search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய் ஸ்ரீ ராம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத நம்பிக்கையைப் புண்படுத்தியதாக சட்டப்பிரிவு 295A-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும்

    இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி உள்ளூர் மசூதி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    அதன்படி அத்துமீறி நுழைந்தது[ சட்டப்பிரிவு 447], பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல்[ சட்டப்பிரிவு 505], மத நம்பிக்கையைப் புண்படுத்தியது [சட்டப்பிரிவு 295A] , மிரட்டல் விடுத்தது உள்ளிட்டவற்றின்கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது பேசிய நீதிபதி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவது என்ன மத நம்பிக்கையை புண்படுத்தும் என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

    இந்த புகாரை அளித்த மனுதாரரே, தாங்கள் வசிக்கும் பகுதியில் இந்து- முஸ்லிம்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது எல்லா செயல்களும் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் சட்டப்பிரிவு 295A இன் கீழ் வராது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கு மேலும் இந்த விவகாரத்தில் அவர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுப்பது சட்டத்தை தவறாக பயன்படுத்தியதாகும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்துள்ளது
    • அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்

    உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக ஹோலி கலர் பொடி தூவி, தண்ணீர் ஊற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில் உள்ள ஹோலி கொண்டாட்டத்தின் போது ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களை எழுப்புகின்றனர்.

    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த சம்பவம் மார்ச் 20 அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனிருத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. மேலும், வீடியோவில் உள்ள மற்றவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • டெல்லியில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்துகொண்டார்
    • வதோதராவில் கெஜ்ரிவாலின் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை பாஜகவினர் கிழித்து எறிந்தனர்.

    வதோதரா:

    விஜயதசமி தினத்தில் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள் புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து கடவுள்களுக்கு எதிராக உறுதிமொழி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினர். அத்துடன், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் கவுதமை நீக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெறும் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் திட்டமிட்டபடி மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கிய அரவிந்த கெஜ்ரிவால், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். இதன்மூலம், தான் இந்து மதத்திற்கு எதிரானவன் இல்லை என்று கூறியிருக்கிறார்.

    மேலும் பாஜகவை சாடிய கெஜ்ரிவால், "அவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். கடவுளைக்கூட அவர்கள் அவமதிக்கிறார்கள்." என்றார்.

    ×