search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது.
    • புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும்.

    * அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து கோலமிடுவது மிகவும் நல்லது. அதிகாலையில் கோலம் போடுவதால் கஷ்டங்கள் விலகும். காலை 6 மணிக்குள் கோலம் போட வேண்டும்.

    * காலையில் எழுந்து அப்படியே வெளியில் சென்று கோலம் போடக்கூடாது. முகம் கழுவி, திலகம் வைத்துக்கொண்டு வெளியில் சென்று கோலம் போட வேண்டும்.

    * கோல மாவுடன் பச்சரிசி மாவு கலந்து கோலம் போடலாம். வெறும் பச்சரிசி மாவிலும் கோலம் போடலாம்.

    * வாசலில் கோலமிடுவது, அழகுக்கு மட்டுமல்ல. தீய சக்திகள் நம் வீட்டுக்கு உள்ளே நுழையாமல் தடுக்கவும் தான் கோலமிடுகிறோம்.

    * உட்கார்ந்தபடி போடக்கூடாது. வலக்கையால் தான் கோலமிட வேண்டும்.

    * புள்ளிகள் வைக்கும்போது, ஏணியில் ஏறுவது போல் ஏறுவரிசையில் வைக்க வேண்டும். கோடுகளையும் அப்படியே போட வேண்டும். மேலிருந்து கீழாக போடக்கூடாது.

    * ஈரிழைக் கோலம் மங்கலத்தைக் கொடுக்கும், ஒரு கோடு, மூவிழைக் கோலம் அமங்கலத்தைக் குறிக்கும். விழாக்காலத்திற்கு நாலிழைக் கோலம் நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செட்டிநாட்டு பகுதிகளில் கோலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.
    • எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    லட்சுமி தேவி நம் இல்லத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். அவற்றுள் ஒன்றுதான் பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி கோலமிட்டு வழிபடுவதாகும்.

    செட்டிநாட்டுப் பகுதிகளில் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இப்பொழுது நகரங்களில் எல்லாம் கோலப் போட்டிகள் நடத்தி கோலம் இடும் கலையை வளர்த்து வருகிறார்கள். வெள்ளிக் கிழமை மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் வீட்டு வாசலில் கோலம் இடுவது மரபு.

    கோலங்களில் பல வகைகள் உள்ளன. அவை மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி, நடுவீட்டுக் கோலம், பின்னல் கோலம் என்றெல்லாம் இருக்கின்றன. அதிகாலையில் வீட்டு முகப்பில் சாணம் தெளித்து கோலம் போட்டால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அவரவர் இல்லங்களில் அவரவர்களே கோலமிடுவது மிகவும் சிறப்பு.

    முன்காலத்தில் தமிழர்கள் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, காலைக் கடன்களை முடித்து குளித்து, அதன்பிறகு வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது வழக்கம். வாசல் தெளிக்கும் போது முன்பெல்லாம் சாணம் தெளிப்பார்கள்.

    சாணம் ஒரு கிருமி நாசினி. செவ்வாய், வெள்ளி மற்றும் விசேஷ நாட்களில் மாவிலைத் தோரணங் களை வாசலின் நிலைப்படியில் கட்டுவார்கள். கிருமிகளை ஈர்க்கக்கூடிய ஆற்றலும் உண்டு.

    காலையில் பெண்கள் குனிந்து கோலமிடுவதன் மூலம் உட ற்பயிற்சியோடு, நல்லதொரு கோலக்கலையும் வளர வழிவகுத்தனர். பண்டிகை தினங்களான புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களில் வண்ணக் கோலம் இடுவதும் நம் வழக்கம்.

    கிருஷ்ண ஜெயந்தியன்று நம் வீட்டிற் குள் கிருஷ்ணர் அடியெடுத்து வைப்பது போல சிறிய பாதங்களை வரைவார்கள். வீதியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதக் கோலம் வரையப்படும். நம்வீட்டில் நடக்கும் பூஜையை கண்ண பரமாத்மா வந்து ஏற்றுக் கொள்வதாக நம்பிக்கை.

    மாதங்களிலேயே மார்கழி மாதத்தில்தான் கோலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின் றோம். மற்ற மாதங்களில் மக்கள் கோலத்தை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஆனால் அலங்கோலமான வாழ்வை மாற்றுவது மாக்கோலமிட்டு செய்யப்படும் வழிபாடுதான் என்பதை அனுபவத்தில் தான் உணர முடியும்.

    `கோலம்' என்றால் 'அழகு' என்று பொருள். வீட்டை அலங்கரித்தால் மகிழ்ச்சியும் குடியேறும். மனதை அழகு படுத்தினால் இறைவனும் குடியேறுவான். நமது வாழ்வில் சகல நாட்களும் சந்தோஷம் பெருக வேண்டுமானால், அன்றாடம் சமையலறையில் அடுப்பிற்கு கோலம் இட வேண்டும்.

    துளசி மாடத்தின் முன்பும், வீட்டின் முன் வாசலிலிலும் கோலம் இட வேண்டும். அடுப்பில் கோலமிட்டு அன்னலட்சுமியை வரவேற்றால், அஷ்டலட்சுமிகளும் தாங்களாகவே வந்துசேர்வார்கள்.

    இதயக் கமலம், ஐஸ்வரியக் கோலங்கள் இடும்பொழுது கண்டிப்பாக கால்களில் மிதிக்கக் கூடாது. பொதுவாக யாருமே கோலத்தை மிதிக்கவோ. அழிக்கவோ கூடாது. கோலத்தை நாம் மங்கலமாகக் கருதி கொண்டாட வேண்டும். கோலம் இடுவதில் அழகும் இருக்கிறது, புண்ணிய மும் சேர்கிறது.

    கோலம் போடுவதற்கு பச்சரிசி மாவை உபயோகப்படுத்துவது நல்லது. அதாவது நாம் அரிசி மாக்கோலம் போடும் பொழுது, அந்த அரிசி மாவை எறும்புகள் மற்றும் ஊர்வன சாப்பிடுவதன் மூலம் அன்னதானம் செய்த பலன் நமக்கு கிடைத்து புண்ணியம் வந்து சேரும்.

    எனவே லட்சுமி இல்லத்தில் குடியேற ஒவ்வொரு நாளும் அதிகாலையில் வீட்டு முகப்பில் அழகிய கோல மிட்டு வரவேற்போம். ஆரோக்கியமான வாழ்வும். செல்வச் செழிப்புமிக்க வாழ்வும் அமைய வழிவகுப்போம்.

    • கோலம் போடுவதில் தகராறில் பெண்ணை தாக்கியுள்ளனர்.
    • இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.

    மதுரை

    அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரவீந்திரநாத் மனைவி பாக்கியலட்சுமி (54). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜா மனைவி ருத்ரவல்லி (40) எதிர்ப்பு தெரிவித்தார்.

    இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் பாக்கியலட்சுமி தாக்கப்பட்டார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ரவள்ளி, அவரது சகோதரர் வன்னிமுத்து சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே வழக்கில் ருத்ரவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி, அவரது சகோதரி சத்யா, வேலைக்காரர், கார் டிரைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
    • கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரெயில்வே சாலையை சேர்ந்தவர் கயல்விழி வினோதினி.

    இவர் மார்கழி மாதம் பிறந்த நாளிலிருந்து தினந்தோறும் வகை வகையான வண்ண வண்ண கோலங்கள் போட்டு அவ்வழியே செல்பவர்களை கவரும் வகையில் கோலமிட்டு வருகிறார்.

    மார்கழி மாதம் தொடங்கிய முதல் நாள் அதிகாலை மார்கழி மாதத்தை வரவேற்கும் விதமாக வரைந்திருந்த கோலம் அனைவரையும் கவர்ந்தது.

    இதே போல் ஒவ்வொரு நாளும் அதிகாலை வேளையில் ஒவ்வொரு வர்ணஜாலங்களில் கோலமெட்டு வருவதை அவ்வழியே செல்பவர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

    தொடர்ந்து அதிகாலை வேளையில் கோலமிட்டு வரும் கயல்விழி வினோதினி புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாசலில் அழகிய கோலமிட்டு இருந்தார்.

    இதேபோல் தைப்பொங்கல் அன்று வாசல் முன்பு போட்ட கோலமும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்ததாக அமைந்தது.

    இந்நிலையில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று காலை கயல்விழி வினோதினி போட்ட கோலம் வித்யாசமாக அமைந்திருந்தது.

    பட்டுப் புடவையை தரையில் விரித்து வைத்தது போல் போடப்பட்ட கோலம் அதில் அந்தப் புடவையின் விலையையும் குறிப்பிட்டு இருப்பது அனைவரையும் கவர்ந்தது.

    இதை பார்ப்பவர்கள் கோலம் என்பதற்கு பதிலாக பட்டுப் புடவை தரையில் கிடப்பதாக எண்ணி ஏமாந்து பின்னர் தான் அது கோலம் என்று கண்டுபிடித்தனர்.

    அந்த அளவுக்கு பட்டுப் புடவை கோலம் அமைந்திருந்தது.

    இதுகுறித்து கயல்விழிவினோதினி கூறுகையில், கோலம் போடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்து வருகிறது.

    எனது கோலங்கள் அழகாக இருப்பதால் அரசு விழாக்கள் நடக்கும் இடங்களுக்கும் நான் சென்று கோலம் போட்டு வருகிறேன். தொடர்ந்து வருடத்தில் உள்ள அனைத்து நாட்களிலும் கோலம் போடுவதற்கு ஆசை தான்.

    ஆனால் விருப்பம் இருந்தாலும் அந்த முழு கலை திறனை மார்கழி மாதத்தில் மட்டுமே சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது.

    இதனால் கோலங்களை ஆர்வத்துடன் வாசலில் போட்டு வருகிறேன்.

    இந்த கோலத்தை பார்ப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தி விட்டுச் செல்கின்றனர். வாசலில் கோலம் போடுவது ஒரு கலையாக இருந்து வருகிறது.

    • 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.
    • கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் காமராஜர் தெருவில் விழிப்புணர்வு கோல போட்டி நடைபெற்றது.

    இதில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.

    இதையடுத்து கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 39-வது வார்டு கவுன்சிலர் எம்.உஷா பரிசுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜான்சன், எழில், பிரபு தி.மு.க வட்ட செயலாளர், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×