search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு திருப்பலி"

    • குருத்தோலைகளை எரித்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
    • ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை.

    நாகப்பட்டினம்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதன் வழிபாடு நடந்தது. இதையொட்டி, நாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி இன்று காலையில் நிறைவேற்றப்பட்டது. குருத்தோலைகளை எரித்து அதில் இருந்து சாம்பல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

    திருப்பலியில் வைக்கப்பட்டிருந்த சாம்பல் அடங்கிய கிண்ணங்கள் புனிதம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பேராலய அதிபர் இருதயராஜ், உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோர் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசினர்.

    தவக்காலம் தொடங்கியதை யொட்டி பேராலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டனர்.

    • 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.
    • இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    ஈரோடு:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இது கிறிஸ்தவர்களின் துக்க காலமாக உள்ளது. 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

    இந்த துக்க காலத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூர்ந்து வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தவக்காலம் இன்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் தொடங்கியது.

    கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக எடுத்து சென்ற குருத்தோலைகள் சேகரிக்கப்பட்டு சுட்டு எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த சாம்பல் இன்று திருப்பலியில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டு நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    தொடர்ந்து புனித வெள்ளி வரை நோன்பு கடைப்பிடிக்கப்படும். சாம்பல் புதனை முன்னிட்டு இன்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது.

    ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்கு தந்தையுமான ஆரோக்கியராஜ் ஸ்டீபன், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சி.எஸ்.ஐ நினைவு தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கி வழிபாட்டை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று மாலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம், கொமரபாளையம் புனித அந்தோனியார் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • 40 நாட்கள் உபவாசம் இன்று முதல் தொடங்குகிறது.
    • திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    சென்னை:

    இயேசு வனாந்தரத்தில் 40 நாட்கள் உபவாசம் இருந்த காலத்தை கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். இதனை லெந்து காலம், தபசு காலம் என்று கூறுவது உண்டு. சாம்பல் புதன் கிழமையான இன்று முதல் இந்த நாட்கள் தொடங்குகிறது.

    லெந்து காலத்தில் பிரவேசிக்கும் கிறிஸ்தவர்கள் இன்று முதல் வரும் 40 நாட்கள் அர்ப்பணிப் போடும், உபவாசத்தோடும் நினைவு கூறுவார்கள். இந்த நாட்களில் தங்களை வெறுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வார்கள்.

    கொண்டாட்டங்களை தவிர்த்து பயபக்தியோடு ஆராதனையில் பங்கு பெறுவார்கள். சாம்பல் புதன் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் கத்தோலிக்க திருச்சபைகளில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் நடந்த வழிபாட்டில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பாதிரியார் சபை மக்களின் நெற்றியில் பூசுவார். சிலுவையின் அடையாளமாக இடும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. புகழ் பெற்ற சாந்தோம் ஆலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயம், பெரம்பூர் லூர்து ஆலயம், மாதவரம் அந்தோணியார் ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், பெசண்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

     இதே போல சி.எஸ்.ஐ. இ.சி.ஐ. மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து உள்ளிட்ட திருச்சபைகளில் இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆராதனையில் சிறப்பு செய்தியாளர்கள் `லெந்து காலம்' குறித்து பேசுவார்கள். பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக இது நடைபெறும்.

    இதைத் தொடர்ந்து வரும் 6 வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு தவக்காலம் முன்னதாக தொடங்கி விட்டதால் இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31-ந்தேதி வருகிறது.

    • சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கோவை

    ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி கோவை மாநகரில் உள்ள காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம், டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், திருச்சி ரோடு கிறிஸ்துநாதர் ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம் உள்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியின் போது ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்து ஆலயங்கள் முன்பும் மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
    • பங்குத்தந்தை வளன் தலைமை தாங்கினார். நிர்வாகி அந்தோணிஜோசப், கஸ்பர், அருண் சகோதரர் ஸ்டீபன் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டியில் ''தென்னகத்து வேளாங்கண்ணி'' என்று போற்றப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.

    திருத்தல பங்குத்தந்தை வளன் தலைமை தாங்கினார். நிர்வாகி அந்தோணிஜோசப், கஸ்பர், அருண் சகோதரர் ஸ்டீபன் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். நள்ளிரவு 11.30மணிக்கு 2022-ம் ஆண்டுக்கு நன்றி திருப்பலியும், 12 மணிக்கு 2023-ம்ஆண்டு பிறந்ததை யொட்டி சிறப்பு திருப்பலியும் நடந்தது. புத்தாண்டை வரவேற்று பாடல்கள் பாடினர்.

    இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • இடைக்காட்டூர் திருஇருதய திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • ஏற்பாடுகளை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வருகிறார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் 140 ஆண்டுகள் புகழ் மிக்க திருஇருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இங்கு ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு நாளாக கருதப்படுகிறது.

    அன்றைய தினம் காலை முதல் மாலை வரை நடைபெறும் சிறப்பு திருப்பலிபூஜை, இதய நோயாளிகள் குணம்பெற வேண்டி நடைபெறும் கூட்டு திருப்பலி பிரார்த்த னையில் கலந்து கொள்ள தமிழகம் மற்றும் கேரள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    புகழ்மிக்க இந்த ஆலயத்தில் இன்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி குழந்தை ஏசு பிறக்கும் நிகழ்ச்சி பிரமாண்ட குடில் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நள்ளி ரவு திருப்பலியும், நாளை (ஞாயிறு) காலை 11மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்ப லியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடு களை திருத்தல அருட் பணியாளர் இமானு வேல் தாசன் செய்து வரு கிறார். இதே போல் மானா மதுரை நகர்பகுதியில் உள்ள புகழ்மிக்க புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் இன்று இரவு ஏசுபாலகன் பிறக்கும் நிகழ்ச்சியும், நள்ளிரவு திருப்பலியும் நடக்கிறது.

    ×