என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறை"
- காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
- மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் கலெக்டர் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தெரிவித்துள்ளார்.
- 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வார்டுகள் வாரியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அதன்படி இன்று காலை 49-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் கூறிய குறைகளை பணிவுடன் கேட்டுக்கொண்ட மேயர் தினேஷ் குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இதேபோல் வார்டு முழுவதும் வீதி வீதியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அதற்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டார்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறஉள்ளது.
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகின்ற 21-ந்தேதி வெள்ளிகிழமை முற்பகல் 11 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- இன்று பொறுப்பு ஏற்பு
- கலெக்டர் ஸ்ரீதர் பேட்டி
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டராக இருந்த அரவிந்த் மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட புதிய கலெக்டராக சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக இருந்த பி.என். ஸ்ரீதர் நிய மிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் இன்று 6-ந்தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். பொறுப்புகளை கலெக்டர் அரவிந்த் அவரிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதி காரி சிவப்பிரியா, ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், பத்மநாபபுரம் சப் கலெக் டர் கவுசிக், கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் வீராசாமி மற்றும் அதிகாரிகள் புதிய கலெக் டர் பி.என். ஸ்ரீதருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் பி.என். ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த திட்டங் களை செயல்படுத்த தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை அளிக் கப்படும். அனைத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களின் பிரச்சினைகள் குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற் கொள்வேன். குமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக் கப்படும். நகரப்புறம் அதிகம் உள்ள மாவட்டமாகும்.
சுற்றுலாத்துறை சுற்றுச்சூழல் மீனவர் பிரச்சனை வனத் துறை உள்ளிட்ட திட்டங்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். சென்னை-கன்னியாகுமரி தொழில் வரி சாலை திட்டத்தை பொருத்தமட்டில் தற்பொ ழுது தென்காசி நெல்லை மாவட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் அதற் கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக பொறுப் பேற்றுக் கொண்ட கலெக் டர் பி.என். ஸ்ரீதர் குமரி மாவட் டத்தின் 52-வது கலெக்டர் ஆவார். கலெக்டர் பி.என் ஸ்ரீதருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும்.
ஏற்கனவே திண்டி வனத்தில் சப்-கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்த பி.என்.ஸ்ரீதர் தொடர்ந்து பெருநகர சென்னை மாநக ராட்சி மத்திய வட்டார இணை இயக்குனராக 2 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
- தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
- அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
சேலம்:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் ஜனவரி மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி வீரேஷ் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு. ஏ. என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
- புதுவையில் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசென்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தென்பகுதிக்கு வரும் போது தாய் வீட்டிற்கு வருவது போன்று உற்சாகத்துடன் வருவேன். நான் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னராக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் என்னுடைய கவனம் இருக்கும்.
தமிழகத்தில் எவ்வாறு சிறப்பாக புயலை எதிர் கொண்டோமோ அது போல் புதுவையிலும் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டிருந்தது.
தி.மு.க.வில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா என்பது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. சமீபத்தில் சென்னை மேயர் காரில் தொங்கிக் கொண்டு சென்றதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுவதாக தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்ட போது, எந்த துறை சிறப்பாக செயல்பட்டாலும் அதனை பாராட்ட வேண்டியது கடமை தான். அதே நேரத்தில் குறைகளை சுட்டிக் காட்ட வும் வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்