என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தி.மு.க. கூட்டம்"
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
- நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாகவும் உள்ளது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக த்தில் நடைபெற்ற தி.மு.க. செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தவைலர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் ஒன்றியம் வாரியாக, மாவட்டம் முழுவதும் என்ன நிகழ்வுகள் நடத்தலாம் என்பது குறித்து நடைபெறுவது மட்டுமின்றி, வரும் 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்தும், என்ன பணிகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்வதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
பா.ஜ.க. அரசு யார் மீது வழக்கு போடலாம், யாரை மிரட்டி சிறையில் அடைக்கலாம் என்று திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. முதல்-அமைச்சர் சொன்னதை போல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். போர் களத்திற்கு செல்லும் போது எப்படி ஆயுதத்திற்கு பட்டை தீட்டுவோமோ, அதேபோல் 2024-ல் நடைபெறும் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு மு.க.ஸ்டாலின் வழியில், அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்.பி. ஆகியோர் தேர்தல் களத்தை முன்னெடுத்துச் சென்று பணியாற்றி வருகின்றனர்.
மோடியின் மிரட்டலுக்கு 2024-ல் இந்தியா கூட்டணி முற்றுப்புள்ளி வைக்கும். எழுச்சி மாநாடு சம்பந்தமாக 4-ந் தேதி நமது மாவட்டத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி, இரு மாவட்டங்களின் சார்பில் 1000 பொற்கிழிகள் கழக முன்னோடிகளுக்கு வழங்குகிறார்.
அதேபோல், நடைபெறும் கூட்டத்திற்கு தெற்கு மாவட்டத்திலிருந்து சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். வடமாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
நம்முடைய இந்தியா கூட்டணி வலுவான கூட்டணியாகவும், எதிர்கட்சிகளின் கூட்டணி உதிரி கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. அண்ணாமலையின் நடைபயணத்தால் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாயையொட்டி தெற்கு மாவட்டத்தில் புதிதாக 100 கொடி கம்பங்கள் அமைப்பது, கலைஞரின் இமாலய சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவது, வருகிற 4-ந் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்து இளைஞரணி கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர் மணி, மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, ராஜலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் பாலசிங், நவின்குமார், ரமேஷ், முத்து முகம்மது, சுடலை, ரவி, ஜோசப், கோட்டாளம், இசக்கிபாண்டியன், பாலமுருகன், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சரவணக்குமார், இளைய ராஜா, பகுதி செயலாளர் ஆஸ்கர், மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரவி என்ற பொன்பாண்டி, சாரதா பொன்இசக்கி, ஆரோக்கியமேரி, பேரின்பராஜ் லாசரஸ், செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, ஜான்பாண்டியன், விபிஆர் சுரேஷ், துறைமுகம் ராமசாமி, ராஜேந்திரன், ஜனகர், ஆனந்த், மகாவிஷ்ணு, பேரூர் செயலாளர்கள் இளங்கோ, ராயப்பன், சுப்புராஜ், நவநீத முத்துக்குமார், கண்ணன், கோபிநாத், ராமஜெயம், முத்துவீரபெருமாள், நவநீத பாண்டியன், ஜமீன் சாலமோன், மால்ராஜேஷ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ரெய்டு மூலம் தங்கமணி, விஜயபாஸ்கரை அடிமையாக வைத்தனர்
- கழக முன்னோடிகளை பார்க்கிற போது கலைஞர் இல்லையே என்ற எனது ஏக்கம் தீர்க்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், 10 ஆயிரத்து 100 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் ஆகியவை திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நேற்று இரவு நடை பெற்றது.
கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்ச ரும், தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப் பினருமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம். பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், எஸ். அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 10,100 கழக முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் பொற்கொழி வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசியதாவது:-
இன்று மிக மிக முக்கியமான நாள். 1968-ம் ஆண்டு இதே ஜூலை 18-ந் தேதி தான் பேரறிஞர் அண்ணாவால் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது அதே நாளில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்றைக்கு எப்படி தமிழ் நாடு என்றபெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்களோ அப்படியே இன்றைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அன்று அண்ணா உறுதியோடு இருந் தது போல இன்றும் நமது தலைவர் ஸ்டாலின் உறுதியோடு தமிழ்நாடு என்றபெயரை மாற் றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தமிழ்நாடு என்ற பெயருக்கு மாநிலத்தின் ஆளுனர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் இன்றைக்கு அ.தி.மு.க. ஆண்டு கொண்டி ருந்தால் இன்றைக்கு தமிழ் நாடு என்று பெயரையும் மாற் றியிருப்பார்கள் ஆகவே தமிழனை மட்டுமல்ல தமிழ்நாட்டையும் நமது தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார். இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆட்சியாக தி.மு.க.ஆட்சி உள்ளது.
ஆனால் பாசிச பா.ஜ.க. அரசு தி.மு.க.வை எப்படியாவது அழிக்கலாம் என்று பகல் கனவு காண்கிறது. அதற்காக அமலாக்கதுறையினர் மூலம் நம்மை மிரட்டி பார்க்கிறது தி.மு.க.வில் பல அணிகள் உள்ளன.
இளைஞரணி, மகளிர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி என பல அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணி ஈ.பி.எஸ். அணி, தினகரன் அணி, சசிகலா அணி, ஜெ.தீபா அணி, ஜெ.தீபா டிரைவரின் அணி என பல அணிகள் உள்ளது.
அதேபோல் பா.ஜ.க.வில் ஈ.டி. அணி (அமலாக்கத்துறை), சி.பி.ஐ. அணி, முத்துறை அணி என்று அணிகள் உள் ளன. இந்த அணியை கொண்டு பா.ஜ.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி பார்த்தது ஒன்றும் கிடைக்க வில்லை.
இப்போது அமைச்சர் பொன்முடியை மிரட்டி பார்க்கிறது அங்கும் ஒன்றும் கிடைக்காது. சட்ட ரீதியாக சட்டப் போராட்டம் நடத்தி இதனை நாங்கள் எதிர்கொள்வோம்.
விஜயபாஸ்கர், தங்கமணி போன்றவர்களிடம் அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தி அவர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டார்கள். இது அ.தி.மு.க. ஆட்சி. இல்லை.நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம். ஈ.டி.க்கும் (அம லாக்கத்துறை) பயப்பட மாட் டோம். தி.மு.க. கிளை கழக செயலாளர் கூட உங்கள் மிரட்டலுக்கு பயப்பட மாட்டான்.
நான் முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் தலைவர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தேன். அந்த வாய்ப்பை தந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது என் வாழ் நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
கழக முன்னோடிகளை பார்க்கிற போது கலைஞர் இல்லையே என்ற எனது ஏக்கம் தீர்க்கிறது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் உங்களை வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. இளைஞரணி பொதுக்கூட்டங்கள் நடந்தது.
- தன்ராஜ் தலைமை தாங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ் தலைமை தாங்கினார். அவை தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தி.மு.க. நிர்வாகி முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்யா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோன்று அலங்காநல்லூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நகர செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், பேரூர் இளைஞரணி செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அலங்காநல்லூர் மேற்கு ஒன்றியம் பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பரந்தாமன் தலைமை தாங்கினார். இளைஞரணி மருது, பொறியாளர் அணி ராகுல் பிரசாத், மாணவரணி பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போடி காமராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் பேசினர்.
- பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து ஆலோசனை
- 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான ஆர்.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ரவிக்குமார் முன்னிலையில் வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணையன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் பசுபதி கலந்துகொண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பல்வேறு நல திட்ட பணிகள் குறித்து பேசினார்கள்.
தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன், அரக்கோணம் ஒன்றிய குழு துணைத் தலைவர் புருஷோத்தமன் மற்றும் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் நடைபெற உள்ளது.
- கூட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.
தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-
தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் டிசம்பர் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி வேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் அரசு விழா வில் கலந்து கொள்ள வருகிறார். அந்த விழாவினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோ சனைகள் நடைபெற உள்ளது.
எனவே இந்த கூட்டத்தில் தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்