என் மலர்
நீங்கள் தேடியது "தீர்த்தக்குட"
- காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
- இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம், காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை தீர்த்தக் குடம் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடிய திரளான முருக பக்தர்கள், கும்பாபிஷேக விழாவிற்காக குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக மேள தாளம் முழங்க நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம், பால தண்டாயுதபாணி சாமி கோவில் வளாகத்தில் நிறைவுற்றது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை மறுநாள் காலை, இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
- எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, எட்டுப்பட்டி கிராமம், குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
விழாவையொட்டி, நேற்று காவிரிக் கரையில் எட்டுப் பட்டி கிராம மக்கள் ஒன்றுகூடி, புனித நீராடி, தீர்த்தக் குடங்களில் புனித நீர் நிரப்பி காவிரி அன்னைக்கு பூஜை செய்தனர்.
பின்னர் புனிதநீர் நிரம்பிய சுமார் 700 தீர்த்தக் குடங்களையும் மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக குன்னத்தூர் மகா மாரியம்மன் சன்னதிக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜை செய்தனர்.
முன்னதாக குடமுழுக்கு விழாவையொட்டி கணபதி ஹோமத்துடன் பூஜை நடந்தது.
- ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.
- தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனையும் நடைபெறுகிறது பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் செல்வ விநாயகர், கல்யாண விநாயகர், செந்தூர் வேலன், ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 30-ந் தேதி தொடங்கின.
தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. இன்று மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜைதொடங்குகிறது. தொடர்ந்து ரக்ஷா பந்தன், கும்பஸ்தாபனம், யாக சாலை பிரவேசம், மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கின்றன.
நாளை விசேஷ சாந்தி, 2-ம் கால யாக பூஜையும், மாலை 3-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 6 மணிக்கு செல்வ விநாயகர், எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனையும் நடைபெறுகிறது பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது அன்று மாலை 7 மணிக்கு தேச மங்கையர்க்கரசி ஆன்மீக சொற்பொழிவு மறுநாள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.