search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 பேர் காயம்"

    • வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • வேனில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

    கொடுமுடி:

    தேனியில் இருந்து ஒரு சுற்றுலா வேனில் பெரியவ ர்கள் 18 பேர், ஒரு குழந்தை உட்பட 19 பேர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.

    இவர்கள் நேற்று இரவு கொடுமுடி மகுடே ஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் முடித்து விட்டு பவானி சங்மே ஸ்வரர் கோவிலுக்காக வேனில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது இரவு 8.30 மணி அளவில் கருவேலம்பா ளையம் என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று ஓடியுள்ளது.

    அதன்மீது வேன்மோதாமல் இருப்பதற்காக முயற்ச்சித்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்தவர்களுக்கு சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். வேன் கவிழ்ந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அங்கு சென்ற 108 ஆம்புலன்ஸ்சுகள் அங்கு காயம்பட்டிருந்தவர்களை அழைத்துக் கொண்டு கொடுமுடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்ற காயம்பட்டவர்கள் பின்னர் அங்கிருந்த தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இரவோடு இரவாக கவிழ்ந்த வேனையும் அவர்கள் மீட்பு வாகனம் மூலம் எடுத்து சென்றனர்.

    • பழனியம்மாள் (65) உள்பட 10 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது.
    • அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன.

    இந்த நிலையில் காக்கங்கரையைச் சேர்ந்த வேலு (வயது40), பழனியம்மாள் (65) உள்ளிட்ட 10 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அவர்கள் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்களை வெறி நாய் கடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாணியம்பாடி கணவாய்புதூரில் மாடு விடும் விழா நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூர் கிராமத்தில் 13-ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைப்பெற்றது.

    விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார்.

    ஊர் கவுண்டர் தங்கவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டி.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    விழாவில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, குப்பம், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இதில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து

    நிர்ணியிக்கப்பட்ட இலக்கை அதிவேகமாக கடந்து சென்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவை சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் வருகை தந்து விழாவை கண்டு ரசித்தனர். பாதுகாப்பிற்காக வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

    • அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது.
    • லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.

    விழுப்புரம்: 

    விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று காலை மாளிகைமேடு வழியாக கடலூருக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஏ.புதூரை சேர்ந்த சிவசங்கர் ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். இந்த பஸ் பண்ருட்டி அருகே கண்டரக்ேகாட்டை தென்பெண்ணை ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது லாரியை முந்திசெல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது. இதனால் பயணிகள் கூச்சல்போட்டனர். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×