என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாநில"
- விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவி லான விளையாட்டு போட்டி
- சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது
நாகர்கோவில் : விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள மகளிர் விளையாட்டு விடுதி மாணவி ருத்ரா ஸ்ரீ வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
மாணவி கயாஸ்மி உயரம் தாண்டுதலில் வெண்கலப்ப தக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். மாணவி கயல்விழி ஜனனி 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்க லப்பதக்கம் வென்றுள்ளார். மாணவிகள் ரோஸ்லின், அஸ்மிதா, வசந்தி, கயல்விழி ஜனனி ஆகியோர் 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். மாநில அள விலான போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகளை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் பாராட்டினார்.
- சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வளர் திறன் தேர்வு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும் 2024ல் நடக்கிறது.
- தொழில்நுட்பத்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் மாநில வாரியாக வளர்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
நாமக்கல்:
சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வளர் திறன் தேர்வு பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும் 2024ல் நடக்கிறது.
அதையொட்டி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தொழில்நுட்பத்திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில் மாநில வாரியாக வளர்திறன் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி மாநில அளவிலான வளர் திறன் தேர்வு நிலை 1 தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
7 மையங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி , நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி, டிரினிடி மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது.
இதில் 4,552 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மாநில அளவிலான தேர்வை அடுத்து தேசிய அளவிலும் அதையடுத்து சர்வதேச அளவிலும் வளர் திறன் தேர்வுகள் நடத்தப்படும்.
வளர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்றால் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகையும் கிடைக்கும் என உயர் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
- பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
வாழப்பாடி:
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல்துறை யினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் காரிப்பட்டி பகுதி யில் பிற மாநில தொழிலா ளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகளில் வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரி தலை மையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் உள்ளிட்ட போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
பிற மாநில தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த போலீஸார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .
- அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், கபிலர்மலை, சோழசிராமணி, பாண்டமங்கலம், வெங்கரை, கொளக்கட்டுபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட தேங்காய் குடோன்கள், செங்கல் சேம்பர்கள், வெல்லஉற்பத்தி ஆலைகள் ,கிரானைட் மற்றும் டைல்ஸ் பதிக்கும் வேலை, மற்றும் பல்வேறு தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு எதிரான செயல்கள் நடப்பது போன்ற தவறான வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் ஏற்பட்டு சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அவர்கள் பணியாற்றும் தொழில்களால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அவர்களை பாதுகாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு தேங்காய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க மாநில இணை செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வதந்தி பரவி வருவதால் வெளி மாநிலத்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களை தேங்காய் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அழைத்து உங்களுக்கு முழு பாதுகாப்பு நாங்கள் அளிக்கிறோம். வதந்திங்களை நம்ப வேண்டாம் என எங்கள் சார்பாகவும் பரமத்திவேலூர் போலீசார்சார்பாகவும் நேரில் அழைத்து பேசினோம்.
அதனால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தற்போது நிறுத்தி உள்ளனர். மேலும் இங்கிருந்து விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற வெளிமாநிலத்தினர் திரும்பி வருவது குறித்து அச்சத்தில் உள்ளனர். அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறோம் என தெரிவித்தோம்.
மேலும் பரமத்தி வேலூர் தாலுகாவில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டால் வெளிமாநிலத்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பரமத்திவேலூர் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கூறும்போது, வெளி மாநில தொழிலாளர்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளை கடந்த ஒரு வாரத்தில் பல்வேறு காரணங்களை கூறி காலி செய்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்படும்.வதந்திகளை பரப்பும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
- பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
ராசிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல், ராசிபுரத்தில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை முருகேசன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
இதில் ஒன்றிய பொறுப்பாளர்களாக 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குணவதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட மகிளர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன், பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், தணிக்கை குழு உறுப்பி னர் தண்டபாணி, நாமகி ரிப்பேட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சிதம்பரம், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயவேல் ஆகியோர் பேசினர்.
இதில், தேர்தல் வாக்கு றுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மற்றும் முழுநேர கணினி இயக்குபவர் நியமனம் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் சுகாதா ரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியா ளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆரோக்ய மேரி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்