என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது நுழைவுத்தேர்வு"

    • எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.
    • மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

    மும்பை:

    மராட்டியத்தில் என்ஜினீயரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம், பி.எட் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் எம்.பி.ஏ. பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை சமீபத்தில் ஒரு கும்பல் தொடர்பு கொண்டு பேசியது. அந்த கும்பல் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதாகவும், பிரபல கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாகவும் கூறி மாணவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கேட்டனர்.

    இதுகுறித்து மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அமைக்கப்பட்டு இருந்த மாணவர்களுக்கான உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியை சேர்ந்த கும்பல் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவுகளை திருடி பிரபல கல்லூரிகளில் சீட்டு வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி தொடர்பாக டெல்லியை சேர்ந்த அபிஷேக் ஸ்ரீவட்சாவ், சேத்தன் குமார், அம்பிரிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • பொது நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் ஷத்ரியா வித்யாசாலா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு பொது சட்ட நுழைவுத்தேர்விற்கு விண் ணப்பித்துள்ள மாணவர்க ளுக்கான சிறப்பு பயிற்சி முகாமினை மாவட்ட கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, மாதிரி வினாக்க ளுக்கு தீர்வு அளித்து, மாண வர்களுக்கு விளக்கி பாடம் கற்பித்தார்.

    பின்னர், அங்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளிடம் தேர்விற்கு தயார்படுத்துவது, தேர்வில் பாடப்பிரிவு வாரியாக கேள்விகள், அதற்குரிய மதிப்பெண்கள், எளிதான, நடுத்தர, கடினமான கேள்விகள் என தரம் பிரித்து அணு கும் முறைகள், எளிதாக கேள்விக்கான பதில்களை மனதில் பதிய வைத்தல் உள்ளிட்டவை குறித்து கலெக்டர் எடுத்துரைத்து ஆலோசனை மற்றும் அறிவு ரைகளை வழங்கினார்.

    மேலும், இந்த போட்டித் தேர்வில் பெரும்பாலும் வரும் கேள்விகளுக்கு குறைந்தபட்ச புரிதலும், தொடர் பயிற்சியும், கடந் தாண்டு வினாத்தாள்களை ஆராய்ந்தும் தங்களை தயார்படுத்திக் கொண்டால், தேர்வில் வெற்றி பெறலாம் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திரா, பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர், உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் என்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியிடப்படது.

    சேலம்:

    நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகம், மாநில பல்கலைக்கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் என்ற நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியிடப்படது.

    சேலம், நாமக்கல்...

    இந்த நிலையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் என்ற பல்கலைக்கழக பொதுநுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட மாவட்டங்களில் உள்ள இளநிலை பட்டதாரிகள் உள்பட நாடு முழுவதும் 6.07 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர். இதில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் வழங்கப்பட்டு, தரவரிசை பட்டியல் என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து , மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி). அறிவுறுத்தி உள்ளது.

    ×