search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைரேகை"

    • வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.
    • புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை, விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவித்தொகைகள் வங்கிகள் மூலம் வழங்கப் படுகிறது.

    வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முதியோர்கள் வங்கிக்கு சென்று சலான் நிரப்பி எடுப்பது சிரமம்.

    இதனால் வங்கிகளில் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணம் எடுக்கும் முறை உள்ளது. இந்த முறையில் பணம் எடுக்க ஏ.டி. எம்., கார்டு, வங்கி புத்தகம், ஆதார் எண், ஓ.டி.பி. தேவையில்லை. சிறிய ரேடியோ போன்ற வடிவில் கருவி இருக்கும்.

    இந்த கருவியில் கைரேகையை பதிவு செய்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

    கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறையில் முதியோர், விதவை உள்ளிட்டோருக்கு வங்கியில் இருந்து பணம் எடுத்து தரப்படுகிறது.

    தற்போது இணைய வழி மோசடி கும்பல் கடந்த 4 நாட்களில், புதுச்சேரியைச் சேர்ந்த 62 நபர்களின் வங்கி கணக்கில் இருந்து இந்த கருவி மூலம் பணம் திருடி உள்ளனர்.

    பொதுமக்கள் சிம்கார்டு வாங்கும் போது ஆதார் கார்டை புதுப்பிக்கும் போது, சொத்து வாங்க, விற்கும்போது பத்திர பதிவு அலுவலகத்தில் கைரேகை பதிவுகளை பயன்படுத்துவர். அந்த கைரேகை பதிவுகளை, அதே போன்ற கைரேகையை சிலிக்கான் பதிவு மூலம் பிரதி எடுத்து, ஒ.டி.பி., இன்றி வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை எடுக்கின்றனர்.

    இந்த முறையில் பணம் எடுக்கும் மோசடியை தடுக்கும் முறையை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    • இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர்
    • காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மோட்டார் சைக்கிள் ஷோரூம் செஞ்சி சாலையில் இயங்கி வருகிறது. இது மறைந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ஹிராசந்த் குழுமத்திற்க்கு சொந்த மானதாகும். இதனை அவரது மகன் ஜீன்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் நிர்வகித்து வருகின்றனர் இந்த ஷோரூமை, அங்கு பணிபுரியும் சந்தோஷ் என்பவர் நேற்று இரவு மூடி பூட்டிவிட்டு சென்றார்.இன்று காலை 11 மணியளவில் வந்து பார்த்தபோது ஷோரூமில் இருந்த கல்லா உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் கல்லாவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்த பணம் ரூ.3 லட்சம் திருடு போய் இருந்தது. இது குறித்து ரோஷனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுண ர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
    • கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    தமிழகத்தில் பிரதம மந்திரி தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 19 பேர் கழி வறை கட்டியுள்ளனர். இதில் ரத்தினாம்பாள், ஜெக தாம்பாள், கலியமூர்த்தி ஆகிய 3 பேருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டது. பல்லவன் கிராமப்புற வங்கியில் இருந்த பயனாளி களின் வங்கி கணக்கில் மானியத் தொகை செலுத் தப்பட்டது. இதில் ஜெகதாம் பாள், கலியமூர்த்தி ஆகியோ ரின் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பெற்றுள்ளனர். சிறிது நேரத்தில் வந்து பணம் தருவதாக கூறிச் சென்றுள்ளனர். பின்னர் யாரும் வந்து தரவில்லை.

    அதேசமயம் ரத்தினாம் பாளிடம் கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் பல்லவன் கிராம வங்கிக்கு சென்று, நடந்த சம்பவத்தை மேனேஜரிடம் கூறியுள்ளனர். இது தொடர் பாக விசாரிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர் பாக பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் கலெக்ட ருக்கும் புகார் மனு அனுப்பி யுள்ளனர். இந்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களி டையே காட்டுத் தீ போல பரவியது. இதனால் தங்கள் வங்கி கணக்கில் பணம் உள்ளதா என்பதை உறுதி செய்ய பொதுமக்கள் வங்கிக்கு செல்கின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
    • ஆலயத்தில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் வளாகத்தில் நரசிம்மர் மடம் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு நேற்று காலை அர்ச்ச கர் உண்ணிகிருஷ்ணன் ஷம்புநாத் வந்த போது, உண்டியல் உடைக்கப்ப ட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஆலயத்தின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரிசி பானையை திறந்து அதில் வைக்கபட்டிருந்த சாவிகளை எடுத்து 2 உண்டியல்களையும் திறந்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆலயத்தில் வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று விட்டனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கைரேகை நிபுணர்களை அழைத்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது உண்டியலின் மேற்பகுதியில் 2 பேரின் கைரேகை பதிந்த தடயம் கிடைத்தது. அதை வைத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். பழைய கொள்ளையர்களின் கைரேகை தடயங்களுடன் ஓப்பிட்டும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொள்ளையர்கள் கோவிலின் பின்பக்கம் வழியாக நடந்து சென்று பக்கத்தில் உள்ள ஆற்றின் கரையோரம் தான் சென்றிருப்பார்கள் என்று தெரிகிறது.

    • தனிப்படை போலீசார் விசாரணை
    • கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே அக்கரை கடைத்தெருவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 2 உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து இருந்தனர். அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இது குறித்து தலைவர் கபிரியல் ரவி, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். அப்போது கோவிலில் 2 கைரேகைகள் சிக்கியது.

    அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரேகைகளோடு ஒப்பிட்டு பார்த்து வரு கிறார்கள். மேலும் கொள்ளை யர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக ஆலயங்களை குறிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வரு கிறார்கள். எனவே அதே கொள்ளையர்கள் இங்கும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ×