என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோவில் கொள்ளை"
- மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள அத்திபள்ளம் பகுதியில் பாம்பாறு ஆற்றங்கரையோரம் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது.
இந்த முருகன் கோவிலில் ஆடி 1-ந் தேதி திருவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை உள்ளிட்ட சிறப்பு நாட்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் இருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது. வழக்கம் போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 4 பேர் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்றனர். அப்போது கோவிலுக்குள் சத்தம்வரவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த பார்த்தபோது, மர்ம நபர் 4 பேர் பணம் திருடியது தெரியவந்தது. உடனே அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கி கொண்டார்.மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், சிங்காரப்பேட்டை அருகே உள்ள மாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூவரசன் (வயது 23) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து கைதான பூவரசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்க சமயத்தில் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோவிலில் நடைபெற இருந்த திருட்டு சம்பவத்தை தடுத்ததால், உண்டியல் பணம், நகைகள் திருடு போகமால் தப்பியது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேஅள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் காளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக அவர் வந்தார்.
அப்போது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு காளியம்மன் சாமி கழுத்தில் இருந்த தங்கத்தாலி ¾ பவுன் நகையும், உண்டியல் பணம் ரூ.5000-த்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர் என்பது தெரிய வந்தது.
உடனே அவர் ஊர் கிராம மக்களிடம் தகவலை தெரிவித்தார். தகவலறிந்த கிராம மக்கள் கோவிலில் திரண்டு வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலிலை ஆய்வு செய்தனர்.
மேலும் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
மத்தூர் அருகே கும்பாபிஷேகம் நடந்த சில நாட்களிலேயே திரவுபதி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி, கோடிப்பதி பகுதியில் பழமை வாய்ந்த திரவுபதியம்மன் கோவில் புணரமைக்கபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து மகா பாரத சொற்பொழிவு விழாவும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இரவு கோவிலை பூசாரி பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
மார்கழி மாதம் என்பதால் இன்று அதிகாலையிலேயே கோவிலை திறக்க பூசாரி வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி, பீரோ உடைக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அக்கோவிலின் தர்மகர்த்தாவிடம் தெரிவித்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோவில் தர்மகர்த்தா மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கும்பாபிஷேகம் நடந்து சில நாட்களிலேயே கோவிலில் மர்ம நபர்கள் பணம், நகை திருடி சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் வண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவில் ஊழியர், கோவிலை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலுக்குள் இருந்த அறை திறந்து கிடந்தது. அறைக்குள் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது.
இது குறித்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கோவிலுக்குள் வந்த மர்ம நபர் அங்கிருந்த சமையலறை வழியாக லாக்கர் இருந்த ரூமிற்கு சென்றுள்ளார். பின்னர் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகவல் காட்டு தீ போல் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.
- பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
- உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.
இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.
- கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
கோயம்பேடு, பஸ் நிலையம் எதிரே உள்ள ஜெய்நகர் 11-வது தெருவில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.இன்று காலை வழக்கம் போல கோவிலை திறக்க பூசாரி வந்தார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோவில் நிராவாகி ரகுராம் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
- மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் மணி முத்தாற்றங்கரையிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு கோயில் பூசாரி வழக்கம் போல் பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டிச் சென்றுள்ளார். இன்று காலை, கோயில் பூசாரி தனவேல் கோயிலுக்கு வந்து பார்த்த போது கோயில் கதவு பூட்டை உடைத்து, நேற்று இரவு மர்ம நபர்கள் அம்மன் சிலை கழுத்திலிருந்து 6 கிராம் தாலி, 3000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோயில் உண்டியல் மற்றும் இரும்பு கம்பி கோயில் எதிரே உள்ள மணிமுத்தாற்றங்கரையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விருத்தாச்சலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்