என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசிகர்கள்"

    • வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்துள்ளனர்.
    • ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டு வருகின்றனர்.

    2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 17 ஆண்டுகள் கழித்து பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் வீரர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். காலையில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து இந்திய வீரர்கள் மும்பைக்கு புறப்படனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்களை வரவேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். வான்கடே மைதானத்தில் வாழ்த்து நிகழ்ச்சியும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இதனால் மைதானத்தில் ரசிகர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். அப்போது ரசிகர்கள் அனைவரும் ஹர்திக் ஹர்திக் என முழக்கமிட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்ட்யாவை ரசிகர்கள் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் கடுமையான கிண்டல், கேலி செய்த வேளையில் தற்போது இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவரை உற்சாகப்படுத்தும் வகையில் ஹர்திக் என்று அவரது பெயரை கோஷமிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மகிழ்ச்சியான தருணங்களும், என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது.
    • ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர்.

     டி 20 உலகக்கோப்பை கொண்டாட்டங்கள் நேற்று மும்பையில் களைகட்டியது. வான்கடே மைதானத்தில் வைத்து இந்திய வீரர்களும் ரசிகர்களும் இந்த வெற்றிடயை கொண்டாடித் தீர்த்தனர். மகிழ்ச்சியும் உணர்வுபூர்வமான தருணங்களும் மைதானத்தை நிறைத்தது.

    மகிழ்ச்சியான தருணங்களையும் என்றும் மறக்கமுடியாத நினைவுகளை ரசிகர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் நேற்றைய தினம் வழங்கியுள்ளது. டிஜே பாடல்கள் மைதானத்தை அதிரவைத்த நிலையில் இந்திய வீரர்கள் அவற்றுக்கு வெற்றிக் களியாட்டம் போட்டனர்.

     மைதானத்தில்  நடந்த ரெயின் டான்ஸ் பார்ட்டியில் ஷாருக் கான் படத்தின் பிரபல பாடலான சக் தே இந்தியா பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்கு ரோகித் சர்மாவுடன் அணி வீரர்கள் அனைவரும் நடனமாடினர். ரசிகர்களும் அவர்களின் உற்சாக மனநிலை தொற்றிகொள்ளவே வான்கடே மைத்தனமே மகிழ்ச்சியில் திளைத்தது. பாடல்களுக்கு இந்திய வீரர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    • இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
    • லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது

    டி20 உலகக்கோப்பையை வென்று நாடு திரும்பியுள்ள இந்திய வீரர்களுக்கு நேற்று மும்பையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வான்கடே மைதானத்தில் நடக்கும் பாராட்டு விழாவுக்கு செல்லும் வழியில் கடற்கரை ஓரமாக மரைன் டிரைவில் நடந்த வெற்றி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இந்திய அணி வீரர்களை உற்சாகப் படுத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் இந்தியர்களின் நற்பண்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. அதாவது ஊர்வலத்தின்போது மரைன் டிரைவ் சாலை வழியாக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. உடனே அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அனைவரும் ஒன்றுதிரண்டு விலகி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

    லட்சக்கணக்கானோர் ஒரே சமயத்தில் விலகி வழி ஏற்படுத்தும் வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனரும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

    • முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
    • ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது.

    இந்திய திரையுலகில் தற்போது பெயர் சொல்லும் முன்னனி நடிகைகளில் ஒருவர் தன்னா. நடிகை, மாடல் மற்றும் டேன்ஸர் என பல பாத்திரங்களை தன்னுள் கொண்டு திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் ஒருவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழிகளிலும் தனது முத்திரையை பதித்தவர். கதாபாத்தரத்தை முழுமையாக ஏற்று நடிப்பதிலும் , ஒரே படத்தில் பல குணங்களை வெளிக்காட்டி நடிப்பதிலும் கைதேர்ந்தவர்.இவரது திரைபயணம் 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ள தமன்னா. இதுவரை மூன்று மொழிகளிலும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.

    நடிகை தமன்னா சமீப காலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- "சிறு வயதிலேயே நடிகையாக வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. அதை நிறைவேற்றும் விதமாகவே எனது முடிவுகளும் இருந்தன. அதுதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

    சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதற்காக 100 சதவீதம் உழைத்தேன். இப்போது சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி எனக்கு கிடைத்துள்ளது.

    ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. அதுமட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் 15 நொடி ரீல்ஸை கூட ரசித்து பார்த்து பொழுதை கழிக்கிறார்கள்.

    ரீல்ஸ் பார்க்கும் ரசிகர்களை கவர்வது நடிகர், நடிகைகளுக்கு பெரிய சவாலாகி இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டி உள்ளது. ரீல்ஸ்கள் நடிகைகளான எங்களுக்கு பெரிய போட்டியாக மாறி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • ராயன் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    சமூக வலைத்தளங்களில் ராயன் படத்தின் நடித்த துஷரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்னா முரளி, மற்றும் பலர் அவர்களது வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

    ரசிகர்கள் அவர்களது அன்பை மற்றும் வாழ்த்தை தெரிவிக்க இன்று தனுஷின் வீட்டை சூழ்ந்தனர், அங்கு தனுஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தாற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார்.
    • பட்டாசு வெடிக்கும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் என எனது தந்தை கூறினார்.

    தமிழில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருந்தார்.

    அவர் கூறும்போது 'சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்றார். அவர் சொன்னது சரி என்று தோன்றியது. அன்று முதல் இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை'' என்றார்.

    இந்த பேச்சு வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் ரகுல் பிரீத் சிங்கை சாடி வசைபாடி வருகிறார்கள்.

    விலை உயர்ந்த ஆடை அணிகிறீர்களே, சாதாரண உடை அணிந்து பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்வீர்களா? நீங்கள் விலை உயர்ந்த உணவு சாப்பிடாமல் சாதாரண உணவை சாப்பிடலாம் இல்லையா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது பரபரப்பாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • போட்டியின்போது நடுவர் சர்ச்சைக்குரிய முடிவு வழங்கியதால் ரசிகர்கள் கடுங்கோபம்.
    • கோபம் அடைந்த ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டோர் பலி.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.

    கினியாவின் 2-வது மிகப்பெரிய நகர் N'Zerekore. இங்கு சுமார் 2 லட்சம் மக்கள் வசித்தி வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இரண்டு அணி ரசிகர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர். நடுவர் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கியதால் கோபம் அடைந்த ரசிர்கள் மைதானத்தை முற்றுகைியட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.

    கினியாவின் ஜுன்டா தலைவர் மமாதி தவும்பௌயா ஏற்பாடு செய்திருந்த கால்பந்து தொடரின் ஒரு பகுதியான இந்த போட்டி நடத்தப்படடுள்ளது. கினியாவில் இது போன்று கால்பந்து தொடர் நடத்தப்படுவது வழக்கம்.

    • சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    • நடிகர் நேத்ரன் சக நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடிகராக பணியாற்றி வருபவர் நடிகர் நேத்ரன். சின்னத்திரையில் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்களில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய நேத்ரன் சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

    நடிகர் நேத்ரன் சக நடிகையான தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர். நேத்ரன் மனைவி தீபாவும் பிஸியாக பல தொடர்களில் நடித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் இன்று நேத்ரன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

    • முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் குவித்தது.
    • ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களை குவித்தது. நிதானமாக விளையாடி அரைசதம் கடந்த ஸ்மித் 68 ரன்களுடனும் பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஜடேஜா, ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர். 

    அதன்படி 87 ஆயிரத்து 242 ரசிகர்கள் இந்த போட்டியை நேரில் கண்டு களித்துள்ளனர்.

    • உள்ளூர் போட்டியில் விளையாடும் விராட் கோலியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் டெல்லி மைதானத்தில் அலைமோதியது.
    • விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்று அறிவித்தது. அந்த வகையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.

    இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடினார். இன்று பேட்டிங் செய்ய களமிறங்கிய விராட் கோலியை பார்க்க அந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து, 15 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில், ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் வீசிய பந்தில் போல்டு ஆனார்.

    உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்நிலையில் இந்திய அணியின் ரன் மிஷினாக விளங்கிய விராட் கோலியை போல்ட் செய்த ரெயில்வே அணியின் ஹிமான்ஷூ சங்வான் ஆக்ரோஷமாக மகிழ்ச்சியை கொண்டாடினார். இதனால் விராட் கோலியை போல்ட் செய்த வீரர் யார் என்பது குறித்து விவரங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவரிடம் மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர்கள் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
    • போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

    இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை நாக்பூரில் (பிப்ரவரி 6) நடைபெறுகிறது.

    இந்நிலையில், 2 ஆவது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது, இதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க கூடியதால் டிக்கெட் கவுண்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    கூட்டநெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தார். இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குடிப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டாக்கில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×