என் மலர்
நீங்கள் தேடியது "குடும்பத் தகராறு"
- ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை
- இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கடலூர்:
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் ராஜவேல் தனது மனைவியை பலமுறை வீட்டுக்கு அழைத்தும் வரவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜவேல் தோட்டத்தில் இருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் ராஜவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவக்குமாருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை.
- சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
கடலூர்:
புவனகிரி அடுத்த வடக்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறிப்படுகிறது.
இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணை யை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
- தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமலை:
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் எல்லம்ம குட்டாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தாராசந்த் நாயக். இவரது மனைவி புஷ்பாவதி. இவர்கள் 2015-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்களது தகராறு நீடித்து வந்தது. இவர்களது சண்டை கிராமத்திலும் பிரபலமாக இருந்தது.
வழக்கம்போல் நேற்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் தனித்தனியாக அமைதியாக இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து தாராசந்த் நாயக் அவரது மனைவியை சமாதானம் செய்ய முடிவு செய்தார்.
குடும்பத் தகராறு குறித்து மனைவியிடம் அமைதியாக பேசினார். அப்போது மவுனமாக இருந்த மனைவி புஷ்பாவதி அருகில் சென்று உதட்டோடு முத்தம் கொடுக்க முயன்றார்.
இதனை அவர் தடுத்தார். ஆனாலும் தாராசந்த் நாயக் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயன்றதால், தாராசந்த் நாயக்கின் நாக்கை புஷ்பாவதி கடித்தார்.
இதில் வலி தாங்காமல் தாராசந்த் நாயக் அலறினார். ஆனாலும் புஷ்பாவதி விடாமல் நாக்கை கடித்தார். இதில் நாக்கு துண்டாகி தொங்கியது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச் சென்றனர். பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக், வாயில் ரத்தம் சொட்ட சொட்ட வலியால் கதறியபடி இருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக குத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தன் விருப்பத்திற்கு மாறாக தன்னை தாக்கி முத்தமிட வற்புறுத்தியதால் கணவன் நாக்கை கடித்ததாக கூறி மனைவி புஷ்பாவதி போலீசில் புகார் அளித்தார்.
மேலும் தாராசந்த் நாயக்கும் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார். அதில் தனது நாக்கை வேண்டு என்றே மனைவி கடித்தார்.
என் மனைவி கொன்று விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனைவி உள்பட 2 பேர் கைது
- கணவன்- மனைவிக்கு இடையே தகராறு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளத்தை சேர்ந்தவர் யாழரசன் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவரது 2-வது மனைவி பிரதீபா (39). ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்க ளுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு யாழரசன் பிரதீ பாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு பிரதீபா சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் யாழரசன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது மனைவி பிரதீபாவிடம் இங்கு ஏன் வந்தாய் என்று கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது பிரதீபாவின் அண்ணன் திருப்பதி ஏன் இப்படி தகராறு செய்கிறாய் என்று யாழரசிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரது அண்ணன் திருப்பதி ஆகியோர் சேர்ந்து அருகே இருந்த கட்டையை எடுத்து யாழரசனை சரமாரியாக தாக்கினர்.
இதில் யாழரசன் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் யாழரசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யாழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீபா மற்றும் திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
- எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர்.
புத்தாண்டு தினத்தன்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொலைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நாகா பகுதியில் உள்ள ஷரன்ஜித் என்ற ஹோட்டல் விடுதி அறையில் வைத்து 24 வயது இளைஞன் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை இன்று படுகொலை செய்துள்ளான்.
ஹோட்டல் ஊழியர்களின் கூற்றுப்படி, டிசம்பர் 30 அன்று அந்த குடும்பம் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளது .
குற்றம் சாட்டப்பட்டவர், ஆக்ராவின் குபேர்பூரை சேர்ந்த அர்ஷத். தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை விடுதிக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவை இழக்கச்செய்து அவர்களின் கை மணிக்கட்டை அறுத்து கொன்றுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ஹோட்டல் அறையில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டனர்.
இறந்தவர்கள் அலியா (9), அல்ஷியா (19), அக்சா (16) மற்றும் ரஹ்மீன் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அனைவரும் அர்ஷத்தின் சகோதரிகள். ஐந்தாவது உடல் தாயார் அஸ்மா உடையது. அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் காவல்துறை உடனடியாக குற்றம் நடந்த இடத்தில் இருந்து அர்ஷத்தை கைது செய்தது என்று டிசிபி ரவீனா கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டு, தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தில் சாட்சியங்களைச் சேகரித்து வருவதாக ரவீனா கூறினார்.
சமபவத்தின் பின் தலைமறைவான அர்ஷத்தின் தந்தையை போலீஸ் தேடி வருகிறது. குடும்பத் தகராரே கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த பின், குற்றவாளி அர்ஷத் வீடியோ ஒன்றையும் எடுத்துள்ளார். வீடியோவில் இறந்த தாய் மற்றும் சகோதரிகளைக் காட்டினார். இதன் போது அவருடன் அவரது தந்தையும் இருந்தார்.
என் பெயர் ஆசாத்... இன்று, குடிசைவாசிகளின் [அக்கபக்கத்தினரின்] நிர்ப்பந்தத்தால், இந்த நடவடிக்கையை எடுத்தோம். தாயையும் சகோதரிகளையும் என் கைகளால் கொன்றேன். இதற்கு, எங்கள் காலனியில் வசிப்பவர்களே பொறுப்பு. எங்களுடைய வீட்டைப் பறிப்பதற்காக இவர்கள் எத்தனையோ அட்டூழியங்களைச் செய்தார்கள். நாங்கள் குரல் எழுப்பியபோது, யாரும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை. யோகி ஜிக்கு [முதல்வருக்கு] ஒரு வேண்டுகோள், இது போன்றவர்களை விட்டுவிடாதீர்கள், மரணத்திற்கு முழு காலனியும் பொறுப்பு.
இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் ராணு என்கிற அஃப்தாப் அகமது, அலீம் கான், சலீம் கான், டிரைவர் அகமது, அசார் மற்றும் சிறுமிகளை விற்கும் அவரது உறவினர்கள். எங்களை சிறைக்கு அனுப்பவும், சகோதரிகளை விற்கவும் இவர்கள் திட்டம் தீட்டினர். நாங்கள் இதை எதிர்த்தோம். காவல்துறையிடம் உதவி கேட்டேன், தலைவர்களிடம் உதவி கேட்டேன், ஆனால் யாரும் எதுவும் செய்யவில்லை.
நாங்கள் படவுன் குடியிருப்பாளர்கள். எங்களை வங்கதேசத்தினர் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் படவுனில் வசிக்கும் எங்கள் அத்தையிடம் இருந்து நீங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.. நாங்கள் மதம் மாற விரும்பினோம். இன்று என் சகோதரிகள் அனைவரும் இறந்து கொண்டிருக்கிறார்கள். நானும் இறப்பேன்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஜி... எல்லா முஸ்லிமும் ஒரே மாதிரி இல்லை. இந்தியாவில் எந்த குடும்பமும் இதை மீண்டும் செய்யக்கூடாது. உயிருடன் இருக்கும் போது இல்லை என்றால் இறந்த பிறகு நீதி வழங்குங்கள். நீங்கள் ஒரு உண்மையான இந்து மற்றும் தாக்கூர். எனவே எனது வீட்டில் கோயில் கட்ட வேண்டும்.
காலனி மக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளனர். பல ஏழைகளின் பெண் குழந்தைகளை இவர்கள் தூக்கிச் சென்று விற்கின்றனர். காவல்துறையினரிடம் பணம் கொடுத்து அமைதிப்படுத்துகிறார்கள்.
எனது குடும்பத்தின் உடல்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்பது உங்கள் விருப்பம். நான் அவர்களை கொடூரமாக கொன்றேன். கூப்பிய கைகளுடன் நீதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களைச் சந்திக்க லக்னோ வந்தேன். ஆனால் சந்திக்க முடியவில்லை என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
- சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம்.
- ஆத்திரமடைந்த சங்கர் கத்தியை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார்.
விழுப்புரம் :
விழுப்புரம் அருகே தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45) ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இந்நிலையில் சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம். மேலும் சங்கர் தனது மனைவி பாக்கியலட்சுமி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபடுவாராம்.
இன்று காலை வழக்கம்போல் சங்கருக்கும் பாக்கிய லட்சுமிக்கும் இடையில் குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது பயங்கரமாக வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி என்றும் கூட பாராமல் பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் பாக்கியலட்சுமி அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பாக்யலட்சுமி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர்போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கணவன் மனைவியை வெட்டிக் கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.