search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில் இயக்கம்"

    • சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
    • தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

    திருப்பூர்:

    கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரம் - மங்களூர் இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளன.சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தாம்பரம்-மங்களூர் இடையே இந்த சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன.

    ெரயில் எண் (06049) தாம்பரம் - மங்களூர் சிறப்பு ெரயில் வரும் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு மங்களூரை சென்றடையும்.

    ெரயில் எண் (06050) மங்களூர் - தாம்பரம் சிறப்பு ெரயில் மங்களூருவில் இருந்து 7, 14, 21 மற்றும் 28 ம் தேதிகளில் மதியம் 12 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 5 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.நிறுத்தங்கள்: சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், சொரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கண்ணூர், பையனூர் மற்றும் காசர்கோடு வரை செல்லும்.

    • 31-ந் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (எண்: 06073), இயக்கப்பட உள்ளது.
    • அசாம் மாநிலம் ரங்கபா ராவுக்கு 2 நாள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடையும்.

    ஈரோடு, 

    தென்னக ரெயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலம் ரங்கபரா வடக்குப் பகுதிக்கு வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) மற்றும் 31-ந் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (எண்: 06073), இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக அசாம் மாநிலம் ரங்கபா ராவுக்கு 2 நாள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயிலில் 2 முதல் வகுப்பு ஏ.சி பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டி, 14 படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் மறு மார்க்கத்தில் அசாம் மாநிலம் ரங்கபரா வடக்கு பகுதியில் இருந்து ஈரோட்டிற்கு சிறப்பு ரெயில் (எண்: 06074) வருகிற 27ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 3ஆம் தேதி (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் ஆனது ரங்கபராவில் இருந்து 27-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மத்தியானம் 1.15 மணி க்கு ஈரோடு ரெயில் நிலை யத்திற்கு வந்தடையும். 

    • கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
    • மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.

    திருப்பூர்:

    கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் ெரயில் சேவை வருகிற 26ந்தேதி இயக்கப்படவுள்ளதாக சேலம் ெரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ெரயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு- சாய்நகர் ஷீரடி (06903) பாரத் கவுரவ் ெரயில் வருகிற 26-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 11:10 மணிக்கு ஷீரடி சென்றடையும். மறுமார்க்கத்தில் ஷீரடி- கோவை வடக்கு (06904) ெரயில் வருகிற 29-ந் தேதி மதியம் 2:10 மணிக்கு புறப்பட்டு வருகிற 30-ந் தேதி கோவை வடக்கு ரெயில் நிலையத்திற்கு 7:15மணிக்கு வந்தடையும்.

    இந்த ெரயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், தர்மாவரம், குண்டக்கல், மந்தராலயம் சாலை, ராய்ச்சூர், வாடி, சோலாப்பூர், டான்ட் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக ரெயில்வே நிர்வா கம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    சேலம்:

    மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, விஷு பண்டிகைகள் மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

    அதன்படி திருவனந்த புரம்- சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) நாளை (புதன்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) வருகிற 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும் பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவ னந்தபுரம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    • கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர்.
    • மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரெயில் இயக்க வாய்ப்புள்ள தாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    மதுரை-போடி ரெயில் கடந்த மே மாதம் 27-ந்தேதி முதல் தேனி வரை இயக்கப்பட்டு வருகிறது. 15 கி.மீ தூரமுடைய போடி வழித்தடத்தில் தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆகவே போடி வரை ரெயிலை நீட்டித்து இயக்கு வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக அங்கு நியமிக்கப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் நாளை போடிக்கு செல்ல உள்ளனர். இவர்களுடன் மற்ற அலுவலர்களும் செல்கின்றனர். இதற்காக தேனியில் இருந்து காலை 9.45 மணிக்கும், போடியில் இருந்து மாலை 5.30 மணிக்கும் தேனிக்கும் ரெயில்வே ஊழியர்களு க்கான சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

    போடியில் ரெயில்நிலையம் டெர்மினல் தன்மை யுடன் இருப்பதால் அங்குள்ள கட்டமைப்பு, சமிக்ஞை, பயணிகளுக்கான வசதி ஆகியவற்றை பார்வையிடுவதுடன் பணிபுரிவது குறித்த ஒத்திகையிலும் ஈடுபட உள்ளனர். பின்பு மாலை 5.30 மணிக்கு இதேரெயிலில் மதுரை கிளம்பி செல்கின்றனர்.

    தண்டவாள ஆய்வு, சமிக்ஞை சோதனை, ஊழியர்களின் பணி ஒத்திகை போன்றவை அடுத்தடுத்து நடைபெறு வதால் மதுரை மற்றும் சென்னையில் இருந்து போடிக்கு விரைவில் ரெயில் இயக்க வாய்ப்புள்ள தாக ரெயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • சேலம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    சேலம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி விசாகப்பட்டி–னம்-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-08569) வருகிற 11-ந் தேதி கொல்லத்தில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு அண்ணாவரம், சாமல்கோட், ராஜமுந்திரி, விஜயவாடா, தெனாலி, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் (12-ந் தேதி) காலை 7.52 மணிக்கு சேலம் வந்தடையும், பின்னர் இங்கிருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம், கோட்டயம், திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயன்குளம் வழியாக மாலை 6 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இதேபோல் கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-08570) வருகிற 12-ந் தேதி கொல்லத்தில் இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள (13-ந் தேதி) காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வருகிற 14-ந் தேதி விசாகப்பட்டினம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • ரெயில் முன்பதிவு அதிகரிக்கும் வழித்தடங்களில், பயணிகள் சிரமத்தை தவிர்க்க கூடுதல் ரெயில்களை அவ்வப்போது தெற்கு ெரயில்வே அறிவித்து வருகிறது.
    • வடமாநிலத்துக்கு ரெயில்கள் இயக்கப்படும் போது திருப்பூரில் நின்று செல்லும் வகையில் ெரயில்கள் அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    பொள்ளாச்சி வழியே பாலக்காடு - சென்னை இடையே இயங்கும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கும் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம் ரெயில்வே நிலைய யார்டு பகுதியில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ் ெரயில் இயங்கும் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியே சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண், 22652) வரும் டிசம்பர் 1ந் தேதி மற்றும், 2ந் தேதிகளில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழித்தடத்தில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    எதிர் மார்க்கத்தில், சென்னை - பாலக்காடு ெரயில் (எண், 22651) வருகிற 30ந் தேதி, டிசம்பர் 1 மற்றும், 2ந் தேதிகளில் சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பதிலாக, சென்னை எழும்பூரில் புறப்பட்டு, செங்கல்பட்டு, விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் வழியே பாலக்காடு சென்றடையும். இத்தகவலை பாலக்காடு ெரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

    சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்களின் வசதிக்காக செகந்திராபாத் கோட்டம் சிறப்பு ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படுகிறது. செகந்திராபாத்கோட்டயம் சிறப்பு ரெயில் (எண்.07125) வருகிற 27-ந் தேதி மாலை 6.50 மணிக்கு செகந்திராபாத்தில் புறப்பட்டு அடுத்த நாள் இரவு 9 மணிக்கு கோட்டயத்துக்கு வரும். இந்த ரெயில் சேலத்துக்கு மதியம் 12.25 மணிக்கும், ஈரோட்டுக்கு மதியம் 1.20 மணிக்–கும், திருப்பூருக்கு 2.15 மணிக்கும், கோவைக்கு 3.10 மணிக்கும் சென்றடையும்.

    கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரெயில் (07126) 28-ந் தேதி இரவு 11.15 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு 30-ந் தேதி காலை 4 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 4.40 மணிக்கும், திருப்பூருக்கு 5.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 6.30 மணிக்கும், சேலத்துக்கு 7.25 மணிக்கும் சென்று சேரும்.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரெயில் முன்பதிவு அதிகரிக்கும் வழித்தடங்களில், பயணிகள் சிரமத்தை தவிர்க்க கூடுதல் ெரயில்களை அவ்வப்போது தெற்கு ெரயில்வே அறிவித்து வருகிறது.

    அவ்வகையில், பீகார் மாநிலம் தர்பங்கா - கேரளாவின் எர்ணாகுளம் இடையே சிறப்பு ெரயில் அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 12-ந் தேதி வரை திங்கள்தோறும் இந்த ெரயில் இயங்கும். திங்கட்கிழமை இரவு 9:15 மணிக்கு புறப்படும் ரெயில், வியாழன் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் வந்து சேரும். மறுமார்க்கமாக டிசம்பர் 24 வரை வியாழக்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து தர்பங்காவுக்கு ெரயில் இயங்கும்.

    வியாழக்கிழமை இரவு 9மணிக்கு புறப்படும் ரெயில் ஞாயிறு காலை, 6:30 மணிக்கு தர்பங்கா சென்று சேரும். 3 ஏ.சி., 12 படுக்கை வசதி, 6 பொது பெட்டி உட்பட, 21 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.தமிழகத்தின் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் நிற்காமல் கோவை சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு, கோவையை போல் திருப்பூரிலும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை அதிகம். வடமாநிலத்துக்கு ெரயில்கள் இயக்கப்படும் போது திருப்பூரில் நின்று செல்லும் வகையில் ெரயில்கள் அறிவிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
    • கோவைக்கு காலை, 10.42-க்கும் வந்து செல்லும்.

    கோவை :

    வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக, வரும், 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறியிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்:05905), புதன் இரவு 8.50-க்கு அசாம் மாநிலம் திப்ருகர் சென்றடையும்.

    இதேபோன்று செவ்வாய்கிழமைகளில், அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும் ெரயில் (எண்: 05906) வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். திப்ருகரில் இருந்து இன்று மற்றும் வரும் 8, 15-ந் தேதிகளில் இந்த சிறப்பு ெரயில் இயக்கப்ப டுகிறது.

    இந்த ெரயிலில் ஏ.சி., இரண்டடுக்கு ஒன்று, மூன்றடு க்கு-5, படுக்கை வசதி-11, பொது இரண்டாம் வகுப்பு-3, சரக்கு பெட்டி-1, என 21 பெட்டிகள் இணைக்கப ்பட்டுள்ளது. இந்த ரெயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கன்னியாகுமரி-திப்ருகர் ெரயில், திங்கட்கிழமை காலை 4.12-க்கு கோவை ெரயில் நிலையம் வந்து செல்லும். திப்ருகர்-கன்னியாகுமரி ெரயில், வெள்ளிக்கிழமை, கோவைக்கு காலை, 10.42-க்கும் வந்து செல்லும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருவனந்தபுரம்-சென்னை இடையிலான சிறப்பு ெரயில் 25-ந்தேதி இயக்கப்படுகிறது.

    கோவை,

    தீபாவளி பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை வழியாக சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:06056), வரும் 25-ந்தேதி இயக்கப்படுகிறது.இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

    சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு ெரயில் (06055), சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 26-ந் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

    இந்த ெரயில், கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், ஆலூவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ெரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில் 7 ஏ.சி.பெட்டிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டி 6-ம், முன்பதிவு இல்லாத இருக்கை வசதி பெட்டி 2-ம் இனைக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ெரயில் கோவைக்கு காலை 4.12 மணிக்கு வந்து 4.15-க்கு புறப்பட்டு செல்லும். சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு ெரயில் கோவைக்கு இரவு 11.03-க்கு வந்து 11.05-க்கு பிறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×