search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    X

    கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலர் உஷா பரிசு வழங்கினார்.

    விழிப்புணர்வு கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    • 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.
    • கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சி என்ற தலைப்பின் கீழ் வார்டு தோறும் கோலப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் காமராஜர் தெருவில் விழிப்புணர்வு கோல போட்டி நடைபெற்றது.

    இதில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டின் முன்பு கோலங்கள் இட்டனர்.

    இதையடுத்து கோல போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 39-வது வார்டு கவுன்சிலர் எம்.உஷா பரிசுகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஜான்சன், எழில், பிரபு தி.மு.க வட்ட செயலாளர், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×