search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசு ஒழிப்பு"

    • வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையில் பஞ்சாயத்து மன்றம் அருகில் மருத்துவமுகாம் நடைபெற்றது.
    • மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட செங்குறிச்சி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செல்வி தலைமையில் பஞ்சாயத்து மன்றம் அருகில் மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

    இதில் வட்டார பூச்சியியல் வல்லுநர்கள் சுப்ரமணி, மகேஸ்வரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாக கொசுப்பழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமம் முழுவதும் பிளிச்சிங் பவுடர் போடப்பட்டது.

    • 60 வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
    • அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏற்கனவே கொசு ஒழிப்பு பணிக்கும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகை யிலும் 400 ஊழியர்கள் பணி யில் உள்ளனர். அவர்கள் கொசு ஓழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தென் மேற்கு பருவ மழை

    இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சமீப காலமாக சேலம் மாநகரில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவ திப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து கொசு ஒழிப்பு பணியை தீவிரப் படுத்த அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் ஆலோசனை செய்தனர்.

    தொடர்ந்து கொசுக்களை ஒழிக்கவும் டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்கவும் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்யும் வகையில் 200 ஊழியர்கள் விரைவில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    200 ஊழியர்கள்

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் அம்மாப் பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் தலா 30 பேர் பணியாற்றுவார்கள். மீதம் உள்ள 80 ஊழியர்கள் தலா 20 வீதம் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு வணிக வளாகங்கள், பள்ளி கூடங்கள், கல்லூரிகள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவைக்கு தகுந்தாற்போல அனுப்பி வைக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்கள் 120 பேர் தினமும் 300 வீடுகளுக்கு சென்று கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை களில் ஈடுபட வேண்டும், குறிப்பாக தண்ணீர் தேங்கும் வகையில், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப் பட்டுள்ள பொருட்களை அகற்ற வேண்டும்.

    மேலும் டெங்கு கொசுக் கள் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் அதில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது, கொசு வளர்வதை தடுக்க வீட்டு உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு அதற்கான அறிக்கையை சுகாதார துறை அதிகாரிகளிடம் தினமும் அளிக்க வேண்டும்.

    429 ரூபாய் ஊதியம்

    இந்த பணிக்கான ஊழி யர்கள் நியமனம் விரைவில் நடை பெற உள்ளது. தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்க்கப்படும் இவர்களுக்கு ஊதியமாக 429 ரூபாய் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    • வீடு- வீடாகச் சென்று சுகாதாரத் துறையினர் ஆய்வு

    கோவை,

    கோவை மாவட்டம், இடிகரை பேரூராட்சியைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு அண்மையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து துடியலூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காய்ச்சலின் தீவிரம் காரணமாக உயிரிழந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இடிகரை பகுதியில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலுக்கு மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையடுத்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா டெங்கு காய்ச்சலுக்கு பலியான பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் கூறுகையில் டெங்கு பாதிப்பின் தன்மை குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பகுதி முழுவதும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார்.

    ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜன், மருத்துவர்கள் பத்மபிரியா, மவுபியா ஆகியோர் உடனிருந்தனர்.

    கோவை, கணபதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார்.

    மாநகராட்சிப் பணியாளர்கள் வீடு-வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருள்களை அகற்றி, பொதுமக்கள் தேக்கிவைத்துள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியவும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    • காதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேக்கம் ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சி சுகாதாரத் துறை சார்பில், நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பல்லடம் 8-வது வார்டு பச்சாபாளையம் பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணிகளை வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொசு உற்பத்தியை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது :-

    பொதுமக்கள் தங்களது வீட்டில் குப்பைகள்,பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொதுமக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் டயர்களில் தண்ணீர் தேங்கி அதில் கொசு உற்பத்தியாகிறது. எனவே பொதுமக்கள் அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
    • கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுமருந்து அடிக்கும் பணி.

    வேதாரண்யம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரைபடியும், தலை ஞாயிறு வட்டார மருத்துவர் (பொஅலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதல்படியும், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நாகை.செல்வன் தலைமையில், அவரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் முன்னிலையில் கொசுக்களை கட்டுப்படு த்தும் வகையில் கொசும ருந்து அடிக்கும் பணியை அவரிக்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணி யாளர் குழுக்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தினசரி குறிப்பிட்ட விகிதத்தில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக குடிநீர் தொட்டி இயக்குபவர்களை கொண்டு குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய விரைவு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ×