search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்ஷன்"

    • தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
    • ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

    ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா முதல் மந்திரியாக மனோகர் லால் காட்டார் இருந்து வருகிறார்.
    • முதல்முறையாக திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் அங்கு அறிமுகமாகிறது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாதவர்களுக்கும் பென்ஷன் அளிக்க முடிவு செய்துள்ளது மாநில அரசு.

    விரைவில், அமலுக்கு வர உள்ள இந்த பென்ஷன் பெற தகுதிகளாக சில விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, திருமணம் ஆகாதவர்கள் 45 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரியானாவில் திருமணமாகாதவர்கள் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் மாதந்தோறும் 2,750 ரூபாய் பென்ஷன் பெற உள்ளனர்.

    தற்போது திருமணமாகாதவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ஏற்கனவே, பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையர் இருவரில் ஒருவர் உயிரிழந்தாலும் பென்ஷன் வழங்கும் திட்டம் அரியானாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும்.
    • பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் கலைவாணன், இளவரசன் தலைமை தாங்கினர்.

    அரசு ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், மாநில துணைத்தலைவர்.தமிழ்நாடு உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் மாநில தீர்ப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு வெங்கட்டு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் சுந்தரம் வரவேற்றார்.

    அப்போது தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×