என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துக்கம்"
- நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
- வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே மறைந்த ஈரான் அதிபர் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று 'இந்தியா' முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
- மகன் இறந்த துக்கத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை.
- மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பெரிய காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 56). விவசாயி. இவருக்கு 2 மகன்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது இளைய மகன் விபத்தில் பலியானர். மகன் இறந்த தூக்கத்தில் தந்தை அன்பழகன் மதுவுக்கு அடிமையானார் தைப்பூச தினமான நேற்று மகனின் நினைவு அவருக்கு மீண்டும் வந்தது. ஒவ்வொரு தைப்பூச தினத்தன்றும் அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு வடலூர் செல்வாயே, இன்று நீ இல்லையே என்று அழுது கொண்டே புலம்பியுள்ளார். இவரது பெரியமகன் மற்றும் மனைவி 2 பேரும் அன்பழகனுக்கு ஆறுதல் கூறினர்.
சிறிது நேரம் கழித்து இவரது மகனும், மனைவியும் வீட்டிலிருந்து வெளியில் சென்றனர். மகன் இறந்த சோகத்தில், நிலத்திற்காக வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்து அன்பழகன் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த மனைவி கணவன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பூவராகவன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஏ.புதூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு இவரது மகன் கதிர்வேல் (45) இவரதுமனைவி நான்குஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால்தனக்கு வாழப்பி டிக்க வில்லை என்று கூறி வந்துள்ளார். மனைவிஇறந்த துக்கத்தில் இருந்த இவர் நேற்று தனது வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டார்.அக்கம் பக்க த்தில் இருந்தவர்கள்இவரைமீட்டு கடலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்குசிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார் இது குறித்து காடாம்புலியூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார்.
- விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதன்பாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ஜெகதீஷ்(வயது 25) . இவரது தாயார் அங்காத்தாள். இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் அங்காத்தாள் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
தாயார் இறந்த துக்கம் தாங்காமல் வேதனையில் இருந்த ஜெகதீஷ் சோகமாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை ஜெகதீஷ் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- கடலூரில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த திருமாணிக்குழியை சேர்ந்தவர் விட்டல் நாதன் (வயது 87). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் காரணமாக முதியவர் விட்டல்நாதன் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அதே பகுதியில் பூச்சி மருந்து குடித்து மயக்க நிலையில் இருந்தார்.
இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று விட்டல்நாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடியிருப்பை சேர்ந்தவர் கமலன் (வயது 63).
இவர் புத்தளம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி மூத்த மனைவியின் தங்கையாகும்.இரண்டாவது மனைவி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அன்று முதல் கமலன் மன வேதனையில் இருந்து வந்தார். இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.இரண்டாவது மனைவி இறந்த சோகத்தை கமலன் அடிக்கடி மூத்த மனைவியிடம் கூறி வேதனை பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் டீக்கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து இவரது மூத்த மனைவி தங்ககனி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கமலன் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
- நீண்ட நேரம் அசைவின்றி இருந்தவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் தாய் இறந்த சில மணி நேரத்தில் மகனும் இறந்த சம்பவம், உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.பட்டுக்கோட்டை நாடிமுத்து நகர், வெங்கடராம அய்யர் நகரை சேர்ந்தவர் டாக்டர் சாம்பமூர்த்தி.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (98).
இவர்களுக்கு 5 மகன்கள். இதில் 4 மகன்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
கடைசி மகனான ஜெயசந்திரன் (68) என்பவருக்கு மட்டும் திருமணமாகாத நிலையில் அவரும், தாய் மீனாட்சியம்மாள் இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
ஜெயச்சந்திரன் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் மீனாட்சியம்மாள் வயது முதிர்வு காரணமாக இறந்து விட்டார்.
இதையடுத்து ஜெயச்ச ந்திரன் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார்.
தாய் இறந்த சோகத்தில் அழுதபடி இருந்த ஜெயச்சந்திரனை உறவினர்கள் ஆறுதல் படுத்தியுள்ளனர்.
பின்னர் காலை 10.30 மணியளவில் ஜெயச்சந்திரனும் இருக்கையில் அமர்ந்திருந்த படியே மாரடைப்பால் இறந்து விட்டார்.
நீண்ட நேரம் அசைவின்றி இருந்த அவரை உறவினர்கள் எழுப்பியபோது அவரும் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் உறவினர்கள் ஒன்றாக கரிக்காடு எரிவாயு மயானத்தில் தகனம் செய்தனர். தாய் இறந்த துக்கம் தாங்காமல், மகனும் இறந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்