search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் சாவு"

    • பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவராண நிதி
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சோம்ராஜ் (வயது 55), வாழைத்தார் வியாபாரி. இவரது மனைவி ஜெயசித்ரா (45). மகன் அஸ்வின் (21), மகள் ஆதிரா (24) ஆகியோர் நேற்று வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது நேற்று பெய்த காற்று-மழை காரணமாக இவர்களது வீட்டு பக்கத்து வீட்டிலிருந்த மின்சார வயர் அருகிலுள்ள தகர மேற்கூரையில் பட்டபடி இருந்துள்ளதும் அந்த நேரத்தில் அஸ்வின் எடுத்து வந்த இரும்பு கம்பி, தகர மேற்கூரையில் பட்டதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததும் தெரியவந்தது. மேலும் அவரை தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றபோது அவர்களும் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பதும் தெரியவந்தது.

    பலியான ஆதிரா 8 மாத கர்ப்பிணி என்பது வேதனையான சம்பவமாக அமைந்தது. இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து விட்டது. அவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் குளச்சலை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருடன் திருமணமாகி உள்ளது.

    கர்ப்பிணியான ஆதிரா வளைகாப்புக்கு பிறகு பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது தான் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். அவரது கணவர் ஸ்ரீசுதன், ஆந்திர மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து உடனடியாக ஊருக்கு புறப் பட்டுள்ளார். இதற்கிடையில் பலியான 3 பேரின் உடல்களும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.

    அதன்பிறகு கல்லூரி மாணவன் அஸ்வின், தாய் ஜெயசித்ரா ஆகியோரது உடல்கள் ஆற்றூரில் உள்ள அவர்களின் வீட்டின் அருகில் அடக்கம் செய்யப் படுகிறது. கர்ப்பிணி பெண் ஆதிராவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப் பட்டு குளச்சலில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையில் மின்சா ரம் தாக்கி கர்ப்பிணி பெண் உள்பட 3 பேர் இறந்த சம்பவத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரி வித்துள்ளார். இந்த துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    குடும்பத்தினரை இழந்து வாடும் சோம்ராஜ் மற்றும் அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறு தலையும் தெரி வித்துக்கொள்வ தோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தர விட்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குட்டியப்பா நகரைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது28). தொழிலாளி. இவர் நேற்று ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சீதாராம் மேடு பகுதி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கண்டகனபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (28). ஜே.சி.பி. ஆப்ரேட்டரான இவர் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலையில் தனது புல்லட் வண்டியில் நேற்று சென்றார். அப்போது அவர் அங்குள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் சிவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (27). கால்நடை வியாபாரியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில், உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் மோகன் கொடுத்த புகார் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், சேலம் மணியனூர் அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் பீகாரைச் சேர்ந்த வாலிபர் பரூன் சிங் (25), நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பரூன் சிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் ரூபேந்திர சிங் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மன்னார்பாளையம் வாய்க்கால் பட்டறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (35). இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில், காந்தி நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றதால், நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் தினேஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ், நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தினேஷின் மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் தனியார் நிறுவன மேலாளர்- மூதாட்டி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • சிவகாசி டவுன், திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் சிவகாசியில் உள்ள லாரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு வந்த துரைப்பாண்டி மதியம் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். ரெயில்வே பீடர் ரோட்டில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த துரைப்பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (60). இவர் சம்பவத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார். கிருஷ்ணன் கோவிலில் உள்ள கண் ஆஸ்பத்திரி முன்பு பாண்டியம்மாள் நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஸ்ரீகிருஷ்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (47). கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிச்சாமி மீது கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • அவ்வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.
    • பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 48).எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் தனது மோட்டார்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த வாகனம் மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல ஓசூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்துவந்த ஜி .மங்களத்தை சேர்ந்த சதீஷ் (27) என்பவர் பாகலூர் - ஓசூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வரிசையிலாசூர் சிப்காட் அருகேயுள்ள குடியனூரை சேர்ந்த முனுசாமி (52) என்பவர் மூக்கண்டப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த கண்டைனர் லாரி மோதி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×