search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்முறை"

    • பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது.
    • நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும் மார்ச் 13, 14ல், அரசு பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இந்த நிலையில், முதற்கட்டமாக, பிராக்டிக்கல் தேர்வு, மாநிலம் முழுவதும் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும், 198 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில், 17 ஆயிரத்து 810 பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19 ஆயிரத்து 877 பேர் என, மொத்தம், 37 ஆயிரத்து 687 மாணவ, மாணவிகள், மேல்நிலைக்கல்வி அரசு பொதுத்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில், தொடங்கிய செய்முறை தேர்வு,இன்று, நாளை, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். செய்முறை தேர்வுக்காக 147 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர் தலைமையில், புற தேர்வு, அக தேர்வு மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு, செய்முறை தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண்களை அளிப்பார்கள். இந்த மதிப்பெண்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். பிராக்டிக்கல் தேர்வுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் செய்துள்ளனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
    • சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.

    மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.

    செய்முறை தேர்வு தொடங்கியது

    இதனிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.

    இதேபோல் 18,830 மாணவர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

    ஆர்வம்

    செய்முறை தேர்வில் இம் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர். பள்ளி ஆய்வகத்தில் மாணவ- மாணவிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட செய்முறையை உடனுக்குடன் ஆய்வு செய்து காட்டினர்.

    ஒரு சில பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று, தேர்வு முறையாக நடைபெறுகிறதா?, ஆய்வக கூடத்தில் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், செய்முறை தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    அட்டவணை

    இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், மனையியல், ெதாழிற்கல்வி, உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனி அட்டவணைகளில் மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    • 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை பார்வையிட்டனர்.

    திருவாரூர்:

    தமிழக முதலமைச்சரால் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான "வானவில் மன்றம்" தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்து சிந்திக்கும் திறனை ஊக்குவி ப்பதற்கான "வானவில் மன்றம்" தொடக்க விழா மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பூண்டி.கே.கலைவாணன் முன்னி லை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளின் அறிவியல் மனபான்மை யினை மேம்படுத்துவதற்காக முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியே இவ்வானவில் மன்றம் திட்டம். அரசுப்பள்ளி மாண வர்களிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துக்கள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தினை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதே வானவில் மன்றத்தின் நோக்கமாகும்.

    இத்திட்டத்திற்காக அறிவியல் மற்றும் கணிதத்தில் திறன்மிக்க கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்தாளர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பாடத்தில் கடினப்பகுதிகளை எளிய செய்முறைகள் மூலம் பள்ளி ஆசிரியருடன் இணைந்து பல்வேறு செய்முறைகளை செய்துகாட்டி மாணவ ர்களின் கற்றலை மேம்படுத்தி கற்கும் அனுபவத்தை மாணவர்களுக்கு மேம்படு த்துவார்கள்.

    திருவாரூர் மாவட்டத்தில் 349 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையு ள்ள 26 ஆயிரத்து 377 மாணவ செல்வங்கள் பயன்பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்களின் அறிவியல் சார்ந்த செய்முறைகளை பார்வையிட்டனர். இத்திட்ட தொடக்க நிகழ்ச்சியின் ஒன்றாக மாணவியர்களுடன் கலெக்டர், எம்.எல்.ஏ. சேர்ந்து பலூன்களை பறக்க விட்டனர்.

    இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி மாயகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், பள்ளி தலைமையாசிரியர் பூந்தமிழ் பாவை, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    • பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது.
    • பல்வேறு வகையான செய்முறை பயிற்சிகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

    நன்னிலம்:

    நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அலுவலர் (பொ) ஜெகதீசன் தலைமையில் மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ,-மாணவிகளுக்கு பேரிடர் கால விழிப்புணர்வுப் பயிற்சி நடைபெற்றது.

    பேரிடர் காலத்தில் இள வயதினரான மாணவ-மாணவிகள் தங்களையும், தங்களது பெற்றோ ர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அருகில் உள்ள மக்களுக்கு எவ்வாறு தங்களால் இயன்ற உதவியைச் செய்வது. தங்களையும் பாதுகாத்துக் கொண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வது போன்ற பல்வேறு வகையான செய்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்களளுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்தப்பட்டது.

    தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள உபகரணங்களை பேரிடர் காலங்களில் எவ்வாறு உபயோகப்படுத்துவது. தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுப் பயிற்சிகள் நடத்தப்பட்டது.

    மாப்பிள்ளைக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேரிடர்கால விழிப்புணர்வுப் பயிற்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமையில் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகள் செய்முறை அளிக்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒன்றிய அளவில் ஜே.ஆர்.சி ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் ரேவதி ஜே.ஆர்.சி கொடியினை ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தர்ராஜன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜீவ் காந்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது யாசீன், வவ்வாலடி பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

    ஜே.ஆர்.சி யின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் லியாக்கத் அலி திருப்பயத்தங்குடி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர் ஏசுநாதன் ஆகியோர் சுகாதாரம் தொடர்பான அறிவுரைகளை வழங்கினா்.

    திருமருகல் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளை செய்முறை விளக்கத்துடன் செய்து காட்டினர்.

    திருமருகல் வட்டார கல்வி அலுவலர் ரவி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    சிறப்பு விருந்தினர் மூலமாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    கொட்டாரக்குடி கிராமத்தைச் சுற்றிலும் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    முடிவில் பள்ளியின் ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    ×