search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரப்பர் தோட்டம்"

    • ஆண் ஒருவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது
    • பிரசன்னகுமாருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் அரு மனை அருகே உள்ள மஞ்சாலுமூடுவை அடுத்த தாணி மூடு பகுதியில் தனி யாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. நேற்று இந்தப் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

    அந்த வழியாக சென்றவர்கள் புகை மூட்டம் வந்த பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஆண் ஒருவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அருமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்து கிடந்தவர் மஞ்சாலுமூடு அருகே உள்ள மாலைக்கோடு சிறக்கரை பகுதியை சேர்ந்த பிரசன்ன குமார் (வயது 63) என்பதும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

    மேலும் அவர் இறந்து கிடந்த ரப்பர் தோட்டம் அவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் தீப்பிடித்ததால் அதை அணைக்க சென்ற போது தவறி விழுந்து பிரசன்ன குமார் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    பிரசன்னகுமாருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 

    • பரளியாறு கோட்ட மேலாளர்- ஊழியர் மீது வழக்கு
    • எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தபோது எந்திரம் தவறுதலாக ராஜ்குமார் நெஞ்சில் தாக்கியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தடிக்காரன் கோணம் பத்மநாப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவரது மனைவி மீனா குமாரி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமார் கீரிப்பாறை அரசு ரப்பர் கழக கோட்டத்திற்கு உட்பட்ட பரளியாறு பிரிவில் களப்பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் இவர் பரளியாறு ரப்பர் தோட்டம் பகுதியில் எந்திரம் மூலம் ரப்பர் மரத்தை சுற்றியுள்ள பூக்களை வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது எந்திரம் தவறுதலாக ராஜ்குமார்நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து சக தொழிலாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கீரிப்பாறை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பரளியாறு கோட்ட மேலாளர் பிரபாகரன், வடமாநில ஊழியர் சந்திப் (25) ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 30-ந் தேதி நடைபெறும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் சுமார் 2,500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.இவர்கள் அனைவரும் தாங்கள் வேலை பார்க்கும் ரப்பர் தோட்டத்துக்கு அருகிலேயே வசித்து வருகின்றனர்.

    ரப்பர் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக 40 ரூபாய் சம்பள உயர்வு வழங்க அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அரசு ரப்பர் கழக நிர்வாகம் 40 ரூபாய் சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 24 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ரப்பர் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 30-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். ஆனால் போராட்டம் அறிவிக்கப்பட்டதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்த வந்தவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

    ×