search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தார்சாலை"

    • 87-வது வார்டில் ரூ.83 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.
    • ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 87-வது வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. கவுன்சிலர் காளிதாசிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக அவர் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் புதிய சாலை அமைக்க வலியுறுத்தினார்.

    இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் அரசு நிதியாக ரூ. 83 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி இன்று நாகம்மா கோவில் தெரு, சமயபுரம் கோவில் தெரு, அண்ணாமலையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணி யினை 87-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் தொடங்கி வைத்தார். கவுன்சிலரின் முயற்சி யால் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதை வார்டு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப் பாளர் சுபாஷ் ஸ்ரீ மற்றும் ராஜா, சண்முகநாதன், ராம்ராஜ், சங்கர், பஞ்ச வர்ணம். மேகலா. செல்வி, ராஜா. ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
    • அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை ஆகிய மலை ஊராட்சிகளில் 86-க்கும் மேற்பட்ட மலை குக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 35- ஆயிரத்துக்கும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களது 100 ஆண்டுகால முக்கிய கோரிக்கையாக இருப்பது சாலை வசதி மட்டுமே. முத்துக் குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை மலை வரை தார்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    குறிப்பாக, இந்த மலைக்கு செல்ல தார் சாலை வசதி இல்லாததால் மக்கள் கடுமையான சிரமங்களை அனுபவித்து வந்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தது.

    முத்துக்கும ரன்மலை அடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை 6.55 கிலோ மீட்டர் தூரத் திற்கு தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டது. பின்னர், 15.08 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.

    இந்நிலையில், மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு தார்சாலையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று பீஞ்சமந்தை ஊராட்சியில் நடந்தது.

    விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன். தங்கம் தென்னரசு, மதிவேந்தன், சக்கரபாணி ஆகியோர் பங்கேற்று தார் சாலையை திறந்து வைத்து, மலைவாழ் மக்கள் 764 பயனாளிகளுக்கு ரூ.19.30 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    விழாவில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. ராமமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு. தாசில்தார் வேண்டா, அணைக்கட்டு ஒன்றியக் குழு தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுதாகரன், சாந்தி, ஒடுகத்தூர் பேரூராட்சி தலைவர் சத்யாவதிபாஸ்கரன், துணைத் தலைவர் ரேணுகா தேவிபெருமாள்ராஜ், வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி, ஒன்றிய கவுன்சிலர் அரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த விழாவில் பீஞ்சமந்தை மலைக்கு என அரசு பஸ் போக்குவரத்து வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது.

    • 18 கிராமங்களில் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.

    மதுரை

    மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை- போடி ரெயில் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. பணியின் போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட்களை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே மூடியது.

    இதை தொடர்ந்து மதுரை- போடி ரெயில்வே பாதைக்கு அருகே இருந்த பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே கிராசிங்கை கடக்கும் சூழல் உருவானது.

    சில இடங்களில் ரெயில்வே நிர்வாகத்தால் 500மீட்டர் தூரம் வரை மட்டுமே சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.

    மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.

    இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

    • வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டைக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
    • இதனை வெங்கடேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி 2-வது வார்டு குலசேகரன் கோட்டைக்கு திண்டுக்கல்- மதுரை நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி நகர்புற சாலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரம் ராமநாயக்கன்பட்டி, பொன்மலை பொன் பெருமாள் கோவில், பத்திரப்பதிவு அலுவலகம், பெருமாள் கண்மாய் வழியாக செல்ல வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டது. இந்த சாலை யை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், அமைச்சர் மூர்த்தி ஆலோசனையின்படியும் தற்போது நபார்டு வங்கி 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க பூமி பூஜை விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயலட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உதவி பொறியாளர் கருப்பையா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., தார் சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தார். இதில் கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி மோகன், ஜெயகாந்தன், திருப்பணி குழு தலைவர் ஏடு.ராதா கிருஷ்ணன், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா, பிரகாஷ், பிரபு, அரவிந்தன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
    • மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வெண்டிபாளையம் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட தாகும்.

    மணலி கந்தசாமி வீதி வழியாக செல்லும் சாலை ஈரோடு நாமக்கல் மாவட்டம் செல்வதற்கு பிரதான முக்கிய சாலையாகவும், ஈரோடு நாமக்கல் என 2 மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும் இருப்பதால் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

    இப்பகுதி வழியே ஈரோடு நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் கல்லூரி வாகனங்கள் தனியார் மற்றும் அரசு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    மேலும் கற்கள் பெயர்ந்து, புழுதி பறக்கும் மண்சாலையாகவும் மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    தார் சாலை அமைக்காததால் மழைக் காலங்களில் சாலையில் ஏற்பட்டிருக்கும் குழிகள், மழை நீரால் நிரம்பி காணப்படுவதுடன், வாகன ஓட்டிகள் குண்டும், குழியுமான பகுதியில் மழைநீர் நிரம்பி இருப்பதை தெரியாமல் வாகனங்களை இயக்கி பலர் விபத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

    மணலி கந்தசாமி சாலையை புதுப்பித்து தருமாறு பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் இருந்து மணலி கந்தசாமி குடியிருப்பு வரை உள்ள பிரதான சாலையை புதுப்பித்து, தார் சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×