என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொங்கல் விடுமுறை"
- 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிப்பு.
- அபராதம் மூலம் ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த 1,892 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பேருந்கள் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 10 முதல் 21ம் தேதி வரை சிறப்பு குழுக்கள் மூலம் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பதிவு செய்து தமிழ்நாட்டில் சுமார் 1,000 பேருந்துகள் இயங்குகின்றன.
மேலும், விதிகளுக்கு புறம்பாக தமிழகத்தில் இயங்கும் ஆம்னி பேருந்துகளை வரைமுறைப்படுத்த காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- 13ந்தேதி மட்டும் அதிகபட்கமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464பேர் பயணம் செய்துள்ளனர்.
- 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்த 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்ச மாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21,731 பேரும், கிண்டியில் 14,649 பேரும் திருமங்கலத்தில் 13,607 பேரும், விமான நிலையத்தில் 12,909 பேரும் பயணித்தனர்.
14-ந்தேதி போகிப்பண்டிகை அன்று 1 லட்சத்து 62 ஆயிரத்து 525 பேரும், 15-ந்தேதி பொங்கல் நாளில் 1 லட்சத்து 8160 பேரும், 16-ந்தேதி மாட்டு பொங்கலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 167 பேரும் பயணம் செய்துள்ளனர். 4 நாட்களில் மொத்தம் 6 லட்சத்து 71 ஆயிரத்து 316 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் பார்வையிட நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்த வண்ணம் இருப்பர்.
இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து பொங்கல் விடுமுறையை உற்சாகமாக களிக்க சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து மகிழ்கின்றனர்.
நேற்று பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்தனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.
புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து, ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
ரோஜா பூங்கா, பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் மிகுந்த பனிப் பொழிவும், பகல் நேரத்தில் மிதமான வெப்பநிலையும் காணப்படுகிறது. இத்தகைய ரம்மியமான காலநிலையை அனுபவிக்கும் விதமாக குன்னூர், கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களான டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, கொடநாடு காட்சி முனை உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்