிருப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படுவதில்லை. குறிப்பாக கழிப்பிட வசதிக்கு கழிப்பிடங்கள் பெருமளவு கட்டிக் கொடுக்கப்படவில்லை.
இவர்கள் சில கழிப்பிடங்கள் சுற்றுச்சூழலை ஒட்டி பேரூராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயை ஒட்டி தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால் நேரடியாக மனித கழிவுகள் கால்வாயில் கலந்து தண்ணீருடன் ஊருக்குள் செல்கின்றது.
இந்த கழிவுகள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மிதந்து செல்கிறது. இதனால் இந்த நெடுஞ்சாலையை ஒட்டி வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழும் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது, சுவாச பிரச்சனையும் குமட்டல், வாந்தி போன்ற தொல்லைகளால் இப்பகுதி மக்களுக்கு தினமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகமும், மாவட்டம் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலைக்கு சென்று ஆய்வு செய்து ஆலையில் உள்ள தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் கழிப்பிடங்கள் வசதிகள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்:-
ஆலை நிர்வாகம் மனிதாபிமானமற்ற, அருவருக்கத்தக்க வகையில் மனிதக் கழிவுகளை நேரடியாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் திறந்து விட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கதக்க செயல். உடனே மாவட்ட நிர்வாகம் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றில் தொடர் மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று காலை 35 வயது வாலிபர் ஒருவர் ஆற்றில் தண்ணீருக்குள் மூழ்கி கொண்டிருந்ததை சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சோதனை சாவடி போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவா தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடினார்கள்.
அப்போது ஆழமான பகுதியில் வாலிபர் மூழ்கி இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் இறந்த வாலிபர் யார்? என்ன காரணத்திற்காக ஆற்றில் இறங்கினார்? என்பது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்