search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசி தமிழ் சங்கமம்"

    • தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
    • ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    கன்னியாகுமரியில் இருந்து காசி செல்லும் காசி தமிழ்ச்சங்க விரைவு ரெயில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. இந்த ரெயிலுக்கு பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் கட்சியின் துணைத் தலைவர்கள் செந்தில்குமார்,ஜம்போடை சங்கர்,மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம்,தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

    அந்த ரெயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் பூசனிக்காய் சுற்றி உடைத்தும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

    • வாரணாசியில், கலாசார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பு வருகின்ற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • தெற்கு ரெயில்வே சென்னை சென்டிரல், கன்னியாகுமாரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    சென்னை:

    புனித நகரமான வாரணாசியில், கலாசார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பு வருகின்ற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.

    இதனால் மக்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சென்னை சென்டிரல், கன்னியாகுமாரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 15, 23, 27-ந்தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண்.06101), (06109), (06113) அடுத்த 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 20, 28-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06102), (06110), (06114) அடுத்த 3-வது நாள் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

    இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 16, 20-ந் தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06103), (06107) அடுத்த 4-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 22, 26-ந் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06104), (06108) அடுத்த 4-வது நாள் காலை 11.50 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும்.

    இதேபோல, கோவையில் இருந்து டிசம்பர் 19, 25-ந்தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06105), (06111) அடுத்த 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 24, 30-ந்தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06106), (06112) அடுத்த 4-வது நாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • வாரணாசியில் நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார்.

    பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் இடையே பாரம்பரிய ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்று வந்த காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இந்த நிறைவு விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார் . இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    விழாவில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசுகையில், வாரணாசியில் ஒரு மாதமாக நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, நம் நாட்டின் கலாசார பெருமையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகும் நம்

    தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழகத்தில் இருந்து வந்த சகோதர, சகோதரிகளுக்கு காசி மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். காசியைப் பற்றிய நினைவுகளை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என குறிப்பிட்டார்.

    • வாரணாசியில் நடந்து வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று நிறைவு பெறுகிறது.
    • இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ம் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 16) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இவர்களுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட 12 விரைவு ரெயில்களில், இதற்காக ஒதுக்கப்பட்ட 36 பெட்டிகளில் மொத்தம் 2,592 பேர் பயணம் செய்துள்ளனர் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.
    • நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன என்றார்.

    லக்னோ:

    தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது.

    வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து பல்துறை பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரெயில்களில் காசி, பிரயாக்ராஜ், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி இன்று நடந்தது. சமூகம் மற்றும் தேச கட்டமைப்பில் கோவில்களின் பங்கு என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    வணக்கம் காசி என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    உலகளவில் இந்தியாவின் எழுச்சி காணப்படுகிறது.

    நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன. அவை நமது வாழ்வின் வழியாகும்.

    நம்பிக்கை மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான இடமாக மட்டும் கோயில்கள் இருக்கவில்லை. சமுதாய நலக் கூடங்களாக இருந்தன. மக்கள் ஒன்று கூடுவதற்கான இடமாகவும், கலையை ஊக்குவிப்பதாகவும் இருந்தன.

    இந்திய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பவையாக கோயில்கள் இருந்தன. அவை நமது வாழ்க்கையின் பாதையாகவும் இருந்தன.

    என தெரிவித்தார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
    • வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
    • காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று தம்பதி பூரிப்புடன் தெரிவித்தனர்.

    வாரணாசி:

    உத்தரபிரதேசத்தின் காசியில் தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன், ஓசூரில் இருந்து காசிக்கு தமிழகத்தை சேர்ந்த தம்பதி ராஜன் - ராமலட்சுமி தம்பதி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    ஓசூரில் இருந்து பயணத்தை தொடங்கி, இடையில் உணவுக்காகவும் எரிபொருளுக்காகவும் செலவிட்ட நேரத்தையும் சேர்த்து, 32 மணி நேரத்தில் 1,857 கி.மீ. தூரம் பயணம் செய்து காசியை அவர்கள் சென்றடைந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'இந்த பயணம் எங்களின் திருப்திக்காக மேற்கொள்ளப்பட்டது, சாதனை புத்தகத்தில் பதிவதற்காக அல்ல. காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள உறவு பற்றி தமிழ்நாட்டில் இருக்கும்போது கூட எங்களால் இவ்வளவு விஷயங்களை தெரிந்துகொள்ள முடியவில்லை. இங்கே நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறோம். காசி தமிழ் சங்கமம் நிகழ்வை காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்று பூரிப்புடன் தெரிவித்தனர்.

    கடந்த ஓராண்டாக மோட்டார் சைக்கிளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட இவர்கள் தற்போது நேபாளம் செல்ல திட்டமிட்டனர்.

    • காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை.
    • இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.

    வாரணாசி:

    காசியில் நடந்துவரும் தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநில மந்திரி சஞ்சீவ் கோண்ட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப்பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

    'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசுகிறார். தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

    இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறைய கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல.
    • வர்த்தகத்தால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடு இந்தியா.

    வாரணாசி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தையொட்டி, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஆன்மீகமும், வர்த்தகமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், வாழ்க்கை முறையும், மொழியும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம். தமிழகத்தில் காஞ்சிப்பட்டின் வளர்ச்சியை, காசி பனாரஸ் பட்டில் காண முடிகிறது. இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும்.

    இந்த தன்மையை மனதில் கொண்டு கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் பாடினார். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

    மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பினும், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என அந்த நூலில் காந்தி கூறியுள்ளார். இதனை தற்போது காசியில் காண முடிகிறது. காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது.

    தொன்மையான கலாச்சாரத்துடன் நாட்டை காசி இணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கலாச்சாரத்தை பேணிக்காப்பது நமது கடமை.
    • நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் உறவை பிரதமர் மெருகேற்றி உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், தமாகா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன் கலந்து கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


    வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நமது கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை பேணிக்காப்பது தான் நமது கடமை. இந்த கடமையை முன்னிறுத்தி பிரதமர் நரேந்திரமோடி காசி தமிழ் சங்கத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

    ராமேஸ்வரம் - காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெற்று வருகிறது.

    மேலும், இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடைபெறுவது வாழ்த்துக்குரியது, பாரட்டுக்குரியது. இந்த விழாவிற்காக தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது

    காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்.

    இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

    மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

    வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ‌.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார்.
    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.

    புதுச்சேரி:

    மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் காசியில் நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், புதுவை கவர்னர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.

    இதையேற்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார். நாளை 25-ந் தேதி வாரணாசியில் தங்கி அங்கு நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.

    ×