என் மலர்
நீங்கள் தேடியது "ஜி20 உச்சி மாநாடு"
- மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.
- இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றும், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின்போது அழைப்பு விடுப்பார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.
நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16ம் தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார்.
3 நாள் பயணத்துக்குமுன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளேன். இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்படும் முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்ட மைப்பு ஜி-20 ஆகும். இதில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
(ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
- 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மாமல்லபுரம்:
ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:
ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதிகளை இன்று மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு படை, கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.
- ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
மாஸ்கோ:
இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, அதை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜி20 வடிவத்தில் ரஷியா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.
ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
- ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.
ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்துவதற்காக டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) எந்த வீடும் இடிக்கப்படவில்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தலைநகரில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை எம்பி மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், "ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் எந்த வீடும் இடிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், அரசு அல்லது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.
டெல்லி 2021க்கான மாஸ்டர் பிளான் மற்றும் டெல்லிக்கான ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் விதிகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, டிடிஏ துணைத் தலைவரின் தலைமையில் ஒரு சிறப்பு பணிக்குழு ஏப்ரல் 25, 2018 அன்று அமைக்கப்பட்டது.
சிறப்பு பணிக்குழுவினர் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் கட்டிட விதிகளை மீறுதல் பற்றிய புகார்களை கண்டறிகிறது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஜி-20 உச்சி மாநாட்டிற்காக நடந்து வரும் சாலைகள், பூங்காக்கள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை முடிக்க ஏஜென்சிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லி அரசு காலக்கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதனால் டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறைவிட கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.
இதேபோல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.
இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல் மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நாட்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.
- பல நாடுகள் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன
- உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே புதின் கவனம் செலுத்துகிறார் என ரஷியா கூறியுள்ளது
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போரை அறிவித்து, அந்நாட்டை ஆக்ரமிக்கும் முயற்சியை துவங்கியது.
இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து தீவிரமாக போரிட்டு வருகிறது. 18 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் காரணமாக, இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ரஷியாவின் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது. இந்நிலையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, இந்தியாவில் புது டெல்லியில் நடக்க இருக்கிறது.
அங்குள்ள பிரகதி மைதானில் உள்ள சர்வதேச கண்காட்சி-மாநாட்டு மையத்தின் பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடக்க இருப்பதால், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். ரஷியாவும் ஜி20 அமைப்பில் உறுப்பினர் என்பதால் புதின் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், "ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு நேரில் வர போவதில்லை. உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மீதே அவரது முழு கவனமும் உள்ளது," என அந்நாட்டு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார்.
தனது நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நாடுகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதை தவிர்க்கவே அவர் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம் என பன்னாட்டு அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷியாவின் தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சியும் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என ஒரு சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் முடிவடைந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் புதின் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.
- நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
புதுடெல்லியில் அடுத்த மாதம் 8 -ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்போர் விமான நிலையத்தில் இருந்து மாநகருக்குள் செல்வதும், வருவதுமாக இருப்பார்கள் என்பதால், 3 நாட்களும் டெல்லி சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 8-ந்தேதி நள்ளிரவு முதல் 10-ந் தேதி நள்ளிரவு வரை மாநகரின் பல பகுதிகளில் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதேநேரத்தில், ஆம்புலன்ஸ் உட்பட அத்தியாவசிய வாகனங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து லுடி யன்ஸ் டெல்லிக்கு வருவோரின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு இடையேயான பஸ்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். ஆனால், பஸ் நிலையங்களில் அவற்றை நிறுத்த அனுமதிக்கப்படாது என போலீசார் தெரிவித்து உள்ளனர். டெல்லி மெட்ரோ சேவைகள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும், புதுடெல்லி பகுதியில் உள்ள சுப்ரீம் கோர்ட், கான் மார்க்கெட், மண்டி ஹவுஸ் மற்றும் மத்திய செயலகம் போன்ற நிலையங்கள் 3 நாட்களுக்கு மூடப்பட உள்ளன.
மேலும், முக்கிய மார்க்கெட் பகுதிகளான கன்னாட் பிளேஸ், கான் மார்க்கெட், மல்சா மார்க், ஷங்கர் மார்க்கெட், ஜன்பத், மோகன் சிங் பிளேஸ் மற்றும் பாலிகா பஜார் ஆகிய பகுதிகள் 3 நாட்களுக்கு மூடப்படும். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தினமும் சராசரியாக 80 விமானங்கள் புறப்படுகின்றன. அதுபோல 80 விமானங்கள் வருகின்றன. இந்த 160 விமானங்களையும் 3 நாட்களுக்கு ரத்து செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
ஜி-20 மாநாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டு தலைவர்களின் விமானங்களை இங்கு நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் 50 விமானங்கள் நிறுத்துவதற்கு இடம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் 20 விமானங்களை விமானப்படையின் பாலம் நிலையத்திலும், 20 விமானங்களை டெர்மினல்-1 லும், மற்ற விமானங்களை சரக்கு முனையம் மற்றும் டி-3 பகுதியில் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டால் டெல்லி மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்கலாம் என்பதால், அதற்காக முன்கூட்டியே பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜி-20 உச்சி மாநாட்டை வெற்றியடைய செய்வதில் டெல்லி மக்களுக்கு சிறப்பு பொறுப்பு உள்ளது. விருந்தினர்கள் அனைவரும் டெல்லிக்கு வருகின்றனர். நம் நாட்டின் நற்பெயர் சிறிதளவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை டெல்லி மக்கள் உறுதி செய்ய வேண்டும்.
வருகிற செப்டம்பர் 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் நிறைய சிரமங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செல்ல விரும்பும் பகுதிகளில் போக்குவரத்து விதிகளில் மாற்றம் ஏற்பட்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படலாம். அதற்காக டெல்லி மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்திய தேசியக் கொடி மிகவும் உயரத்தில் கர்வத்துடன் பறப்பதை உறுதி செய்யும் பொறுப்பு டெல்லி மக்களுக்கு உள்ளது' என தெரிவித்தார்.
- ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
- ஜி20 உச்சி மாநாடு காரணமாக டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதால், டெல்லியின் என்.சி.டி.-க்கு உட்பட்ட பகுதிகளின் வான் பரப்பில் பறக்கும் பொருட்கள்- அதாவது பாராகிலைடர்கள், பாரா மோட்டார்கள், தொங்கும் கிலைடர்கள், யு.ஏ.வி.-க்கள், யு.ஏ.எஸ்., மிகக் குறைந்த எடை கொண்ட விமானங்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானங்கள், ராட்சத பலூன்கள், சிறிய அளவிலான விமானங்கள் மற்றும் குவாட்காப்டர்கள் பறக்க அனுமதி கிடையாது என டெல்லி காவல் துறை ஆணயரகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இந்த பகுதியில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் பறக்கும் பொருட்கள் பறப்பதற்கான தடை உத்தரவு இன்று (ஆகஸ்ட் 29) துவங்கி, செப்டம்பர் 12-ம் தேதி ஆகிய 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- டெல்லியில் ஜி20 மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
- ஜி20 மாநாடு நடைபெறுவதால் டெல்லி முழுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாடு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதால் பொது மக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உச்சி மாநாடு நடைபெறுவதால், தலைவர்கள் பாதுகாப்பு காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பொது மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தலாம், பொதுமக்கள் காரணத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு ரெயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர 36 ரெயில் சேவைகள் குறுகிய காலத்திற்கு இயக்கப்படும் என்று தெரிகிறது.
- உலகின் முக்கிய தலைவர்கள் டெல்லிக்கு வருகின்றனர்
- பிரகதி மைதானத்தை சுற்றிலும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20.
இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு, இந்திய தலைநகர் புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகளின் தலைவர்களும், அதிபர்களும் புது டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தலைவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பிலும், விருந்தோம்பலிலும் எந்தவித குறைபாடுகள் இன்றி இரு நாட்களிலும் மாநாடு நடைபெற அரசு தரப்பில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.
பிரகதி மைதானத்தை சுற்றிலும் உள்ள பகுதிகளில் காவல் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானங்கள் முதல் பட்டங்கள் கூட பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
புது டெல்லி காவல்துறையின் ரெயில்வே காவல் பிரிவு, மத்திய ரெயில்வே காவல்துறையுடன் இணைந்து டெல்லி ரெயில்வே நிலையம் அருகே ரோந்து பணிகளை மேற்கொண்டது. பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது.
புது டெல்லியின் மதுரா சாலை, பைரோன் சாலை, புரானா கிலா சாலை, பிரகதி மைதான் சுரங்க சாலை ஆகிய இடங்களில் செப்டம்பர் 7 நள்ளிரவில் இருந்து செப்டம்பர் 10 வரை அனைவருக்குமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பால், பழங்கள், மருந்து மற்றும் காய்கறி ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
செப்டம்பர் 8 காலை முதல் செப்டம்பர் 10 வரை புது டெல்லி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள், அவசரகால வாகனங்கள், மற்றும் விமான நிலையம், பழைய டெல்லி ரெயில்வே நிலையம் மற்றும் புது டெல்லி ரெயில்வே நிலையம் செல்லும் வாகனங்கள் ஆகியவை மட்டுமே அடையாளங்கள் உறுதியான பயணிகளுடன் செல்ல அனுமதிக்கப்படும்.
இன்று (செப்டம்பர் 7) கோகுலாஷ்டமி விடுமுறையுடன், செப்டம்பர் 8-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 10-ம் தேதி வரை என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு புது டெல்லியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. புது டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படுவதை பெருமையாக கொள்வதால், இத்தனை கட்டுப்பாடுகளையும் டெல்லி மாநகர மக்கள் வரவேற்கிறார்கள்.