என் மலர்
நீங்கள் தேடியது "தரமான விதைகள்"
- விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
- விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.
கிருஷ்ணகிரி,
விதை விற்பனை யாளர்கள் தரமான விதை களை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை விற்பனை யாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைக் குவியல்களின் தரம் அறிந்து விவசாயி களுக்கு விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். விதை உற்பத்தி யாளர்கள் அல்லது மொத்த விற்பனை யாளர்களிடமிருந்து விதை கொள்முதல் செய்யும் போது விற்பனை பட்டியல் களுடன் விதை முளைப்புத்திறன் பகுப்பாய்வு அறிக்கையும் கேட்டு சரிபாருங்கள்.
பகுப்பாய்வு அறிக்கை பெறப்படாத விதைக் குவியல்களிலிருந்து பணிவிதை மாதிரிகள் எடுத்து ஒரு பணிவிதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப் பாய்வறிக்கையினை பெற்றிடுங்கள்.
விதைக்குவியல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு விதை விற்பனையாளர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும்.
- விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
விவசாயிகள் தரமான விதைகளை விதைப்பிற்கு பயன்படுத்திட வேண்டும் என விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். தரமான விதைகள் என்பது சான்றளிக்கப்பட்ட விதைகளாகும். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் விதை உற்பத்தி செய்ய சான்று விதைகளையே பயன்படுத்த வேண்டும். சான்று விதை என்பது குறிப்பிட்ட தர நிர்ணயத்திற்குள் புறத்தூய்மை, முளைப்புத் திறன், ஈரப்பதம் மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை கொண்டதாகும். புறத்தூய்மை பரிசோதனையில் தூய விதை, பிற தானிய விதை உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகிய நான்கு இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.
விதைக்கப்படும் விதையில் பிற தானிய விதை, உயிரற்ற பொருட்கள் மற்றும் களை விதை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் விதைப் தூய்மையானதாக இருக்கும். அதனால் விதையின் தரம் உயர்கிறது. விதையில் பிற பயிர் விதை மற்றும் களை விதை இருந்தால் நல்ல விதையுடன், அவையும் முளைத்து பயிருடன் சேர்ந்து வளர்ந்து பயிருக்கு இடப்படும் உரம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை எடுத்து வளரும். அதனால் நாம் பயிருக்கு இடும் உரம் மற்றும் பூச்சி மருந்து வீணாவதுடன், பயிர் எண்ணிக்கை குறைந்து மகசூல் குறைகிறது. கல், மண், பயிரின் இதர பகுதிகளான வேர், தண்டு, இலை, உடைந்த விதை ஆகியவை உயிரற்ற பொருட்கள் இனத்தில் சேரும். உயிரற்ற பொருட்கள் மிகவும் குறைவாக இருக்கும்.
புறந்தூய்மை பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளான முளைப்புத்திறன், ஈரப்பதம் ஆகியவை கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் மிகக் குறைந்த செலவில் செய்து தரப்படுகிறது. அதற்கு விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி எடுத்து விதை மற்றும் ரகம், பெயர், குவியல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு முகப்புக் கடிதத்துடன் ஒரு விதை மாதிரிக்கு ரூ.80 என்ற விகிதத்தில், வேளாண்மை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாங்கள் அனுப்பிய விதை மாதிரிகளின் விதை பரிசோதனை முடிவுகள் 30 நாட்களுக்குள் உங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை விரயமின்றி சேமித்து கொள்ள வேண்டும்.
- இந்த தகவலை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதை சேமிப்பு என்பது விதை அறுவடை செய்த காலம் முதல் அடுத்த பருவத்திற்கு நடவு செய்யும் காலம் வரை அதிகபட்ச முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் வீரியம் ஆகியவற்றை பராமரித்தலே விதை சேமிப்பின் முக்கிய நோக்கமாகும். விதை உற்பத்தியில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு விதைகளை பூச்சி மற்றும் நோய்களிங் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை பணி முடிவுற்ற நிலையில் விதைகளை அதன் விதைப்பு பருவம் வரை தங்களது இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு சேமித்து வைக்கப்படும் விதைகளில் ஈரப்பதம் 13 சதவீதத்திற்கு மேல் இருந்தால் அவைகள் எளிதில் பூச்சி நோய் தாக்குதலுக்கு உட்படுகிறது.
இதனால் விதைகளின் தரம் பெரிதும் பாதிக்கப் படுகிறது. விதைகளை பாதுகாக்கும் முறைகள்:-
விதைகளை சேமிக்க புதிய கோணிப்பைகள் அல்லது சுத்தமான தீவன சாக்குகளை பயன்படுத்த வேண்டும். விதை சேமிக்கும் குதிர்கள் மற்றும் கிடங்கு களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள், தூசிகள், பூச்சி தாக்கப்பட்ட விதைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
ஈரப்பதத்தை அந்தந்த விதைகளின் தன்மைக்கு தகுந்தாற் போன்று 9 முதல் 13 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து விதைகளை நொச்சி அல்லது வசம்பு கிழங்குகளை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் கலந்து சேமிக்க வேண்டும். வேதியியல் முறையில் 1 கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் கால்சியம் குளோரைடு கால்சியம் கார்பனேட் மற்றும் அரப்பு தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவையினை பயன்படுத்தி விதையை சேமித்து வைக்க வேண்டும்.
விதை மூட்டைகளை சீரான காற்றோற்றத்துடன் தரையில் அடுக்காமல் கட்டைகளின் மேல் அடுக்க வேண்டும். சுவற்றில் இருந்து 1 அடி இடைவெளி விட்டும் ஒரு அட்டியிலிருந்து மற்றொரு அட்டிக்கு 6 அடி இடைவெளி விட்டும் அடுக்க வேண்டும்.ஒரு அட்டியில் மூட்டைகளை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கும் போது 6 மூட்டைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
15 நாட்களுக்கு ஒருமுறை மூட்டைகளில் பூச்சி தாக்குதல் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட யுக்திகளை கையாண்டு தரமான விதைகளை சேமிப்புக்கால இழப்பு இல்லாமல் சேமித்து வைத்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
- தரமான விதைகளை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயி விவர அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை சரிபார்த்து, விதைகளை வாங்க வேண்டும். விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம் மற்றும் பயிரிட உகந்த மாநிலம் ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
மேலும், விதைகளை வாங்கும் முன்னர், அந்த விதைக்குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கை யினை கேட்டு சரிபார்க்க வேண்டும். விதைகளின் தரத்தினை அறிந்துக்கொள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு பணி விதை மாதிரிக்கு பரிசோதனை கட்டணமாக ரூ.80-ஐ செலுத்தி, விதைகளின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை அலு வலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்து, பகுப்பாய்வறி க்கையினை பெற்றிடுங்கள்.
விதைக்குவி யல்களின் தரமறிந்து நல்ல தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யுமாறு வேளாண்மை துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.