search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரியல் கில்லர்"

    • கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் இந்தோனேசியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்

    ஆந்திரப் பிரதேச மாநிலம் தெனாலியில் 4 பேரை சயநைட் கலந்த பானத்தைக் குடிக்கவைத்து கொலை செய்த சீரியல் கில்லர் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முனகப்பா ரஜினி, மதியாலா வெங்கடேஸ்வரி, குர்லா ராமனம்மா ஆகிய நடுத்தர வயது பெண்மணிகள் மூவர் தெனாலி பகுதியில் உள்ளவர்களைக் குறிவைத்து அவர்களிடம் சினேகமாகப் பேசி சயனைட் கலந்த குளிர்பானங்களைக் குடிக்க வைத்துள்ளனர்.

    அதை குடித்தவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததும் அவர்களிடம் இருக்கும் பெறுமதியான பொருட்களைத் திருடிச்சென்றுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இவர்களின் வலையில் விழுந்த 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களிடம் இருந்து உயிர்பிழைத்தவர்கள் அளித்த புகாரில் பேரில் விசாரணை நடத்தி வந்த ஆந்திர போலீசார் தற்போது இவர்கள் மூவரை கைது செய்துள்ளனர் சயனைடும் திருடப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுக்கு சயனைட் சப்ளை செய்து வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

     

    இந்த மூவரில் 32 வயதான மதியாலா வெங்கடேஸ்வரி என்பவர் 4 வருடங்களுக்கு முன்னர் கம்போடியா சென்று அங்கிருந்து பல சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் ஜாலி ஜோசப் என்ற பெண்மணி 14 வருடத்தில் தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் உட்பட 6 பேரை சயனைட் மூலம் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது.
    • கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்கள் அமைக்கப்பட்டது

    உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் 9 பெண்கள் ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 முதல் 65 வயதுக்கு இடைப்பட்ட அந்த 9 பெண்களும் பெண்களும் அவர்கள் கட்டியிருந்த சேலையைக் கொண்டே கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கொலைக்கு பின் அவர்கள் அனைவரின் உடல்களும் ஒரே மாதிரியாக கரும்புத் தோட்டங்களிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    கடைசியாகக் கடந்த ஜூலை மாதம் அனிதா என்ற பெண் ஒன்பதாவதாகக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியைப் பிடிப்பதற்காக ஆப்ரேஷன் தலாஷ் என்ற பெயரில் 300 அடங்கிய 22 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையில் தீவிரமாக இயங்கி வந்த போலீசார் ஒருவழியாக குல்தீப் என்ற அந்த கொலையாளியைப் பிடித்துள்ளனர்.

     

    எந்த காரணமும் இல்லாமல் நடந்து வந்த இந்த கொலைகளை அவை நடந்த விதத்தை வைத்து மட்டுமே இணைக்க முடிந்தது. இதனால் கொலையாளியின் அடுத்த நகர்வு குறித்து அறிய முடியாத போலீஸ் படையினர் , அப்பகுதிகளில் விவசாயிகள் போலவும், ஊர்க்காரர்கள் போலவும் மாறுவேடத்தில் உலவினர்.

    உள்ளூர்வாசிகள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து கொலையாளியின் பென்சில் ஓவியத்தை உருவாக்கி அதை வைத்துத் தேடுதலைத் துரிதப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆபரேஷன் தலாஷ் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் தான் நவாபன்ஞ் மாவட்டத்தில் உள்ள கங்காவர் என்ற பகுதியில் வைத்து குல்தீப் என்ற அந்த சீரியல் கொலையாளியை மடக்கிப் பிடித்துள்ளனர். குல்தீப்பிடம் முதற்கட்ட விசாரணை நடந்துவருகிறது. தான் 6 பெண்களைக் கொலைசெய்ததாக குல்தீப் போலீசிடம் தெரிவித்துள்ளான்.

     

    திருமணம் ஆன குறுகிய காலத்திலேயே குல்தீப்பின் மனைவி அவனை விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால் பெண்களின்மீது குல்தீப்புக்கு வெறுப்பு உருவாகி அதுவே கொலை செய்யத் தூண்டியுள்ளது. தனியாகச் சிக்கிய அந்த பெண்கள் உடலுறவுக்கு மறுக்கவே அவர்களை குல்தீப் கொலை செய்துள்ளான். குல்தீப்பிடம் மேற்கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • சார்லஸ் சோப்ராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
    • சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார்.

    காத்மாண்டு:

    கொலை, கொள்ளை என உலகை உலுக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ், இந்தியாவில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின், நேபாளத்தில் உள்ள கொலை வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    அமெரிக்க சுற்றுலாப் பயணி கோனி ஜோ ப்ரோன்சிச்சை கொலை செய்த வழக்கில் நேபாள நீதிமன்றம் 1975-ல் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. 10 ஆண்டுக்குப் பிறகு ப்ரோன்சிச்சின் கனடா நண்பரை கொன்ற வழக்கிலும் சோப்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தண்டனை பெற்ற சோப்ராஜ், 2008-ம் ஆண்டு சிறையில் வைத்து தன்னைவிட 44 வயது இளைய பெண்ணான நிஹிதா பிஸ்வாஸை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறையில் இருக்கும்போதே அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவருக்கு 78 வயதாகிறது.

    இதற்கிடையே, வட அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரை கொலை செய்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்யும்படி நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    இந்நிலையில், நேபாள சிறையில் இருந்து சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டார்.

    ×