என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிறிஸ்தவர்கள்"
- மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
- சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகிறது.
கடந்த வாரம் 200 நாடுகளை உள்ளடக்கிய மத சுதந்திரம் 2023 என்ற அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரிப்பதாகவும், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள், வெறுப்புப் பேச்சு, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த மத சுதந்திரம் 2023 அறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், "மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் அறிக்கை ஒருதலைபட்சமானது, இந்தியாவில் மத, சமூக கட்டமைப்பை புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
- பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-
பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.
முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.
பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.
பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.
ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.
வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.
இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.
- 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
- கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் மார்ச் 5-ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்ஷன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்கு உள்ளான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.
கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். அங்கு அண்மை காலமாக குறிப்பிடத்தக்க கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆகையால் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
- இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
- மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் ஈஸ்டர் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி ஈஸ்டர் ஞாயிறு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூர் பாஜக அரசின் இந்த உத்தரவிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு வேலை நாள் என்ற அறிவிப்பை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.
- 2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்
- இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறு வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் ஈஸ்டர் ஞாயிறு அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டு முடிய உள்ளதால் 30, 31 (சனி, ஞாயிறு) இரு நாட்களும் அரசு வேலை நாள் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகளவில் கிறிஸ்தவர்கள் வாழும் மாநிலமான மணிப்பூரில் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசின் இந்த உத்தரவு கிறிஸ்தவ மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அம்மாநிலத்தின் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று நாகா மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
2011-ம் ஆண்டு மக்களை தொகை கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மாநிலத்தில் 28 லட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 40% என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
- கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.
கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.
இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு ஆயத்த ஆராதனையை மஞ்சு விளை சேகரத் தலைவர் ஜேசன் தர்மராஜ் நடத்தி வைத்தார்.
நேற்று காலை அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார். பின்னர் ஞானஸ்நான ஆராதனையை பாவூர்சத்திரம் மேற்கு சேகரதலைவர் வரதராஜ் நடத்தினார். பின்னர் நடைபெற்ற பண்டிகை ஆராதனையில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்ணபாஸ் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.
நிகழ்ச்சியில் மேட்டூர் சேகரத்தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, மேட்டூர் சேகர குரு ஜோயல் ஸாம் மெர்வின் பேராயர் உதவி குரு பொன்ராஜ், சேகரத் தலைவர்கள் கடையம் கேமில்டன், வி.கே.புரம் கிறிஸ்டோபர், ஸ்டாலின், புலவனூர் நிக்சன், மஞ்சு விளை ஜேசன் தர்மராஜ், மேல மெஞ்ஞானபுரம் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர கமிட்டியினர், மேட்டூர், ஆவுடையானூர் வன்னிய நாடார்பட்டி சபை மக்கள் செய்திருந்தனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்
- சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிறிஸ்தவ முன்னணி இயக்கத்தின் நிறுவனர் சரவணன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில் சரிபாதி அளவுக்கு சிறுபான்மையினர் வாழ்ந்து வருகிறோம்.இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே தங்களது சுய லாபத்துக்காக சிறுபான்மையினர்கள் மீது வேண்டும் என்றே பிரச்சினை செய்து வருகின்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள் புகுந்து மதபோதகர்களைத் தாக்குவது, ஜெபவீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல், பொருள்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பல சபை வழிபாடுகளுக்காக கட்டடம் கட்டவும், வழிபாடு நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் வீடு கட்டுவதற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் அனுமதி கேட்டால் வழிபாடு நடத்தமாட்டேன் என்று எழுதிக்கேட்கிறார்கள்.
ஆகவே கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது வழிபாட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
- மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர்.
- ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.
திருப்பூர் :
ஏசு சிலுவையில் அறையுண்டு இறந்த நிகழ்வை புனித வெள்ளியன்று நினைவு கூர்ந்த நிலையில் அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடுகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பெருநாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
இதையொட்டி திருப்பூர் புனித ஜோசப், கேத்ரீன், அவிநாசி புனித தாமஸ், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம் உட்பட அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆலயங்களில் நேற்று நள்ளிரவு 12மணிக்கு ஈஸ்டர் திருப்பலி நடத்தப்பட்டது. திருப்பலியில் மெழுகுவர்த்தி கையில் ஏந்தி, தீமையின் சக்தி தலைதூக்க கூடாது என்ற வேண்டுதலை பக்தர்கள் முன்வைத்தனர்.
இது குறித்து பங்குதந்தைகள் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து துவங்கிய தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளை பக்தர்கள் மேற்கொண்டனர்.அசைவ உணவு தவிர்ப்பது, தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை தவிர்ப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, பகைவனையும் நேசிப்பது என, ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.செலவினங்களை தவிர்த்த சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையை ஏழைகளுக்கு வழங்கினர். இந்த பண்புகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக மனிதாக மண்ணில் வாழ்ந்த ஏசு, சாவை வென்றார். நம் வாழ்க்கையிலும் நீதி, சமத்துவம், மனித நேயம் உயிர்ப்பெற வேண்டும் என்பதைதான் ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது என்றனர். திருப்பூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் , காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஆலயங்கள் அனைத்தும் களை கட்டின.
- தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது.
- 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.
திருப்பூர் :
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழாவை யொட்டி கடை பிடிக்கப்படும் தவக்காலத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. ஏசு கிறிஸ்து சிலுவை யில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த் தெழுந்தார் என்ற நம்பிக்கை தான் கிறிஸ்தவம். இதை நினைவு கூறும் வகையில் தான் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன், தவ க்காலம் துவங்கியது. தினமும் தேவலாயங்களில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் தியானிக்கப்பட்டு வருகின்றன.வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப் படுகிறது.
பக்தர்களை ஆன்மிக பாதையில் வழி நடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்க ளிலும், சிறப்பு நற் செய்தி கூட்டங்கள் நடத் தப்பட்டன. இந்த தவக்கா லத்தின் புனித வாரம் இன்று தொடங்கியது. இதையொட்டி தேவாலய ங்களில் குருத்தோ லை பவனி நடத்தப்பட்டன. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆலயங்க ளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக, வருகிற 6-ந் தேதி புனித வியாழன், 7ந் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப் படுகிறது. 9-ந் தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப் படுகிறது.
- கிறிஸ்தவர்கள் கைளில் குருத்தோலை ஏந்தி இந்த நாளில் பவனி வருவது வழக்கம்.
- குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
நாகர்கோவில் :
இயேசு கிறிஸ்து சிலுவை யில் அறையப்படுவதற்கு முன்பு மக்கள் அவரை அரசராக பாவித்து கோவேறு கழுதையின் மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதனை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கைளில் குருத்தோலை ஏந்தி இந்த நாளில் பவனி வருவது வழக்கம். உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நடைபெறும் குருத்தோலை ஞாயிறு இந்த ஆண்டு இன்று நடைபெற்றது.
இதையொட்டி கத் தோலிக்க மற்றும் சி.எஸ்.ஐ. ஆல யங்களில் கிறிஸ்தவர்கள் இன்று காலை திரண்டனர். பின்னர் அவர்கள் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசானா பாடல் பாடிய படி வீதிகளில் வலம் வந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் திரண்ட கிறிஸ்தவ மக்கள் குருத் தோலை பவனியில் பங்கேற்றனர். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை காலையிலேயே அனைத்து கிறிஸ்தவ ஆலய ங்களிலும் ஏராளமானோர் திரண்டனர்.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரி யார் பேரா லயத்தில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை யில் காலை 6.30 மணிக்கு குருத்தோலை பவனி நடை பெற்றது. தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.
கோட்டார் மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், ஆயரின் செய லாளர் சகாய ஆண்டனி, கோட்டார் மறை மாவட்ட முதல்வர் சகாய ஆனந்த், பங்கு தந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்கு தந்தை ஆன்ேறா ஜெரால்டு, அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அசிசி ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், கன்னியாகுமரி புனித உபகார மாதா ஆலயம் உள்பட மாவட்டடத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை பவனி நடை பெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் திரளாக பங்கேற்றனர்.
குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து இந்த வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி வருகிற3,4 மற்றும் 5-ந் தேதிகளில் இயேசுவின் சிலுவை மரணம், பாடுகள் குறித்து அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
6-ந் தேதி பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக அனுச ரிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டா டப்படுகிறது.
குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்த லம் சார்பில் மரமடி குருசடி யிலிருந்து குருத்தோலை பவனி தொடங்கி பீச் சந்திப்பு வழியாக காணிக்கை அன்னை திருத்த லம் சென்றது. இதில் சிறுவர்கள், பெண்கள் உள்பட திரளா னோர் கலந்து கொண்டு 'தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா' என்று பாடல் பாடி சென்றனர்.
தொடர்ந்து காணிக்கை அன்னை திருத்தலத்தில் கோட்டார் ஆயர் இல்ல அருட்பணியாளர் பென்சிகர் திருப்பலி நடத்தினார். பங்கு மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம் சி.எஸ்.ஐ. சேகர கஸ்பா ஆலயத்தில் குருத் தோலை ஞாயிறு கடை பிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஆலயத்தை சேர்ந்த வர் 200-க்கும் மேற்பட் டோர் வெள்ளை ஆடை களை அணிந்தபடி குருத் தோலைகளை கையில் பிடித்தபடி ஓசன்னா பாடல் களை பாடி அந்த பகுதியின் ஊர்களை பவனியாக சுற்றி வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேக ரத்து போதகர் கிறிஸ்டோ பர், சேகர கஸ்பா ஆலய செயலாளர் கால்வின், திருப் பணியாளர் அருள் சீலன், பொருளாளர் பால் துரை, கணக்கர் பெனி ஜோசப், நிர்வாகிகள் அனிதா, அருள் ஞான பெல், போஸ், கிறிஸ்டோ யாபேஸ், ஜாண்ஸ்பர்ஜன், ஜெயக்குமார், டேவிட் மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
- கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.
சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்