search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை பிடிப்பு"

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    • ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது.
    • பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள அவினாசிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). வேன் ஓட்டுநர். இவர் நேற்று (திங்கட்கிழமை) மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல காங்கயம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் பொன்னுசாமி பேருந்திற்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.

    உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னுசாமியை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் ஆவேசம் அடைந்து அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கயம் பஸ் நிலைய சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்கின்றனர்.
    • இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

    திடீர் ஆய்வு

    இதையடுத்து எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் போக்குவரத்து ஆய்வா ளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்க ளாக பல்வேறு இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் நேற்று மாலை போக்குவரத்து அலுவலர்கள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் வேன் ஒன்று உரிய அனுமதி இன்றி அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றி வந்ததை கண்டறிந்த போக்குவரத்து துறையினர் வாகனத்தை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வாகன உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன டிரைவரிடம் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் இது போன்று உரிய அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது கண்டறி யப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
    • லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே காளிவேலம்பட்டி, நடுவேவேலம்பாளையம், கிடாத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் எம்-சாண்ட்,ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் பாரத்தை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயமும், சாலை பழுதடைதலும் ஏற்படுவதாக அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்,பொதுமக்கள்,மற்றும் விவசாயிகள் நேரிடையாக களத்தில் இறங்கி கடந்த 2 நாட்களாக அதிக அளவில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் பாரம் ஏற்றி சென்ற கேரளா மாநில லாரிகளை சுக்கம்பாளையம் கிராம மக்கள் சிறை பிடித்து,போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் சுக்கம்பாளையம் பகுதியில் நேற்று மாலை அதிக அளவு கனிமங்களை ஏற்றி வந்த 6 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கனிமங்களை ஏற்றி வந்ததாக அந்த லாரிகளுக்கு ரூ.1,30,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் வரை, லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • மக்கள் மண்ணை ரோட்டில் கொட்டிய லாரியை சிறை பிடித்தனர்.
    • டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சி பகுதியில் ஜல்லி கிரசர்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிரசர்களில் இருந்து ஜல்லி கற்கள், ஜல்லி மண் ஆகியவற்றை செந்தாம்பாளையம், புலவனூர் ஆகிய ஊர்கள் வழியாக தினமும் ஏராளமான லாரிகள் கொண்டு செல்கிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பகல் 12 மணி அளவில் செந்தாம்பாளையம் வழியாக ஒரு டிப்பர் லாரி ஜல்லி கற்கள் கலந்த மண்ணை கொண்டு சென்ற போது லாரியின் பின்பக்க கதவை சரியாக மூடாததால் தார் ரோட்டில் நீண்ட தூரத்திற்கு ஜல்லி கற்களுடன் மண் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் மண்ணை ரோட்டில் கொட்டிய லாரியை சிறை பிடித்தனர். மேலும் அந்த வழியாக வந்த மற்ற டிப்பர் லாரிகளையும் போக விடாமல் தடுத்தனர்.

    இதனைத்தொடர்ந்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது இனிமேல் ஜல்லி கற்கள் மற்றும் ஜல்லி மண் டிப்பர் லாரிகளில் ஏற்றி செல்லும் போது பாதுகாப்பாக கொண்டு செல்வதாக பொதுமக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சிறை பிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்தனர்.

    • கழிவு மண் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    • இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு வீணாகும் கழிவு மண்ணை ஒரு டிப்பர் லாரியில் ஏற்றி தனியாருக்கு சொந்தமான கிரசருக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது ஈங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூர் வழியாக கழிவு மண் ஏற்றி சென்ற லாரி சென்ற போது புலவனூரை சேர்ந்த பொதுமக்கள் கருக்கங்காடு என்ற இடத்தில் அந்த லாரியை சிறை பிடித்தனர்.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் முத்துராஜ், ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலர் ரதிபிரியா, சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், ஈங்கூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பொதுமக்கள் அவர்களிடம் கூறுகையில்,

    தொழிற்சாலை கழிவுகளை லாரியில் கொண்டு சென்று கொட்டுவதால் புலவனூர் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் லாரியில் கொண்டு சென்று கழிவுகளை கொட்ட கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொது மக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறை பிடிக்கப்பட்ட லாரியை போலீசார் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

    • பனை மரங்கள் ஏற்றி சென்ற லாரிலை போலீசார் சிறை பிடித்தனர்
    • அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

    ஆலங்குடி :புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் மர்ம நபர்கள் சிலர் அரசு இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள பனை மரங்களை வெட்டி விற்பனை செய்து வருவதாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் முறையிட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு பனை மரங்களை வெட்டி லாரியில் மரங்களை ஏற்றிக் கொண்டு பனங்குளம் பாலம் பகுதியில் வந்தபோது அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் அந்த வாகனத்தை சிறைப்பிடித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குளமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் காவல் துறையினர் மரங்களை ஏற்றி வந்த வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

    • திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து வருவதில்லை.
    • மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் சேவூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திண்டிவனம் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து கீழ் சேவூர் கிராமத்திற்கு செல்லும் பஸ்கள் தொடர்ந்து வருவதில்லை. மேலும் தற்போது ஆவணிப்பூரில் இருந்து வரும் பஸ்களும் ஒரு சில நாட்களில் கீழ் சேவூர் கிராம த்திற்கு வரவில்லை. மாலை நேரங்களில் பஸ் சரி வர வராததால் இரவு 8 மணிக்கு மேல் பள்ளி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

    இதனால் ஆவணிப்பூரில் இருந்து வந்த பஸ்சையும், அதேபோல திண்டிவனத்தில் இருந்து ஆவணிப்பூர் வந்த 2 அரசு பஸ்சையும் சிறப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து 2 அரசு பஸ்சையும் சிறைப்பிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×