என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பூரண மதுவிலக்கு"
- ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது.
- பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்த நிதிஷ்குமார் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், "பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.
தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர்.
தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும் 13.9 சதவீதம் பேர் தான் மது அருந்துகின்றனர்.
பீகாரில் கள்ளச்சாராயம் தொடர்பாக சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 275 ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அதாவது பீகார் காவல்துறையும் மதுவிலக்கு துறையும் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் இடங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் இடங்களிலும் சோதனை நடத்துகின்றன. ஆனால் இதற்குப் பிறகும், சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை தடையின்றி தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆட்டோ மற்றும் டாக்சி வாங்குவதற்கான மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- எஸ்.சி.எஸ்.டி வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆடை பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.கர்னூலை நீதித்துறை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும் மாற்றப்படும்.
ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும். கடப்பாவில் இரும்பு ஆலை தொடங்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.
அம்மா ஓடி திட்டத்தில் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.அதில் ரூ.15 ஆயிரம் தாய்மார்கள் கணக்கில் சேர்க்கப்படும். பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஆட்டோ மற்றும் டாக்சி வாங்குவதற்கான மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
வாகன மித்ரா திட்டத்தின் கீழ் லாரி மற்றும் டிப்பர் டிரைவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆட்டோ டாக்சி டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு அமல்படுத்தப்படும்.
எஸ்.சி.எஸ்.டி வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்
- தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய.லோகநாதன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, சோலைராஜன், தேனி நகர தலைவர் செல்வ பாண்டி யன், நகர பொருளாளர் ராஜேஷ்குமார், நகர அமைப்பாளர் அரண்மனை முத்துராஜ் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய பொறு ப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். தேனி-மதுரை ரோட்டில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
- ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
- பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது.
நெல்லை:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.
ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது.
- காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.
சென்னை:
தமிழகத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்து விட்டதாகவும், அதற்கு அரசு துணை போவதாகவும் குற்றம் சாட்டி அ.தி.மு.க. இன்று பேரணி நடத்தி கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து விட்டது. அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் அ.தி.மு.க.வினர் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் தவறு செய்பவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 7 கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்யும். அதை அரசும் வேடிக்கை பார்க்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துதான் வருகிறது.
ஆனால் அ.தி.மு.க. சொல்வது போல் மதுவை அரசே ஆதரிக்கிறது என்பதெல்லாம் தவறானது. இந்த விசயத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.
தமிழக மக்கள் இவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரசை பொறுத்தவரை மதுவிலக்கு வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. இதற்கென்று மிகப்பெரிய பாரம்பரியமே உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் பல மாநிலங்களில் கள் மற்றும் சாராயம் விற்பதற்கு அரசே கடைகளை திறந்தது. அப்போது தமிழகத்திலும், குஜராத்திலும் மட்டும் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதுபற்றி பலரும் காமராஜரிடம் கேட்டு இருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளதே உங்கள் மாநிலத்தில் மட்டும் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு காமராஜர் சொன்ன பதில், "இன்னொருத்தர் தப்பு செய்தால் அதே தப்பை நானும் செய்ய வேண்டுமா? நான் ஒரு காலத்திலும் சாராய கடைகளை திறக்க அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று கூறி இருக்கிறார். அதனால்தான் அவரை கருப்பு காந்தி என்று அழைத்தார்கள்.
இன்றும் தமிழகத்தில் மதுவிலக்கு வர வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் காங்கிரஸ் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே எண்ணத்தில் இருக்கிறார். இதை அவரோடு உரையாடிய போது நான் நேரிலே அறிந்தவன். இப்போதும் படிப்படியாக மதுவிலக்கு அமல் செய்யப்படும் என்றுதான் கூறி வருகிறார்.
எந்த காரியத்தையும் எடுத்தவுடன் ஒரேயடியாக செய்து விட முடியாது. அவ்வாறு செய்யும் போது அதற்கு எதிர் வினைகள் உருவாகும். தி.மு.க. அரசின் கொள்கையும், மது விலக்கு என்பதாக இருக்கிறது. எனவே தமிழகத்திலும் மது விலக்கை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மது விலக்கை அமல்படுத்த கோரி காங்கிரசும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூரண மதுவிலக்கு கேட்டு தொடர்ந்த வழக்கில் தலைமை செயலாளர்-டாஸ்மாக் மேலாண் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
- இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் காந்திராஜன். இவர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2021-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மது விலக்கு விவகாரம் அரசின் கொள்கை முடிவு.
இதில் தலையிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் இதற்கு சீராய்வு மனுவை காந்திராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் அரசு பூரண மதுவிலக்கை எப்போது கொண்டு வரும். அதற்கான கால அட்டவணை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக அரசு தலைமை செயலாளர் டாஸ்மாக் மேலாண் இயக்குநர், ஆயத்தீர்வை இயக்குநர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்