என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீதிபதிகள்"
- நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
- சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறானது நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணித்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
சமீப காலமாக தாமிரபணி ஆறு உற்பத்தியாகும் இடத்தில் வி.கே.புரம் நகராட்சியில் தொடங்கி நெல்லை மாநகர பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வரையிலும் சுமார் 60 இடங்களில் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், குடிக்கும் வகையில் இருந்த அந்த தண்ணீர் மாசுபட்டுவிட்டது.
இதனால் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு முத்தாலங் குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த நீதிபதிகள் கடந்த மார்ச் மாதம், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், படித் துறைகள், கல்மண்டபங் களை சீரமைக்க வேண்டும் என தீர்ப்பளித்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு இன்று தாமிரபரணி நதியை நேரில் பார்வையிட வருவதாகவும், அன்றைய தினம் அனைத்து அதிகாரிகளும் அங்கு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்படி இன்று காலை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் மதுரையில் இருந்து நெல்லை வந்தனர்.
நீதிபதிகள் முதலில் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் உள்ள பேரின் பவிலாஸ் தியேட்டர் அருகே ஆற்றுக்கு செல்லும் இறக்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட நீதிபதிகள் சந்திப்பு சிந்துபூந்துறை நதிக்கரை, உடையார்பட்டி நதிக்கரை, ராமையன்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் சத்திரம்புதுக்குளத்தில் பச்சை நிறத்தில் மாறிய தண்ணீர் மாறியதை பார்வையிட்டனர்.
பின்னர் டவுன் குறுக்குத்துறை பகுதியில் ஆய்வு செய்த நீதிபதிகள், கல்லணை பள்ளி அருகிலும், முருகன்குறிச்சி பாளையங் கால்வாய் ஆகிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தலைமையில் சுற்றுலா மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன், ராபர்ட் புரூஸ் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணியில் ஆய்வு செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும், நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவு.
- அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் ஐந்து பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை ஏற்று ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நீதிபதி விக்டோரியா கவுரி, நீதிபதி பி.பி. பாலாஜி, நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், நீதிபதி ஆர். கலைமதி மற்றும் நீதிபதி கே.ஜி. திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதோடு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உத்தரவின் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 63-ஆக அதிகரித்துள்ளது.
புதிய நீதிபதிகள் நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, காலி பணியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.
- 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு.
- கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு.
உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை வரும் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு, திரைப் பிரபலங்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2019ம் ஆண்டில் அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, தற்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஆர். எஸ். மங்கலம் சுகாதார கட்டிடத்தை முதன்மை செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறி உள்ளது.
- வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மதுரை
ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், சுற்று வட்டார கிராமத்தில் மக்கள் பயன் பெறும் வகையில் அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் பலவீன மாக காணப்படுகிறது. மேற்கூரைகள் இடிந்து விழுகின்றன. எனவே சுகாதார நிலைய கட்டிடத் தினை இடித்து புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், அந்த கட்டிடத்தை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்து, அந்த கட்டிடம் பலவீனமாக உள்ளது என ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் வைத்தியநாதன், பரத சக்கர வர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மிகவும் பழமையான சிதிலமடைந்த இதுபோன்ற கட்டிடங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மக்கள் சிகிச்சை பெறுவது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இந்தக் கட்டிடம் முழுமையாக சேதமடைந்து உள்ளது அறிக்கையிலுள்ள புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.
எனவே, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ். மங்கலம் மருத்துவ மனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் கட்டிடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தும் நடவடி க்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த கட்டி டத்தை பழுது பார்ப்பது என்பது பயனளிக்காத ஒன்றாக தெரிகிறது.
எனவே இந்த கட்டிடத்தில் செயல்படும் மேம்படுத்தப் பட்ட ஆரம்ப சுகாதார நிலத்தை உடனடி யாக பாது காப்பான வேறு கட்டி டத்திற்கு மாற்றி மருத்துவ சிகிச்சைகள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுகாதாரத் துறை செயலாளர் ஆய்வு குறித்து விரிவான அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
- ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
- தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம்.
சென்னை:
முதன்மை மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்து வந்த ஆர். சக்திவேல், பி. தனபால், சி. குமரப்பன், கே .ராஜசேகர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 4 புதிய நீதிபதிகளும் இன்று காலையில் பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி. ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி. எஸ் அமல்ராஜ் , வக்கீல் சங்க தலைவர்கள் ஆகியோர் பேசினர். இதற்கு நன்றி தெரிவித்து புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றினர்.
நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு கண்ணியத்தை காக்கும் வகையில் பணியாற்றுவதற்கு உரிய பலத்தை இயற்கை தனக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.
நீதிபதி பி.தனபால் பேசும்போது, நான் பள்ளிப்படிப்பு தமிழ்வழியில் படித்தேன். அதனால், தமிழ்வழியில் படித்த வக்கீல்கள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருத வேண்டாம். முயற்சித்தால் இயலாதது என்று எதுவுமில்லை என கூறினார். மேலும் தனக்கு கல்வி கற்க உதவிய தன் சொந்த கிராமத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் மூத்த வக்கீல்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் .
நீதிபதி சி. குமரப்பன், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வலுப்படுத்துவதாக நான் பணியாற்றுவேன் என்றுஉறுதி அளித்தார்.
நீதிபதி ராஜசேகர் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஆசிரியர்களுக்கும் தன்னுடன் பணியாற்றிய வக்கீல்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
- தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம்
- ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது
திருப்பூர் :
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சென்ைன ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.நாகராஜன் கிருஷ்ணகிரி குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், காங்கயம் நீதிபதி பி.ராஜா வாணியம்பாடிக்கும், பல்லடம் நீதிபதி எஸ்.சந்தானகிருஷ்ணசாமி காங்கயத்திற்கும், காங்கயம் ஜூடிசியல் மாஜிஸ்திேரட்டு டி.பிரவீன் குமார் சேலம் 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கும், திருப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ. ஆதியன் சங்கராபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை ஐகோர்ட்டில் 3 மாதங்களில் 6 ஆயிரத்து 300 வழக்குகளை நீதிபதிகள் விசாரித்தனர்.
- இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை ஐகோர்ட்டில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு, பிரதான அமர்வாக இருந்து, பொது நல வழக்குகள், ஆக்கிரமிப்புகள், மேல் முறையீட்டு வழக்குகள் உள்ளிட்டவற்றை விசாரித்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நீதிபதிகள், கடந்த (3 மாதங்களில்) செப்டம்பர் முதல் நவம்பர் வரை 6 ஆயிரத்து 300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளோம்.
இதற்கு உறுதுனையாக இருந்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு எங்களின் பாராட்டுகள் என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறி ஞர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்