என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உழவு பணி"
- பருவமழையை எதிர்பார்த்து உழவு பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
அபிராமம்
வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பருவ மழை சரியாக பெய்யாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலா ளிகள், கரிமூட்டம், கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. ராம நாதபுரம் மாவட்டத்திலும் போதிய மழை பெய்யும் என நம்பிக்கை வைத்துள் ளன. இதன் காரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விவசாயிகள் தற்போது இருந்தே உழவு பணிகளில் ஆர்வமாக உள்ளனர். நிலத்தை சீர் செய்து விதை விதைப்பில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கர்ணன் என்பவர் கூறுகையில், கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு மழை இல்லததால் நெல் பயிர் பொதி பருவத்தில் நெல் விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் போதிய மழை இருக்கும் என்று விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம்.
அதிலும் குறிப்பாக நெல், மிளகாய் பயிர்களை பயிர்செய்வ தற்காக விவசாய நிலங்களில் உழவு பணியை தொடங்கி உள்ளோம் என்றார்.
- பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம்.
- நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் பொறியியல் துறையில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ், உழவு பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு மொத்ததொகையில் 50 சதவீதம் தொகை உழவு மானியமாக வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ.250 என்ற அடிப்படையில் ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ.625 ம் புன்செய் உழவுக்கு ரூ.1250 ம் அதிகபட்ச மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிறு விவசாயிகள் இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன் பெறலாம். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று. நிலவரை படம், ஆதார் அட்டை மற்றும் ஒளிம நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து பயன் பெறலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
செயற்பொறியாளர், 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. செல்போன் எண் 99529 52253.
உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502. அலைபேசி எண்: 044- 24352356, செல்போன் எண்: 90030 90440.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குருவை சாகுபடி பணி தொடங்கப்பட்டுள்ளது.
- விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் ராமன் கோட்டகம் பகுதியில் குருவை சாகுபடி பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது உழவு பணி நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி தினக்கூலி விவசாயிகள், பெண்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
- ராமநாதபுரம் அருகே கோடை உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி பேசினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, பசும்பொன், கோவிலாங்குளம், சம்பகுளம், முதல்நாடு, கே.வேப்பங்குளம், குண்டுகுளம், தரைக்குடி ஆகிய பகுதிகளில் கோடை மழை பொய்த்தால் விவசாயிகள் ஆர்வத்துடன் கோடை உழவு பணி செய்கின்றனர். கோடை உழவின் நன்மை குறித்து கமுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சிவராணி கூறுகையில், கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்வதால் மண் இறுக்கம் தளர்ந்து சரியாக நிலைப்படுத்தப்படும். மழைநீர் மண்ணின் உள்ளே ஊடுருவதற்கு ஏதுவாக இருக்கும். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மக்காத சருகுகள் மக்கி மண்ணில் அங்கக சத்து மேம்படும். கீழ் மண் மேலே புரட்டி விடப்படுவதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள், கிருமிகள் போன்றவை சூரிய ஒளிக்கு உட்படுத்தப்படுவதால் அழிக்கப்படுகின்றன. மேலும் களைச் செடிகள் களையப்படுவதால் வெயிலில் காய்ந்து பயிரிடும் போது களைகள் குறைவாக இருக்கும். பயிர் பூச்சி,நோய், களை மேலாண்மை செலவுகள் குறைக்கப்படும். இதனால் விவசாயிகள் கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என்றார்.
- ஏர் உழவு பணியின் போது கலப்பையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைக்கின்றனர்.
- ஏர் உழும்போது மாடுகளின் ஆனந்த நடையில் மணி ஓசை கேட்கிறது. தொட்டில் தானாக அசைந்து தாலாட்டுவது போல உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பொல்லாவரத்தை சேர்ந்தவர் மது. இவரது மனைவி ஷிரவாணி. விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
தம்பதிக்கு 5 மாத பெண் குழந்தை உள்ளது. அவர்களது குழந்தையை கவனித்துக் கொள்ள வீட்டில் யாரும் இல்லை. தினமும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் மது தம்பதியினர் விவசாய பணிக்கு செல்லும் போது தங்களது குழந்தையையும் உடன் எடுத்துச் செல்கின்றனர்.
ஏர் உழவு பணியின் போது கலப்பையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைக்கின்றனர்.
ஏர் உழும்போது மாடுகளின் ஆனந்த நடையில் மணி ஓசை கேட்கிறது. தொட்டில் தானாக அசைந்து தாலாட்டுவது போல உள்ளது.
குழந்தையை தொட்டிலில் போட்ட சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறது. மது தம்பதியினரும் தங்களது பணிகளை இடையூறு இன்றி செய்து வருகின்றனர்.
குழந்தை பசிக்கு அழும்போது மட்டும் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஷிரவாணி பால் கொடுக்கிறார்.
மீண்டும் தொட்டிலில் போட்டவுடன் குழந்தை தூங்கி விடுகிறது. இதனை காணும் அப்பகுதி மக்கள் மது தம்பதியினரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மேலும் குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
- சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பபோது பலத்தமழை பெய்தது.
- சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.
கள்ளக்குறிச்சி:
காளசமுத்திரம் , தத்தா திரிபுரம், குரால், பாக்கம்பாடி, நயினார்பாளையம், ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த மழையின் காரணத்தினால் விவசாயிகள் வயல்களில் உழவு பணி மும்முரமாக செய்து வருகின்றனர்.மானாவாரி நிலங்களில், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில், சின்னவெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். அதேபோல் இம்முறையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் பெய்துள்ள மழை காரணமாக வயல்களில் உழவு, விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்