என் மலர்
நீங்கள் தேடியது "தனிப்படை அமைப்பு"
- போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது.
- முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர்.
திட்டக்குடி:
கள்ளநோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்ககள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, காரத்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
- மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள துறையூரைச் சேர்ந்தவர்கள் நசின்ராஜ், ராஜா. வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்த இவ்விருவரும் அரியலூர் மாவட்டம் கூவத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,-யில் படித்து வருகின்றனர். இவ்விருவருக்கும் ஐ.டி.ஐ.,-யில் கடந்த 5-ந் தேதி மாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்களிடம் தெரிவி த்துள்ளனர். இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் தயாராக இருந்த ராஜாவின் ஆதரவாளர்கள் நசின்ராஜை மறித்து தாக்கினர். இதற்கு பதிலடியாக முருகன்குடி பஸ் நிறுத்தத்திற்கு சென்ற நசின்ராஜா தனது உறவினர்களுடன் சேர்ந்து ராஜாவை தாக்கினார்.
இதுகுறித்து புகாரளிக்க ராஜா தரப்பினர் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது துறையூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராஜா தரப்பினரக்கும், அவ்வழியே வந்த நசின்ராஜ் தரப்பிற்கும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இது மோதலாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் ெகாண்டனர். அப்போது சமாதானம் செய்ய வந்த போலீசார் எதிரிலியே இருதரப்பும் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் திட்டக்குடி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இரு தரப்பினரும் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சமாதானம் பேசி இருதரப்பினரையும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராஜாவின் உறவினரான துறையூர் கிளைச் செயலாளர் மதியழகன் கூரை வீடு திடிரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலூர் மாவட்ட தடயவியல் நிபுணர் ராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து செய்தனர். துறையூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரு சமுகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் 50-பேர் மீதும், நசின்ராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் 37-பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு தரப்பி லும் தலா ஒருவரென 2-பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கடலூர் எஸ்.பி., சக்திகணேஷ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் ஏ.எஸ்.பி., அங்கித்ஜெயின் தலைமையில் தனிப்படை அமைத்து, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- காரில் தனி அறையில் இருந்த ரூ.2 கோடி பணம் திருட்டு போய் இருப்பதாக விகாஸ் ராகுல் புகார் தெரிவித்திருந்தார்.
- குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பவானி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்கத்சிங் என்கிற மடப்பால். இவருடைய மகள் கோவையில் தங்கி உள்ளார். பர்கத்சிங்கிடம் டிரைவராக அதே பகுதியை சேர்ந்த விகாஸ் ராகுல் (32) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கோவையில் உள்ள பர்கத்சிங்கின் மகளிடம் இருந்து ரூ.2 கோடியை வாங்கிக்கொண்டு சொகுசு காரில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் நோக்கி புறப்பட்டார்.
இந்த கார் ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் காரை தடுத்து நிறுத்தினர்.
இதனால் சுதாரித்து கொண்டு காரை விகாஸ் ராகுல் வேகமாக ஓட்ட முயன்றார். அப்போது மேலும் 2 பேர்கள் சேர்ந்து காரை தடுத்து நிறுத்தினர்.
5 பேரும் சேர்ந்து விகாஸ் ராகுலை அடித்து உதைத்து உள்ளனர் . அவரை காரில் இருந்து தள்ளிவிட்ட அந்த கும்பல் காரையும் எடுத்து சென்று விட்டது.
இது குறித்து விகாஸ் ராகுல் லட்சுமி நகரில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் சென்று புகார் செய்தார். இதனையடுத்து மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசாருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு அடுத்த கங்காபுரம் தனியார் ஜவுளி பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் நின்று கொண்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கார் விகாஸ் ராகுல் ஓட்டி வந்தது என்பதை உறுதி செய்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அமிர்தவர்ஷினி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
காரில் தனி அறையில் இருந்த ரூ.2 கோடி பணம் திருட்டு போய் இருப்பதாக விகாஸ் ராகுல் புகார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.க்கள் ஆனந்தகுமார், அமிர்தவர்ஷினி ஆகியோர் கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராக்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் நெல்லை விரைந்துள்ளனர்.
மற்றொரு தனிப்படை போலீசார் ஈரோடு, கோவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே ரூ.2 கோடி கொள்ளை போன பணம் கருப்பு பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் டிரைவர் விகாஸ் ராகுல் கொள்ளை தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்து வருவதால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
முதலில் 3 பேர் மட்டுமே காரை வழி மறித்ததாக கூறிய விகாஸ் ராகுல் பின்னர் 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்ததாக கூறினார். உண்மையிலேயே பணம் கொள்ளையடி க்கப்பட்டதா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு கொள்ளை போயிருந்தால் அந்த கொள்ளை சம்பவத்திற்கும் டிரைவர் விகாசுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார்.
- 2 பேரையும் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு :
ஈரோடு முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர்களுக்கு கவுதம் (வயது 30), கார்த்தி (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் செக் எண்ணெய், மசாலா பொடிகள், மலை தேன் போன்றவற்றை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். இவர்களு க்கும் அவரது மாமாவான மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகசாமிக்கும் முன்விரேதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கவுதம், கார்த்தி ஆகியோருக்கும் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக்கொள்ளும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர்.
அப்போது அவர்களது வீட்டுக்கு ஆறுமுகசாமி வந்து தகராறு செய்து உள்ளார். சத்தம் கேட்டு கவுதம், கார்த்தி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது அண்ணன்-தம்பிக்கும், ஆறுமுக சாமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கார்த்தி செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்தியையும், கவுதமையும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அங்கேயே சரிந்து விழுந்தனர்.
பின்னர் ஆறுமுகசாமி அங்கிருந்து தப்பி ஓடினார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் பலனளிக்காமல் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கார்த்திக் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.
மேலும் இந்த கொலையில் ஆறுமுக சாமியுடன் மற்றொரு வரும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் பிடிக்க டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் அண்ணன், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்கள் மாணவனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
- மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தினமும் இரவு நேரங்களில் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இந்த விஷயம் இவர்களின் பெற்றோருக்கு தெரியாது.
அதன்படி நேற்று இரவு 9 மணியளவில், மாணவனும், மாணவியும் கப்பியாம்புலியூர் ஏரிக்கரையில் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் அங்கு பேசிக்கொண்டிருந்த மாணவன், மாணவியை திடீரென சுற்றி வளைத்தனர். பின்னர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதனை மாணவன் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அக்கும்பல் மாணவனை தாக்கி கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் மயங்கி விழுந்தான்.
அதன்பின்னர் 3 பேரும் கூட்டாக சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் மாணவியும் மயக்கமடைந்தார்.
பின்னர் மாணவன், மாணவியிடம் இருந்த 2 செல்போன்கள், வெள்ளி செயின், கொலுசு மற்றும் தங்க மோதிரத்தை பறித்து தப்பிச் சென்றனர்.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாணவனும், மாணவியும் மயங்கி நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற விக்கிவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மாணவனையும், மாணவியையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், தகவலறிந்த டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் மாணவன்- மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாணவனை தாக்கிவிட்டு, மாணவியை பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தீவிர வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். காதலுனுடன் பேசிக்கொண்டிருந்த மாணவியை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
- 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவருடைய மகன் ஜெகன் (வயது 28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அவசரஅவசரமாக மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடு செய்தனர். இதனால் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதனால் சரண்யாவின் குடும்பத்தினர் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஜெகனை அவருடைய மாமனார் சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொன்று விட திட்டம் போட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் புதுமாப்பிள்ளை ஜெகன் வேலைக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் அணைரோடு மேம்பாலம் அருகே இணைப்பு சாலையில் (சர்வீஸ் ரோடு) ஜெகன் சென்று கொண்டு இருந்தார்.
இதை அறிந்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் ஜெகனை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர்.
மேலும் அரிவாளால் அவரின் கழுத்தை அறுத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 மோட்டார்சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஜெகன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொலையை அந்த வழியாக சென்றவர்கள் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு படம்பிடித்தனர்.
ஜெகனை ஒருவர் கால்களை பிடித்துக் கொள்ள, 2 பேர் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பல்வேறு வாட்ஸ்-அப் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த ஆணவக்கொலை தொடர்பாக ஜெகனின் மாமனார் சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
போலீசார் ேதடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்து விட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஒரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
- ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார்.
- கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ளது சந்தைப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கவும், ஆடு மேய்க்கவும் செல்வது வழக்கம். அதன்படி நேற்று சிலர் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக ஏரியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமும், சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொலை செய்யப்பட்ட நபர் 45 வயது மதிக்கத்தக்கவர் ஆவார். அவர் தலையில் கல்லை தூக்கி போட்டும், மர்ம உறுப்பை அறுத்தும் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல், நிர்வாண நிலையில் கிடந்தார்.
மேலும் அங்கு ரத்தக்கறைகள் காய்ந்த நிலையில் இருந்தன. இதனால் அவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டவர் தொழிலாளி என தெரியவந்தது. ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரிந்தால் தான், அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பா ளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை நேரத்தில் ஈங்கூர் தொழிற்சா லையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பால ப்பா ளையம் தொழிற்சாலைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சா லைக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வழக்கம் போல் நிறுவ னத்தின் அலுவலக பணி யாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழி ற்சாலையில் பணப்பரி வர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக்கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சா லைக்கு கிளம்பி சென்றார்.
பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.
பின்னர் ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற னர்.
இதுகுறித்து சென்னி மலை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொ ண்டனர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதாவது பணம் கொண்டு செல்லப்பட்டது நன்கு தெரிந்து தான் இந்த துணிகர கொலையில் ஈடுபட்டு ள்ளனர். எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் குற்றவாளி களை கண்டுபிடிக்கும் வகையில் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொரு த்தப்பட்டிரு க்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெ க்டர் சரவணன் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டுள்ளது. போலீசார் ஊழியர் சத்திய மூர்த்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் கேசவன் (வயது45). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார். இவர் ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் மோட்டார்சைக்கிளில் வந்தார். தளி அருகே கே.மல்லசந்திரம் அருகில் அவர் சென்ற போது அவரை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்தது. திடீரென்று அந்த காரை ஓட்டி வந்தவர், கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவனை காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாளுடன் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க கேசவன் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் கேசவனை ஓட, ஓட சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை, கழுத்து என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது.
இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றது.
இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட கேசவனின் செல்போன் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதில் 'ஆசிட்' ஊற்றப்பட்டதால் உருகி போய் காணப்பட்டது. அந்த செல்போனையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது
- அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்
அந்தியூர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47).மளிகை கடை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கத்தி முனையில் தங்கமணி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலியை முகமூடி அணிந்த மருமநபர் பறித்து சென்றார்.
இதையடுத்து முகமூடி கொள்ளையனை பிடிக்க அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தனபால், திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் காலை முதல் நகை பறிப்பு சம்பவம் நடை பெற்றது வரை சுற்றித்திரிந்த நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்தியூர், வெள்ளி திருப்பூர், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்தியூர் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள கடைகளை இரவு 11 மணிக்கு மேல் மூடவும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றார்கள். ஏனெனில் திருட்டு சம்பவம் நடைபெற்ற உடன் டீ கடையில் டீ குடிப்பது போல் அங்கு சென்று அமர்ந்து விடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதற்கு போலீசாருக்கு சிரமம் ஏற்படுவதால் டீக்கடை உரிமையா ளர்களுக்கு இரவு 11 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
- கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிட்டம் பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கவுரி (41). இவர்களுக்கு விஜி என்ற மகனும், சத்யா, சினேகா என்ற 2 மகள்களும் உள்ளனர். விஜி ராணுவத்தில் லடாக்கில் பணிபுரிந்து வருகிறார்.
மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சின்னத்துரை-கவுரி தம்பதியினர் கடந்த 30 ஆண்டு களாக தேன்கனிக்கோட்டையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சொத்தை விற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னேப்பள்ளியில் இடம் ஒன்றை வாங்கினார்கள். மீதி பணத்தை கணவர்-மனைவி 2 பேர் பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்தனர்.
மேலும் கணவன் - மனைவி 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே அம்மன் நகர் 2-வது கிராசில் வீடு ஒன்றில் போகியத்திற்கு குடி போனார்கள். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. குறிப்பாக மனைவி பெயரில் டெபாசிட் செய்து வைத்திருந்த தொகை ரூ.20 லட்சத்தை சின்னத்துரை கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருந்த பிரச்சினையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுரி கிருஷ்ணகிரி அருகே மேலேரிகொட்டாயில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னத்துரை சமாதானம் பேசி அழைத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன் - மனைவி இடையே பண விவகாரம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை அரிவாளால் மனைவியின் கழுத்து, கை, வாய், தாடை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் கவுரி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
அவரை கொலை செய்ததும் சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ரத்த வெள்ளத்தில் வீட்டில் கவுரி பிணமாக கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக சின்னத்துரையை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர்.
- அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
- தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் பகுதியில் முருகன் குன்றம் வேல்முருகன் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை யாரோ திருடிச் சென்றனர். மேலும் அங்குள்ள புவனேஸ்வரி அம்மன் சன்னதியில் உள்ள கதவும் திறந்து கிடந்தது. அம்மனின் கழுத்தில் கிடந்த 2 கிராம் எடையுள்ள தங்கத் தாலி செயினும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.
இது தவிர அங்குள்ள வேல் மண்டபத்தில் இருந்த வேலை திருடுவதற்காக வளைத்து இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வேலை திருட முடியாததால் அதை அந்த மர்ம நபர் விட்டுச் சென்று உள்ளார். யாரோ மர்மநபர் கோவிலின் பின்பக்கம் உள்ள சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து இந்த கைவரிசையை காட்டியது தெரியவந்தது.உடனே இது பற்றி கோவில் பூசாரி சத்தியசீலன் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவிலுக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து கோவில் நிர்வா கத்தினர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணைநடத்தினார்கள்.
அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த மர்ம நபரை அடை யாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.
மேலும் தடய அறிவியல் நிபுணர்களும்அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். இது தவிர போலீஸ் துப்பறியும் நாயும் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் கோவிலில் மோப்பம் பிடித்துவிட்டு நான்கு வழி சாலை வரை ஓடி நின்றது. ஆனால் அந்த போலீஸ் மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையில் இந்த கோவிலில் கொள்ளை அடித்த மர்ம நபரை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் 5 போலீசார் கொண்ட தனிப்ப டையைஅமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி போலீஸ் படையை நியமித்து கன்னி யாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் உத்தர விட்டு உள்ளார்.