search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடிபாடு"

    • மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
    • வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.

    குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

    வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

    வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

    • பீகாரில் கடந்த அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
    • இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 10 நாடிகளில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும். கனமழையால் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியதால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளுக்கு முன்புதான் பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.
    • இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின்  தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் மேற்கூரை இன்று [ஜூன் 28] அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர். பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் மீது மேற்கூரை விழுந்ததால் அவை பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல் வெளியகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி.
    • கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடைபெற்று வந்தன. அப்போது திடீரென இந்த கட்டிடம் இடியத் தொடங்கியது.

    மேலும் அதன் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விழுந்தன. சிறிது நேரத்தில் கட்டிடத்தில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.இதற்கிடையே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட 25வது வார்டு கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி உடனடியாக இதுகுறித்து கிழக்கு போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். இதையடுத்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்றது.

    இரவு நேரம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகியது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் கீழ ராஜ வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×