என் மலர்
நீங்கள் தேடியது "சக்திகாந்த தாஸ்"
- கொரோனா 3-வது அலை இருந்தபோதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் போர் புதிய சவால்களை கொண்டு வந்தது.
- ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
ஐதராபாத்:
ரிசர்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆய்வுத்துறையின் வருடாந்திர ஆய்வு மாநாடு ஐதராபாத்தில் நடக்கிறது. இதை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-
கொரோனா பெருந்தொற்று பெரிய தரவுகளின் சக்தியை ஆராய்ந்து பயன்படுத்தவும் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும்போது நேரடி கருத்து வழிமுறைகளை வலுப்படுத்தவும் வாய்ப்பை உருவாக்கியது.
கொரோனா முதல் அலை காலத்தில் தரவுகளை திரட்டுவதும், தரவுகளில் தொடர்புடைய புள்ளிவிவர இடைவெளியும் முதலாவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. மிகவும் ஆபத்தான இரண்டாவது அலையின்போது, இலக்கு கொள்கை தலையீடுகளை வடிவமைப்பதற்கு துறை அளவிலான அழுத்தம் பற்றிய தகவல்களை சேகரிப்பது இன்னும் முக்கியமானதாக இருந்தது.
கொரோனா 3-வது அலை இருந்தபோதும் ஏற்கனவே சரிவடைந்த பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரத்தில் ஏற்பட்ட உக்ரைன் போர் புதிய சவால்களை கொண்டு வந்தது. ஒரு கடினமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை உலகம் திடீரென எதிர்கொண்டது.
வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களால் உந்தப்பட்டு உலகப் பொருளாதாரத்தின் துண்டாடுதல் வடிவில் ஒரு புதிய ஆபத்து உருவானது. இது முக்கியமான பொருட்களுக்கான எந்த ஒரு மூலத்தையும் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை முன்னுக்குக் கொண்டு வந்தது.
பொருட்களின் விலை வானளவு உயர்ந்ததுடன், வினியோக சங்கிலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த காரணிகள் பணவீக்கத்தின் உலகமயமாக்கலுக்கு வழிவகுத்தன.
வர்த்தகக் கொள்கை நடவடிக்கைகள் (கட்டணம் மற்றும் வரி அல்லாத) மற்றும் நிதி நடவடிக்கைகள் (விலை முடக்கம், வரிக்குறைப்பு மற்றும் ஏழைகளுக்கு மானியங்கள்) ஆகியவற்றை உலக நாடுகள் நாடியதால், இந்தியச் சூழலில் இத்தகைய நடவடிக்கைகளின் பொருத்தத்திற்கும் கவனம் செலுத்தப்பட்ட ஆராய்ச்சி கவனம் தேவை.
கொரோனா, ஐரோப்பாவில் போர் மற்றும் நாடுகளின் பணவியல் கொள்கையின் தீவிரமான இறுக்கம் ஆகிய 3 மிகப்பெரிய அதிர்ச்சிகள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பொருளாதார ஆராய்ச்சிக்கு மிகவும் மாறுபட்ட சவால்களை முன்வைத்தன.
இந்த மூன்று அதிர்ச்சிகளின் பின்விளைவுகள் இன்னும் வெளிவருகின்றன. இதனால் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சி செயல்பாடு கடந்த காலத்தில் இருந்தது போல இந்த சாத்தியக்கூறுகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
- நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது.
- அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.
கொச்சி :
கேரள மாநிலம் கொச்சியில், பெடரல் வங்கி நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் வருடாந்திர நினைவுநாள் நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது:-
இந்திய நிதித்துறை சீராக உள்ளது. மோசமான பணவீக்க காலம் கடந்து சென்று விட்டது.
நமது வெளிநாட்டு கடன், நிர்வகிக்கக்கூடிய அளவுக்குத்தான் உள்ளது. எனவே, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு நமக்கு எந்த பிரச்சினையையும் ஏற்படுத்தாது.
அதிகமான வெளிநாட்டு கடன் வைத்திருக்கும் நாடுகளுக்கு ஜி20 நாடுகள் உதவ வேண்டும். பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்.
அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கி பிரச்சினையை மனதில் வைத்து, நமது வங்கிகள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக தொடரும்.
- வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
* ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை
* ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக தொடரும்.
* வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது.
இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும். நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
அந்நிய செலாவணி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. இந்த நிதியாண்டின் வளர்ச்சியானது 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இரண்டாம் காலாண்டில் 6.5 சதவீதம், மூன்றாம் காலாண்டில் 6 சதவீதம், நான்காம் காலாண்டில் 5.7 சதவீதம் என ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளது.
சில்லறை பணவீக்கமானது, முன்பு மதிப்பிடப்பட்ட 5.2 சதவீதத்திலிருந்து 2024 நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் குறையலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் கீழே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
- செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல.
- பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
மும்பை :
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றை அச்சிடும் பணி, 2018-2019 நிதி ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள், வெறும் 10.8 சதவீதமாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஆகும்.
இதற்கிடையே, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கடந்த 8-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 50 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக கூறினார்.
இந்நிலையில், நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
கடந்த வார மத்தியில் இருந்த நிலவரப்படி, ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. இவை மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம். இவற்றில் 85 சதவீத நோட்டுகள் டெபாசிட்டாகவும், மற்றவை வேறு நோட்டுகளாக மாற்றிய வகையிலும் வந்துள்ளன.
செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் நுகர்வு அதிகரித்து, அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், பொருளாதாரம் மீது எதிர்மறை தாக்கம் எதுவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது
- உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும்
இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் இல்லையென்றால் மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனாக பணத்தை பெறலாம்.
இதற்காக அவ்வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகளை கொண்டு தீர்மானிக்க படுக்கிறது. இதனை ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள்.
ஆறு உறுப்பினர்களை கொண்ட இந்த கமிட்டியின் சந்திப்பு ஆகஸ்ட் 8 முதல் 10 வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின்படி ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை (Repo rate) எந்த மாற்றமுமில்லாமல் 6.5 சதவீதத்திலேயே வைத்துள்ளது.
சில்லறை பணவீக்கத்தை 4 சதவீத அளவிலேயே வைத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
இதனை அறிவித்த ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:-
விவசாய கடன்களில் உயர்வு வளர்ச்சியை குறிக்கிறது. தொழில்துறையின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகம் நம்பிக்கையூட்டும் விதமாக உள்ளது. பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறது.
உலகளவில் பிற நாடுகளின் மத்திய வங்கிகள் உயர்த்தியுள்ள வட்டி விகிதங்கள் இன்னும் சில காலங்கள் தொடர்ந்து உயர்விலேயே இருக்கும். ஆனால், உலகளவில் வளர்ச்சி என்பது குறைவதற்கான ஆபத்தும் அதிகம். பணவீக்கத்தின் போக்கை கூர்மையாக கவனித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.
முன்னர் அதிகரித்திருந்த ரெப்போ வட்டி விகிதத்தின் தாக்கம் இப்போது பொருளாதாரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. உலகின் வளர்ச்சிக்கான இயந்திரமாக இந்தியா விரைவில் மாறும். உலகின் பொருளாதார வளர்ச்சியில் 15 சதவீதம் இந்தியா வழங்குகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரியில், அதற்கு முன்பு வரை 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் என உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரிப்பு
- விலைவாசி உயர்வு பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன
இந்தியாவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாத சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்திருந்தது. இதற்கு காய்கறி விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணம்.
பருவமழை மற்றும் புவிசார் பதற்றம் போன்ற காரணிகளும் முக்கிய காரணம். சில்லறை பணவீக்கம் காரணமாக மக்கள் அதிக அளவில் பணம் செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து பண்டிகை காலங்கள் வருவதால் இந்த பணவீக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால், அடுத்த (செப்டம்பர்) மாதத்தில் இருந்து காய்கறிகளின் விலை உயர்வு, தானியங்களின் விலை உயர்வு குறைய வாய்ப்புள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சக்திகாந்த தாஸ் கூறுகையில் ''நாங்கள் காய்கறி பணவீக்கம் செப்டம்பரில் இருந்து குறையும் என எதிர்பார்க்கிறோம். புவிசார் பதற்றங்கள் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் என்ற போதிலும், தானிய வகைகளின் விலை குறைய பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
முக்கிய பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், கடந்த சில மாதங்களாக அதில் காணப்படும் நிலையான தளர்வு பணவியல் கொள்கை பரிமாற்றத்தின் அறிகுறியாகும்.
தொடர்ந்து வரும் விலைவாசி உயர்வு, கடந்த வரும் செப்டம்பரில் இருந்து வருடம் பணவீக்க எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
- மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார்.
- சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'குளோபல் ஃபைனான்ஸ்' என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில், மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார்.
சக்திகாந்த தாஸை அடுத்து, ஸ்விட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- ரெப்போ வட்டி தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும். எந்த மாற்றமும் இல்லை.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 6.5 சதவீதமாக தொடர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகக் பொருளாதாரம் தொடர்ந்து உடையக் கூடியதாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தின் அஸ்திவாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி முந்தைய 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. வங்கி- கார்பரேட் ஆகியவற்றின் ஆரோக்கியமான இரட்டை சமநிலைக்கு தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன.
முக்கிய பணவீக்கத்தில் பரந்த அடிப்படையிலான தளர்வு உணவு பணவீக்கத்திற்கு ஆபத்தானது. 2024 நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
- உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
- 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1. ரிசர்வ் வங்கியின் பயணம் இந்தியப் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையது.
2. எங்களின் பல பொறுப்புகளை நிறைவேற்றும்போது கற்றுக் கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், புதுமைப்படுத்தவும் தொடர்ந்து பாடுபடுகிறோம்.
3. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டியை 6.5 சதவீதமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
4. வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் கொள்கை பணவீக்கத்தை 4 சதவீத இலக்கை கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கான இடத்தை வழங்குகிறது.
5. உணவுப் பணவீக்க அழுத்தங்கள் பிப்ரவரியில் அதிகரித்தன; பணவீக்கத்தின் தலைகீழ் ஆபத்தில் எம்.பி.சி. விழிப்புடன் உள்ளது.
6. உலகளாவிய கடன்-ஜிடிபி விகிதம் அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இது விளைவை ஏற்படுத்தலாம்.
7. கிராமப்புற தேவை மற்றும் நுகர்வு2025 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8. 2025 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
9. உலகளாவிய வளர்ச்சி மீள்தன்மையுடன் உள்ளது. சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டி நிலை உள்ளது.
10. தொடரும் உலகளாவிய அரசியல் பதற்றங்கள் பொருட்களின் விலைகளில் தலைகீழான அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
11. அறையில் இருந்த யானை (பணவீக்கம்) நடைபயிற்சிக்கு வெளியே சென்றதுபோல் தெரிகிறது. அது மீண்டும் காட்டில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
12. விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே எங்கள் முயற்சி
13. வங்கிகள், என்.பி.எஃப்.சி-க்கள், பிற நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிர்வாகத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்
14. ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரச் சந்தையில் சில்லறை வணிக பங்களிப்பை எளிதாக்க மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
15. இந்தியாவின் அந்நிய செலாவணி இது வரை இல்லாத அளவிற்கு மார்ச் 29-ல் உயர்வு.
- கடந்த ஆண்டை விட கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.
- உலக உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்.
* பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.
* ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன்களின் வட்டி உயராது.
* தொழில்துறை உலோகங்களின் விலைகள் நடப்பு காலாண்டில் இதுவரை இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
* கடந்த ஆண்டை விட கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.
* உலக நாடுகள் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியா வளர்ச்சிக் கண்டு வருகிறது. இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
* உலக உணவுப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
* கோதுமை, பார்லி, ஓட்ஸ் உள்ளிட்டவைகளின் வருகையால் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் தேவையை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
#WATCH | RBI Governor Shaktikanta Das says "The developments relating to growth and inflation are unfolding as per our expectations. When the projected GDP growth of 7.2% for 2024-25 materializes, it will be the fourth consecutive year of growth at or above 7%. Headline CPI… pic.twitter.com/PVXSBG1upk
— ANI (@ANI) June 7, 2024
- ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிப்பு.
- 9வது முறைாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான இரண்டு நாள் நாணயக் கொள்கை குழு கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கியது. இன்று இந்த கூட்டம் முடவடியை உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் பலரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5% ஆக தொடரும். 9 ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.
பெரும்பான்மை கருதி, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீடு, வாகன கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. வங்கிகளின் குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. இதனால் கடன் வாங்கியவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இன்றி 6.5 சதவீதமாக நீடிக்கிறது. அமெரிக்க பொருளாதாக சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு வருகிறது.