என் மலர்
நீங்கள் தேடியது "பனை விதைகள்"
- அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன.
- 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமல்லாமல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ள பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண் அரிப்பை தடுக்கும், மண்ணை உறுதிப்படுத்துவதுடன் வளப்படுத்தியும் மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகிறது. அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன.
நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல், பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த பனைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகிறது.
பனை விதைகளை சேகரிக்க தேவைப்படும் தாய் பனைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக விளைச்சல் கொண்டதாகவும், முறையாக காய்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தாய்ப்பனையில் இருந்து சேகரிக்கப்பட்ட பழுத்த பழங்களை 4 வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விரைவில் முளைப்புத் திறன் ஏற்படும். விதைப்பதற்கு முன்பு பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் 100 சதவீத முளைப்புத்திறனை பெறலாம். பனை மரங்கள் எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டவை. இவற்றை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் என்றாலும் கார்த்திகை மாதத்தில் நடவு செய்வதன் மூலம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்று விட்ட பனங்கிழங்கு எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம். நீர் பாய்ச்சுதல் விதைகளை நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 முதல் 3 வருடம் வரை மாதம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் பருவமழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழி வரை நிரப்ப வேண்டும். 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும்.
ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியினை விட்டு மற்றவற்றை பிடுங்கி விட வேண்டும். பனைமரம் வளர்ச்சி மெதுவாக இருக்கும். விதைத்து 5 மாதங்கள் கழித்து தான் முதல் குருத்தோலை தோன்றும். 13 முதல் 15 வருடம் கழித்து பதநீர் கொடுக்கும். சராசரியாக ஒரு மரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதநீர் கொடுக்கும். ஒரு லிட்டர் பதநீர் காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் பனைவெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனைவெல்லம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது மடத்துக்குளம் வட்டாரத்திற்கு தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குவதற்காக 1900 பனை விதைகள் இருப்பில் உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. குறைவான எண்ணிக்கையில் இருப்பு உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் வரும் விவசாயிகளுக்கு பனை விதைகள் வழங்கப்படும். சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகினால் உடனடியாக பனை விதைகளை பெற்று நடவு செய்யலாம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேலிப்பயிராக பனை மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
- குட்டிக்குளத்தின் கரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.
- நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கடையம் வயல்காட்டு பகுதிகளில் உள்ள குளக்கரைகளை பனைமரக்கரை களாக்கி வலிமையாக்கிடும் பணியில் குட்டிக்குளத்தின் மேற்கு மற்றும் தெற்கு கரைப்பகுதியில் நூற்றுக்க ணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.
தென் பத்து குளத்திற்கும் குட்டிக்குளத்திற்கும் நடுவில் செல்லும் பாதையின் இருபகுதியிலும் பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்கள் ஜெப்வின், விஷ்ணு, செர்வின், அலோசியஸ், நாவினி, சிலம்ப கலைஞர் முத்தரசன் மற்றும் சுரண்டை காமராஜர் கல்லூரி வேதி யியல் பேராசிரியர் ராஜா சிங் ஆகியோர் பங்கேற் றனர். நிகழ்ச்சியை பனை யாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்தார்.
- செங்குளம் கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பனை உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும் என ஆனந்தன் பேசினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஜோஹோ மென்பொருள் நிறுவனத்திற்கு எதிரே அமைந்துள்ள செங்குளம் கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் 500 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்பு பனை என்பது நம் மண்ணின் மரம் மட்டுமல்ல கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கம்.பனை, முருங்கை, பலாமரம் உள்ளிட்ட மண்ணின் பாரம்பரிய மரங்களை பேணி வளர்க்க வேண்டும் என ஆனந்தன் பேசினார். மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், ஐடிவிங் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், தங்கமுதலாளி, சங்கரநாராயணன், காளிமுத்து, சுப்புராஜ்,மாரிக்கனி, குமார் ராஜ், முரளிதரன் மற்றும் ஐடிவிங் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
- இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.
வாழப்பாடி:
நிலத்தடி நீர் காக்கும் பனை மரங்களின் பயன்கள் குறித்தும், உதிர்ந்து விழுந்து வீணாகும் பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலை களிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணம், மாசிநா யக்கன்பட்டி, உடையாப் பட்டி, பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றி ணைந்து, இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.
இக்குழுவினர் ஏற்படுத் திய விழிப்புணர்வால், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி ஏரியில் திரண்ட பள்ளி, கல்லுாரி மாணவ–மாண வியர் மற்றும் தன்னார்வலர் கள், நுாற்றுக்கணக்கான பனை மர விதைகளை சேக ரித்து ஏரிக்கரையில் விதைத்தனர். இக்குழுவின ருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள் ளனர்.
- ஏரி, குளம், மற்றும் வாய்க்கால் கரை ஓரங்களில் மண் அரிப்பினை தடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பனை மரங்களை வளர்க்கலாம்.
- மண்ணிற்கு உகந்த மரமாகவும் விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்பட உள்ளது.
ஏரி, குளம், மற்றும் வாய்க்கால் கரை ஓரங்களில் மண் அரிப்பினை தடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பனை மரங்களை வளர்க்கலாம். பனை மரம் மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்கு உகந்த மரமாகவும் விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், பனை விதைகள் 30 ஆயிரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சமாக 50 விதைகள் மற்றும் பொது இடங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மூலம் பனை மரம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள் 100 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
- பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது.
வாழப்பாடி:
வறண்ட நிலங்களிலும் வறட்சியை தாங்கி வளர்ந்து, நீண்ட கால பலன் தரும் மரங்களுள் 'பனை' முதன்மையானதாகும். இதன் குழல் போன்ற சல்லி வேர்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, நிலத்தின் மேற்பரப்புக்கு கொண்டு வரும் தகவமைப்பு கொண்டதால், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. மண் அரிப்பை தடுப்பதால் நீர்நிலைகளின் கரைகளில் பனைமரங்கள் வளர்க்கப்பட்டன.
நமது மாநில மரமாக போற்றப்படும் பனை மரத்தின் ஓலைகள் குடிசை கூரை வேய்தல், விசிறி, கலைப்பொருட்கள் செய்ய பயன்படுகிறது. பனை தரும் 'நுங்கு' உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது. பனை மரத்தில் எடுக்கப்படும் பதநீரை பதப்படுத்தி சித்த மருந்துகளில் சேர்க்கப்படும் வெல்லம், கருப்பட்டி, பனங்கற் கண்டு தயாரிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பனை மரத்துப்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஆத்துார், கெங்கவல்லி, தம்மம்பட்டி, ஏத்தாப்பூர், பேளூர் பகுதிகளில் மானாவரி, தரிசு நிலங்கள் மற்றும் ஆறு, குளம், குட்டை, நீரோடை, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரையோரங்களிலும் பனைமரங்கள் நிறைந்து காணப்பட்டன. சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் பனைமரங்கள் நிறைந்திருந்த பெரும்பாலான பனந்தோப்புகள் அழிந்து விட்டன.
நீர்நிலைகளின் கரையோரங்களிலும், தரிசு நிலங்களிலும், விளை நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான பனை மரங்களும், செங்கல் சூளைகளுக்கும், வீட்டு உபயோக பயன்பாட்டிற்காகவும் வெட்டப்பட்டன. வறட்சியை தாங்கி வளர்ந்து நீண்டகாலத்திற்கு பலன் தரும் பனை மரங்களை வளர்க்க தற்கால சந்ததியிடையே ஆர்வம் இல்லை. இதனால் சேலம் மாவட்டத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த விலாரிபாளையம் கிராமத்தில் விலாரிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வராணி மற்றும் இவரது கணவர் மணி ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்றிணைந்து, உதிர்ந்து விழுந்து கிடந்த ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகளை சேகரித்தனர்.
இந்த விதைகளை கிராமத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களிலும் விதைத்து வருகின்றனர்.அசுர வேகத்தில் குறைந்து வரும் நீண்டகால பலன்தரும் பனை மரங்களை வளர்க்கவும், மற்ற கிராம மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும், பனை விதைகளை சேகரித்து விதைத்து முன்னுதாரணமான விலாரிபாளையம் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
- உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்
கடலூர்:
பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.
- சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
- பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன் முன்னிலையில் வாழப்பாடி அரிமா சங்க பட்டய தலை வர் சந்திரசேகரன், வட்டார தலைவர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, பன்னீர்செல்வன், கலைஞர்புகழ், சிவ.எம்கோ, அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு, செயலர் இந்திரா காந்தி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தனர்.
பனை விதைகளை நடவு செய்த தோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்து பனை மரத் தோப்பை உருவாக்குவதென, ஊராட்சி மன்ற தலைவர் பால சுப்பிரமணியம், செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் உறுதியேற்றனர். பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
- 1,001 பனை விதைகளை நட்டனர்
- பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி குரும்பர் குளக்கரைகளில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் 1,001 பனை விதைகள் நடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மரமும், மனிதனும் அமைப்பை சேர்ந்த, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு 1,001 பனை விதைகளை நட்டனர்.
- நெசவாளர் காலனி பூங்காவில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது.
- இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் இலவன்குளம் சாலையில் உள்ள நெசவாளர் காலனி பூங்காவில் விதைப்போம் வளர்ப்போம் குழு சார்பில் 50 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இதில் பசியில்லா சங்கரன்கோவில் அறக் கட்டளை நிறுவனர் சங்கர சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாட்டினை சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் மற்றும் குழு உறுப்பினர்களும் செய்திருந்தனர். கோவில்பட்டி வட்டம் இடுப்பையூரணி முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் பனை விதைகளை வழங்கினார்.
- திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
- பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.
இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.
இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.
இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.
இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது.
- அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும்.
சென்னை:
தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர் நலவாரியம், 'கிரீன் நீடா' சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம் எனும் என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து, வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 14 கடலோர மாவட்டங்களில், ஒரு கோடி பனை விதைகளை நட உள்ளன.
நாளை காலை 10.30 மணிக்கு, 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்வை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக, பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது:-
தமிழகத்தில், 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது. இதனால், கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு என, சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன.
எனவே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில், 1,076 கி.மீ., பரப்பளவில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, வருகிற 1-ந் தேதி துவங்குகிறோம்.
அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும். இப்பணியில், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ்., மாணவர்களும், கிரீன் நீடா போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.