என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டாக்டர் பலி"
- சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்புக்கு பலியாகி வருகின்றனர்.
- டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பால் இறந்தார்.
புதுடெல்லி:
கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்புகள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. சமீப காலங்களில் மாரடைப்புக்கு இளைஞர்கள் அதிக அளவில் பலியாகி வருகின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தலைநகரில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பல்லப்கரில் இருந்து காஷ்மீர் கேட் வரை பயணித்த 26 வயது டாக்டர் மாரடைப்பு அல்லது இதயம் தொடர்பான சிக்கலால் ரயிலில் சரிந்து விழுந்தார்.
திடீரென மயங்கி விழுந்த அவருக்கு மற்றொரு பயணி முதலுதவி சிகிச்சை அளித்தார். டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விசாரணையில், அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் வசித்து வந்த மயங்க கர்க் என்பதும், மகாராஷ்டிராவின் வார்தாவில் எம்.பி.பி.எஸ். படித்து விட்டு தேர்வுக்காக பஞ்ச்குலாவுக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் 26 வயது டாக்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேற்குவங்காளத்தில் பருவமழை தொடங்கிய பிறகு பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
- இந்த ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் பருவமழை தொடங்கிய பிறகு பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மேற்குவங்காள அரசு முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
கொல்கத்தா நகரின் கர்பா பகுதியை சேர்ந்த கண் டாக்டர் தேபோயுதி சட்டோபாத்யாய் (வயது 28) டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பால் மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து உள்ளது.
- திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது
- பலியான குரப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் குரப்பா (வயது 72). இவர் கடப்பாவில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பயின்று வந்தார்.
இவரது மகள் ரவளி. லவ்லி திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு பல் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் குரப்பா கடப்பாவில் இருந்து மகளை பார்ப்பதற்காக நேற்று காலை திருப்பதி வந்தார்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சாமி கோவில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மாலை 4 மணிக்கு தனது மகளுடன் கோவிலுக்கு வந்தார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது மகளுடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார். அப்போது பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
கோவில் வளாகத்தை சுற்றி வந்த பக்தர்கள் அங்குள்ள அரசமரத்து அடியில் தஞ்சம் அடைந்தனர்.
அப்போது 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரம் திடீரென இரண்டாக பிளந்து விழுந்தது. மரத்தின் அடியில் குரப்பா மற்றும் 3 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர்.
இதில் குரப்பாவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மகள் கண்முன்னேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது மகள் கதறி துடித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுபா ரெட்டி முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர், பேபி, நிஹாரிகா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிந்தராஜ சாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து இருந்தனர்.
பலத்த காற்று வீசியபோது கோவில் வளாகத்தில் யானை கொண்டு வரப்பட்டதால் பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இல்லை எனில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். பலியான குரூப்பா குடும்பத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு உள்ளது.
- அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
- எதனால் இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, மே.1-
கோவை போத்தனூர் அருகே நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ராகவேந்திரன் (வயது68). இவரது மகன் பிரித்திவிராஜ் (33). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் அவரது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராகவேந்திரனும் அவரது மனைவியும் மணப்பா றையில் உள்ள அவரது உறவினர் குடும்ப விழாவில் கலந்து கொள்ள சென்றனர். பின்னர் அங்கிருந்து பிரித்தி விராஜை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. உடனே பக்கத்து வீட்டில் உள்ள எழில் குமாருக்கு தொடர்பு கொண்டு, தனது மகனை செல்போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் அவர் எடுக்கவில்லை என்றும், அவரை பார்க்குமாறும் கூறினார்.
அங்கு அவரது வீட்டிற்கு சென்ற எழில், பிரித்தி விராஜ் சுயநினைவின்றி மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதித்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதனால் இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜாஸ்மின் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
- ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்துள்ளனர்.
வால்பாறை
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் 3-வது டிவிசனை சேர்ந்தவர் மதுஅருமராஜ்குமார் (வயது68).
இவர் அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் துணை மேலாளராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஜாஸ்மின்(வயது67). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவருக்கு அங்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாஸ்மின் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த வீட்டினை காலி செய்ய முடிவு செய்தார்.
அதன்படி சம்பவத்தன்று தனது கணவருடன் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியானர். உடனடியாக மனைவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதா க தெரிவித்தார். இதை கேட்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்து ள்ளனர். அது விஷம் என தெரியாமல் அவர் குடித்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நண்பர் ஒருவரின் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
- சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
கோவை
கோவை சாப்பாபா காலனி அருகே உள்ள அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் திலக் விஜயகுமார் (வயது 48). திருமணமாகவில்லை. டாக்டரான இவர் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் உள்ள நண்பர் ஒருவரின் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மது போதையில் இருந்த திலக் விஜயகுமார் மயங்கி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திலக் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்