என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டெஸ்ட் போட்டி"
- 2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடியுள்ளது.
- நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை.
நேற்று நொய்டா கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம், ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், மைதானத்தில் தேங்கியிருந்த மழைநீரால் 2-ம் நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று ஈரமாக இருந்த மைதானத்தை உலர வைக்க பணியாளர்கள் மின்விசிறியை பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா மைதானத்தில் மழைநீரை அகற்ற நவீன வசதிகள் இல்லை, பணியாளர்களுக்கு போதிய பயிற்சியில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த மைதானத்தில் பெண்களுக்கு கழிவறை கூட இல்லை என போட்டியை காணச் சென்றவர்களும் புகார் கூறியுள்ளனர்.
2017 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் பல சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையே 1வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
- இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 357 ரன்களை சேர்த்தது. பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களையே எடுத்தது.
124 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
ஐந்தாம் நாளில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் ரன் எடுக்காமலும், மிகைல் லூயிஸ் 9 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
அடுத்து களமிறங்கிய கீசி கார்டி 31 ரன்களையும், அலிக் அத்தானாஸ் 92 ரன்களையும், கவேம் ஹாட்ஜ் 29 ரன்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 15 ஆம் தேதி கயானாவில் தொடங்க இருக்கிறது.
- தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
- இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை இலங்கை கிரிக்கெட் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்துள்ளார். 32 வயதான பேட்டிங் ஆல்ரவுண்டர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கேப்டனாகவும், 28 வயதான குசல் மெண்டிஸ், ஒருநாள் கிரிக்கெட் அணியை தலைமை தாங்க நியமிக்கப்பட்டனர். 26 வயதான வனிது ஹசரங்க, டி20 அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா அறிவித்தபடி, தனஞ்சய டி சில்வா இலங்கை டெஸ்ட் அணிக்கு பொறுப்பேற்க உள்ளார். அவர் டெஸ்ட் கேப்டனாக திமுத் கருணாரத்னவுக்குப் பதிலாக, டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கும் 18-வது வீரர். பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் அவரது கேப்டன் பதவியை தொடங்க இருக்கிறார்.
தனஞ்சய டி சில்வா தேசிய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதுவரை 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து சதங்களையும், 13 அரைசதங்களையும் அடித்துள்ளார். 3 அணிகளுக்கும் ஒரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் தற்போது எங்களிடம் உள்ள வீரர்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்று தலைமை தேர்வாளர் உபுல் தரங்கா கூறியுள்ளார்.
- முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் பெர்த் நகரில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் இன்று காலை தொடங்கியது. ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய அணியே களம் இறங்கியது.
பாகிஸ்தான் அணியில் சர்ப்ராஸ் அகமது, குர்ரம் ஷசாத், பகீன் அஷ்ரப் ஆகியோருக்கு பதிலாக முகமது ரிஸ்வான், ஹாசன் அலி, மிர் ஹம்சா ஆகியோர் இடம் பெற்றனர்.
டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர்-உஸ்மான் கவாஜா களம் இறங்கினர். டேவிட் வார்னர் 2 ரன்னில் இருந்தபோது கேட்ச்சை தவறவிட்டனர். அதன்பின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் (27.1. ஓவர்) சேர்த்தது. வார்னர் 38 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கவாஜாவும் (42 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின் லபுஸ்சேன்-ஸ்பீலன் சுமித் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆஸ்திரேலியா 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது லபுஸ்சேன் 14 ரன்னிலும், சுமித் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து மழை நின்ற பின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பொறுமையுடன் விளையாடிய ஸ்மித் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் புஸ்சேன் - ஹேட் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி, ஜமால், சல்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
- இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது.
இந்தியா-ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 406 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மந்தனா 74 ரன்னும், ரோட்ரிக்ஸ் 73 ரன்னும், தீப்தி சர்மா 78 ரன்னும் எடுத்தனர்.
187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. சுதர்லாண்ட் 12 ரன்னுடனும், கார்ட்னெர் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று வரை அந்த அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
- டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
- 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் வீராட்கோலி, தனிப்பட்ட குடும்ப விஷயம் காரணமாக தாயகம் திரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீராட்கோலி, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய அணியுடன் மீண்டும் இணைந்தார். அவர் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 15-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு சென்ற கோலி, பயிற்சிகளை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து 19-ந்தேதி லண்டன் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளோம்.
- இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நேற்று அளித்த பேட்டியில், '2023-24-ம் ஆண்டு சீசனில் நாங்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அதாவது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளோம். இவ்விரு டெஸ்டுகள் பெண்கள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
எதிர்காலத்தில் மேலும் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டுக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளை கொண்டு வர வேண்டும். ஏனெனில் அது பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. ஒரு வீராங்கனையாக நானும் அதிகமான டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஹெட்டிங்லே: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கவாஜா களமிறங்கினர். டேவிட் வார்னர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். கவாஜா 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 21 ரன்னிலும், ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. 5வது விக்கெட்டுக்கு இணைந்த டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி 155 ரன்களை சேர்த்தது.
மார்ஷ் சதமடித்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு மிட்செல் மார்ஷ் 118 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 39 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்களாக சாக் கிராலி, பென் டக்கெட் விளையாடினர். ஆனால், பென் டக்கெட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த ஹேரி புரூக்கும் 3 ரன்களில் அவுட்டானார். பின்னர் ஜோ ரூட் களமிறங்கினார். சாக் கிராலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் போடப்பட்ட 19 ஓவர்களுக்கு 3 விக்கெட்டு இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது.
- சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ரன்னும், நியூசிலாந்து 373 ரன்னும் எடுத்தன.
18 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 105.3 ஓவரில் 302 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்து இருந்தது.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 257 ரன்கள் தேவை. கைவசம் 9 விக் கெட்டுகள் உள்ள நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
இரவு 7 மணி வரை ஆட்டம் ஒரே செஷனாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர்.
டாம் லதாம் 25 ரன்னிலும் அடுத்து களம் வந்த நிக்கோல்ஸ் 20 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நியூசிலாந்து 90 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை கைப்பற்ற இலங்கை பந்து வீச்சாளர்கள் கடுமையாக முயற்சித்தனர். இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.
- 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது.
உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.
விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள்.
இந்தியா 102வது ஓவரில் 300 ரன்னை தொட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் சதம் அடித்து விராட் கோலி அசத்தல் ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார்.
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
இந்நிலையில், 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சிஸ் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் 3 ரன்களோடும் , குனமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்
ஆஸ்திரேலியா, இந்தியாவை விட 88 ரன்கள் பின்தங்கி உள்ளது.
- மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது.
- இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 180 ரன்னும், கேமரூன் கிரீன் 114 ரன்னும் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் முதல் இ னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் சதம் (128 ரன்) அடித்தார்.
விராட்கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 191 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா விளையாடியது. விராட் கோலி, ஜடேஜா தொடர்ந்து ஆடினர். இருவரும் நிதான மாக விளையாடினார்கள். இந்தியா 102-வது ஓவரில் 300 ரன்னை தொட்டது.
ரவீந்திர ஜடேஜா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் நாதன்லயன் பந்தில் கவாஜாவிடம் கேட்ச் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன்னாக இருந்தது. அடுத்து கோலியுடன் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி பொறுமையாக விளையாடியது. விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 131 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்து இருந்தது. வீராட் கோலி 88 ரன்னுடனும், கே.எஸ்.பரத் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
5-வது வீரராக களம் இறங்க வேண்டிய ஸ்ரே யாஸ் அய்யர் முதுகில் வலி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டார். அவரை கிரிக்கெட் வாரிய மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கவில்லை. இரட்டை சதத்தை நெருங்கிய கோலில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மர்பி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார்.
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 178.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 571 ரன்களை குவித்து இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயான், மர்பி தலா 3 விக்கெட்டும், குன்னமென், ஸ்டார்க் தலா 1 விக்கெட்டும் விக்கெட்டும் எடுத்தனர். 91 ரன்கள் பின்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.
- உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர்.
- டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார். அவர் 170 பந்தில் 114 ரன் எடுத்தார். இதில் 18 பவுண்டரி அடித்தார்.
20-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது முதல் சதமாகும். சதம் அடித்தது தொடர்பாக கேமரூன் கிரீன் கூறியதாவது:-
இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மதிய உணவு இடைவேளையின்போது நான் 95 ரன்னில் இருந்தேன். இடைவேளையின் 40 நிமிடங்கள் எனக்கு 1 மணி 40 நிமிடம் போல் இருந்தது.
ஆனால் நான் உஸ்மான் கவாஜாவுடன் பேட்டிங் செய்தேன். அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அவரது அனுபவங்கள் எனக்கு நிறைய உதவியது. அந்த அனுபவம் சதம் அடிக்க உதவியது.
உஸ்மான் கவாஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவர் என்னை போன்ற வீரர்களுக்கு, தனது அனுபவத்தை பற்றி சொல்லும் விதத்தில் மிகவும் மதிப்புமிக்கவர். அவரிடமிருந்து என்னால் முடிந்த வரை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.
இது எனது 20-வது டெஸ்ட் போட்டி. டெஸ்ட் கிரிக்கெட்டின் ஏற்ற- தாழ்வுகளை பார்க்க எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. இது நம்ப முடியாத கடினமான ஆட்டம். இது போன்ற தருணங்களை நீங்கள் பெறும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.
டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு கடினமானது என்பதை பார்த்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்