என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நரசிம்மர் கோவில்"
- பெரியமலையில் உள்ளே நுழையும்போது எழில்மிகு கோபுரத்தைக் காணலாம்.
- முதலில் தயார் சன்னதியைக் காணலாம் இவரை அம்ருதவல்லித் தயார் என்று கூறுவர்.
பெரியமலையில் உள்ளே நுழையும்போது எழில்மிகு கோபுரத்தைக் காணலாம்.
உள்ளே பெரிய பலிபீடமும் கொடிமரமும் காட்சி தருகின்றன.
இங்கே கொடிமரம் இருப்பதால் ஊர் நடுவில் உள நரசிம்மர் கோவிலில் கொடிமரம் இல்லை.
மலைக்கோவிலில்தான் முதன்மையான பூஜை செய்யப்படுகிறது.
முதலில் தயார் சன்னதியைக் காணலாம் இவரை அம்ருதவல்லித் தயார் என்று கூறுவர்.
கிழக்கு முகமாக இவர் அருள் பாலிக்கிறார்.
வடக்கு முகமாக நடந்தால் துவாரபாலகர்களைக் காணலாம்.
தெற்கு வாசலில் நுழைந்தால் கோவிலின் முன்மண்டபம் காணலாம்.
மண்டப விதானத்தில் நவீன ஓவியங்களைக் காணலாம். பெருமாளின் முன்பாகக் கருடாழ்வார் காட்சி தருகிறார்.
இவருக்குப் பின்புறமுள்ள சுவரில் சாளரமுண்டு.
இங்கிருந்து பார்த்தால் சிறியமலை யோக ஆஞ்சநேயர் தெரிவார்.
கருவறையைச் சுற்றி வரலாம். கருறையில் கருங்கல்லில் சிலாவடிவில் ஸ்ரீயோக நரசிங்கப்பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
கீழே அமைந்த பலகையில் சிறிய ஐம்பொன்சிலை உள்ளது.
இது ஸ்ரீலட்சுமி நரசிம்மப் பெருமான் சிலையாகும். அடுத்து ஆதிசேடன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் ஆகியோர் உள்ளனர்.
புக்கான், மிக்கான் என வழங்கப்படும் அடியார்களையும் காணலாம்.
மலைமீதுள்ள பெருமானை ஆழ்வார் அக்காரக்கனி என்பர்.
இவரது ஐம்பொன்சிலை பாதுகாப்புக்கருதி ஊரில் உள்ள கோவிலில் வைத்துள்ளனர்.
அம்மன் பெயருக்கு அம்ருதவல்லி என்ற பெயருடன் சுதாவல்லி என்ற பெயருமுண்டு.
கற்றிருமேனியும் செப்புத் திருமேனியும் இவருக்கும் உண்டு.
சின்னமலையில் உள்ள அனுமார் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரைக் கண்டவாறே அவரை நினைந்து தவமிருப்பதால் இவரும் யோக ஆஞ்சனேயர் என அழைக்கப்படுகிறார்.
சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம் பின்புறக் கைகளில் ஏந்த முன்புறக் கைகளில் ஜப மாலை பற்றி உள்ளார்.
வீற்றிருந்த கோலம். ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு உண்டு.
கார்த்திகை மாத உற்சவமும் குறிப்பிடத்தக்கது. அனுமான் சன்னதியடுத்து ஒரு குளமும் உண்டு.
அனுமான் தீர்த்தம் அல்லது சக்கரத்தீர்த்தம் என்று இது அழைக்கப்படுகிறது.
ராமர் சன்னதியும் உண்டு. அரங்க நாதரும் காட்சி தருகிறார்.
- இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.
- இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை.
நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.
தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை. பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சில நூல்களில் மோலோட்டமாகவும் சிலவற்றில் ஆழமாகவும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய் காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.
பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை. பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான்.
அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார். பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான்.
அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள்.
அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.
இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தது. இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.
இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதானல் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.
- ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், அஷ்ட லக்ஷ்மி தேவிகளை வலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கி வளம் பெரும் என்பது நம்பிக்கை.
- ஸ்ரீ சுதர்சனர் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் பிரயோகச் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஹிரண்யனை வதம் செய்வதற்காக ஸ்ரீஅகோபிலத்தில் தோன்றியவர். பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரசித்தி பெற்ற பல தலங்களில் யோக நரசிம்மராக, உக்ர நரசிம்மராக, சிம்மாசலராக என தோற்றங்களில் காட்சி தருகிறார். அவற்றில் சிறப்பானதொரு கோலம் சாந்த மூர்த்த கோலம்.
அக்கோலத்தில், உக்ரம் தணிந்தவராக, சாந்தமூர்த்தியாக தாயார் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் எழுந்தருளியுருக்கும் தலம்தான் நங்கைநல்லூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்.
"தட்சண தீபாலயம்" என்று அழைக்கப்பட்ட அப்பகுதி, நங்கையுடன் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியதால் "நங்கைநல்லூர்" என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி நங்கநல்லூர் ஆனது.
பல வகைகளில் சிறப்புப் பெற்றதாக இவ்வாலயம் விளங்குகிறது. ஆலயத்தில் இருக்கும் "ஸ்ரீ சுதர்சனர்" சன்னதி மிகுந்த சக்தி வாய்ந்தது.
சுதர்சன யந்திரம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் தீய பாதிப்புகள் உடையவர்கள், மன பாதிப்புக்கு உள்ளானவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபட்டு தியானம் செய்ய நற்பலன் கிடைக்கிறது.
ஸ்ரீ சுதர்சனரின் மறுபுறத்தில் யோக நரசிம்மர் பஞ்ச முக ஆதிசேஷனின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். நாங்கு வேதங்களும் நான்கு சக்கரங்களாக இவரது திருக்கரங்களில் காட்சி அளிக்கின்றன.
சுற்றிலும் அஷ்ட லக்ஷ்மியர் அனுக்ரஹப் பார்வையுடன் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், அஷ்ட லக்ஷ்மி தேவிகளை வலம் வந்து வழிபட தோஷங்கள் நீங்கி வளம் பெரும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ சுதர்சனர் சன்னதி எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் பிரயோகச் சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயம் அகழாய்வு செய்யப்பட்ட போது கிடைத்த மஹாவிஷ்ணுவின் பிரயோகச் சக்கரமே இங்கு பிரார்த்தனைச் சக்கரமாக உள்ளது. இறைவனை வேண்டி இந்தப் பிரார்த்தனைச் சக்கரத்தின் மீது கைகளை வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர் பக்தர்கள்.
மஹாப் பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இங்கு வந்து வழிபட்டு, இவ்வாலய இறைவனை "வினை தீர்க்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்" என அழைத்துச் சிறப்புச் செய்துள்ளார். அதற்கேற்றவாறு இங்கு வந்து வழிபட்டு தங்கள் வினைகளை நீக்கிக் கொண்டவர்கள் ஏராளம்.
- சிவன் கோவில் கருவறையில் உள்ள கிரீவகோஷ்டத்தில் யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது.
- கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் அழகிய சிங்கரின் சன்னதி உள்ளது.
திருவள்ளூர் நகரில் வீரராகவப் பெருமான் என்ற பிரம்மாண்டமான கோவில் உள்ளது. இக்கோவிலின் தென் மேற்குப் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மரின் சன்னதி உள்ளது.
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு அருகில் திருமழிசை என்ற புராதனமான ஊர் உள்ளது.
திருமழிசை ஆழ்வார் பிறந்த இவ்வூரில் ஜகநாதர் என்ற விஷ்ணுகோவில் உள்ளது. இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் அழகிய சிங்கரின் சன்னதி உள்ளது. பெயருக்கேற்ப எழிலுடன் இப்பெருமான் உள்ளார்.
மதுராந்தகம் கோதண்டராமர் கோயில் என்ற ஏரி காத்த ராமர் கோயில் புகழ்மிக்க கோயிலாகும். இக்கோயிலின் உள்பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மருக்குத் தனியாக சன்னதி உள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புளியங்குடி என்ற தொன்மையான ஊர் உள்ளது.
இவ்வூரில் சிவன் கோயில், விஷ்ணு கோயிலுடன் திருவாவடுதிறை ஆதீனத்தின் கிளை மடமும் உள்ளது. அஷ்டாங்க விமானத்துடன் கூடிய விஷ்ணு கோயிலில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
பழைய சீவரம் போன்று செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூரில் முக்தீஸ்வரர் என்ற சிவன் கோயிலும் கல்யாண விரதவிண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலும் உள்ளன.
சிவன் கோயில் கருவறையில் உள்ள கிரீவகோஷ்டத்தில் யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நரசிங்கமங்கலம் என்னும் புராதனமான ஊர் உள்ளது. இவ்வூரில் நரசிம்மர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுகளும் விஜயநகரப் பேரரசர் காலக் கல்வெட்டுகளும் உள்ளனர்.
செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பழைய சீவரம் என்ற பழைய ஊர் உள்ளது. ஊர்ப் பெயரிலேயே பழைய என்ற முன்னொட்டு உள்ளது.
இவ்வூர் மலை மேல் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய வாயில். ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என இக்கோவில் முதலில் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை வல்லத்தில் உள்ள நரசிம்மர் தலத்துக்குரிய தலபுரணாம் கி.பி.1799-ல் இயற்றப்பட்டது. இத்தல புராணத்தில் கவுதம முனிவர் தம்பெயரில் தீர்த்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு நாள்தோறும் நீராடி நரசிம்மப் பெருமானை வழிபட்டு வர நரசிம்மரும் அவருக்குக் காட்சி தந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
- சிங்கப்பெருமாள் கோவிலில் வீரநரசிங்கன் முக்கியத் தெய்வம்.
- கருவறை வீரநரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீரநரசிங்கன் ஆகியோர் அனைவரும் இடதுகாலைத் தொங்கவிட்டபடி காட்சி தருகின்றனர்.
தஞ்சை, யாளி நகர் ஸ்ரீ வீரநரசிம்மர் கோயிலில் கருவறை வீரநரசிம்மர், ஆழியுள் அமர்ந்த நரசிம்மர், வைகுந்த நரசிம்மர், கல்யாண நரசிம்மர், விதானத்து வீரநரசிம்மர் ஆகிய ஐவரை தரிசிக்கலாம். தஞ்சை மாமணிக்கோவிலாகிய ஸ்ரீநீலமேகர் கோவிலில் அபயவரத நரசிம்மர், செங்கமலவல்லித் தாயார் சந்நிதியில் கம்பத்தடி யோக நரசிம்மர், மேலும் வலவெந்தை நரசிம்மர் ஆகிய மூவரையும் சேர்த்து ஆற்றங்கரை விஷ்ணு ஆலயங்களில் அஷ்ட (எட்டு) நரசிம்மர்களை நாம் கண்டு வணங்கலாம்.
கருவறை வீர நரசிம்மர்
தஞ்சை யாளி நகர் சிங்கப்பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருப்பவர் இவர். வீரம் என்ற குணத்தின் வடிவாய் இலங்குபவர். தஞ்சகாசுரன் இறுதியில் எம்பெருமானிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் தஞ்சை யாளி வீர நரசிங்கமாகவே இன்றளவும் அருள்பாலித்து வருகிறார். திருமகள், மண்மகளுடன் சேர்ந்து பரமபதத்தில் அருள்பாலித்து வரும் வைகுந்தநாதனே தஞ்சகாசுரனுக்கு மோக்ஷ நிலையில் நரங்கலந்த சிங்கமாகக் காட்சி கொடுத்தார். ஆதலால் இத்திருத்தலத்திற்கு "மோட்ச ஸ்தலம்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
ஆழியுள் அமர்ந்த நரசிங்கன்
விண்ணாற்றங்கரையிலுள்ள விஷ்ணு ஆலயங்கள் அனைத்துமே கிழக்கு நோக்கியுள்ளன. சிங்கப்பெருமாள் கோவிலில் வீரநரசிங்கன் முக்கியத் தெய்வம். இவர் சக்கரத்தினுள் அமர்ந்துள்ளார். இவருக்குக் கீழே பிரஹலாதன், ஹிரண்யகசிபு ஆகிய இருவரையும் நின்ற நிலையில் நிறுவி, நடுவே யோக நரசிங்கனை அமர்ந்த கோலத்தில் எழுந்தருளச் செய்துள்ளனர். சிங்கப்பெருமாள்கோவில் நரசிங்கனை "தஞ்சை யாளியைப் பொன்பெயரோன் நெஞ்சமன்றிடந்தவன்'' எனத் திருமங்கை ஆழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளதை நினைவிற் கொண்டேதான் பிரஹலாதன், ஹிரண்யகசிபு ஆகிய இருவர் புடைசூழ ஆழியுள் அமர்ந்த நரசிங்கனை அமைத்திருக்கலாமெனத் தோன்றுகிறது.
வைகுந்த நரசிம்மர்
கருவறை வீரநரசிங்கன், கல்யாண நரசிங்கன், விதானத்து வீரநரசிங்கன் ஆகியோர் அனைவரும் இடதுகாலைத் தொங்கவிட்டபடி காட்சி தருகின்றனர். இருப்பினும் வீரநரசிங்கன் கோவிலான சிங்கப்பெருமாள் கோவிலின் கொடி மரத்தில் உபய நாச்சிமார்கள் இருமருங்கிலும் அமர்ந்தவராய் வைகுந்த நரசிம்மர், தன்னுடைய வலது காலைத் தொங்கவிட்டபடி காட்சி தருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கம்பத்தடியோக நரசிம்மர்
ஸ்ரீசெங்கமலவல்லி நாயிகா உடனுறை நீலமேகப் பெருமாள் கோவிலின் தாயார் சந்நிதியில் முகமண்டபத் தூணில் தென்திசை நோக்கியவாறு கம்பத்தடி யோக நரசிம்மர் அருள்பாலிக்கிறார். இவரது உருவம் காண்போரின் கண்களைக் கொள்ளை கொள்கின்றது. அவ்வகையில் அழகிய சிற்ப அமைதியுடன் அழகோடு அமைந்த யோக நரசிம்மரைத் தஞ்சை பிருஹதீச்வரர் ஆலயத்திலும் காணமுடிகின்றது. கம்பத்தடி யோக நரசிங்கன் தென்திசை நோக்க, கீழைத் திசையில் வீர ஆஞ்சநேயர் காட்சி கொடுக்கின்றார். இம்மூர்த்திகளை 108 முறை வலம் வந்தால் எண்ணியவை இனிது நிறைவேறும் என்பது தொன்று தொட்டுக் கூறப்பெறும் சிறப்புச் செய்தியாகும். தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலும் இந்த வகை நரசிம்மர் அருளாசி புரிகின்றார்.
- நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன.
- அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.
கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் வழிபாடு சகல நன்மைகளையும் வழங்க வல்லது என்பது சமயச் சான்றோர்களின் கருத்து. அதுவும் யோக கோலத்தில் உள்ள நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது பன்மடங்கு சிறப்பு வாய்ந்தது.
யோக கோலத்துடன் அதுவும் லட்சுமியுடன் சுமார் 16 அடி உயரத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி கட்டவாக்கம் என்னுமிடத்தில் ஆலயம் கொண்டுள்ளார். தாம்பரம் - வாலாஜாபாத் சாலையில் வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் உள்ளது இவ்வாலயம். ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில் அம்பும் தாங்கி அபய வரத ஹஸ்தத்துடன் காட்சியளிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
மகாலக்ஷ்மியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு மூன்று கண்கள் அமைந்துள்ளன. அருள் விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்களும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்.
மடியில் வீற்றிருக்கும் தாயார், தாமரை தாங்கிய அபய ஹஸ்தத்துடன் மிகவும் சவுந்தர்யமான கோலத்தில் அருள்கிறார்.
மேலும் நரசிம்மருக்கு 12 பற்கள் அமைந்துள்ளன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் - ஆக நவகிரகங்களும் பெருமாளுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கியிருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும, வஜ்ரதம்ஷ்ட்ரம் வராஹ அவதாரத்தையும், வில் - அம்பு பரசுராம, ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ணாவதாரத்தையும் நினைவுபடுத்துகின்றன.
மேலும் ஜய - விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் செய்ய பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் யாவற்றையும் இந்த நரசிம்மரே தாங்கியிருப்பது விசேஷம்.
- நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும்.
- பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு.
திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் ஆவார். பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு.
பரமகாருணிகனான சர்வேச்வரன் அவதரிக்கும் போதே, பக்தனுக்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்கிய கொடியவகை சம்கரித்து இந்த ஒரு அவதாரத்திலே தான்.
ஆகையால் பக்தர்களின் இன்னல் இடையூறுகளைக் களைத்தெறிந்து காக்க வேண்டிய நிலையில் தனக்குள்ள பாரிப்பையும் பரபரப்பையும் உலகுக்கு நன்கு வெளிப்படுத்திய அவதாரம் நரசிங்க அவதாரம். எனவே ஆபத்தும் அவசரத் தேவையுமான வேளைகளில் இரணியனை வணங்கினால் அவன் நம்மைக் காப்பது நிச்சயம்!
நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான்.
இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை இங்கிதமாய் போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.
- விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
- நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.
காவிரிக்கு தென் கரையில் உள்ள நரசிங்கம்பேட்டையில் நரசிம்மர், யோக நரசிம்மராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இக்கோவில், விஜயநகர பேரரசால் சீரமைக்கப்பட்ட தலம். விஸ்தாரமான கருவறையில் நரசிம்மப் பெருமாள் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.
சங்கு சக்கரம் இரண்டு கைகளில் உள்ளன. மற்ற இரு கைகள் யோக முத்திரையைக் காட்டுகின்றன. பெருமான் சாந்த சொரூபியாக அடியார்களின் துயர் தீர்க்கும் காருண்ய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.இரண்ய வதத்துக்குப் பிறகு நரசிம்மரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதைப் போக்க இத்தலத்தில் உள்ள சுயம்புநாத சுவாமி உதவினார். நரசிம்மர் தவம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீக்கிக் கொண்டதால் இது சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.
- கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
- ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிக்குடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த நிலையில் சிங்கரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரே நேர்கோட்டில் இருந்து வருவதால் ஒரே நாளில் 3 லட்சுமி நரசிம்மரை நேரில் சென்று தரிசனம் செய்தால் மக்களுக்கு துன்பம் நீங்கி கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் என்பதால், இக்கோவிலில் திருமணம் செய்து கொள்வதற்கு கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பா ட்டில் உள்ள கோவில் என்பதால் உரிய முறையில் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பிறகு கோவில் வளாகத்தில் திருமணம் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து வந்தனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அனுமதி கேட்டு வந்தனர். இந்த நிலையில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருமணம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறியிரு ப்பதாவது: - சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவிலில் திருமணங்கள் நடத்துவதற்கு உரிய அனுமதியை இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஆகஸ்டு 18- ந்தேதி முதல் திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. எனவே கோவிலில் திருமணம் நடத்த விருப்பமுள்ளவர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்கள் வழங்கி முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி திருமணம் நடத்துவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது அரசு, முதன்முறையாக திரும ணங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற ஆகஸ்டு 18- ந்தேதி முதல் தாயார் சன்னதி முன் மண்டபத்தில் முதற்க ட்டமாக திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க ப்படும். பின்னர் மக்களின் வரவேற்பு மற்றும் முன்பதிவு அதிக அளவில் நடைபெறுவதை ெபாறுத்து கோவில் வளாகப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப திருமணங்கள் நடத்துவதற்கு அரசின் உரிய வழிகாட்டுதலின்படி என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பித்து திருமணங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்பதனை அதிகாரிகள் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி யதோடு அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு ஏதுவாக அமையும் என தெரிவித்தனர்.
- திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆதிகேசவபெருமாளை கும்பிட்ட பிறகு இந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம்.
- சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஆலயத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான ஏணி வைத்து உள்ளே சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலும் ஒன்று.
இத்திருக்கோவில் வளாகத்தில் தென்கிழக்கு பகுதியில் நரசிம்மர் மடம் திருக்கோவில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் நடுவில் மடத்திற்கு சொந்தமான இத்திருக்கோவிலில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆதிகேசவபெருமாளை கும்பிட்ட பிறகு இந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம்.
தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்கள் நேர்ச்சைகளை செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் ஆலய அர்ச்சகர் ஷம்புநாத் ஆலயத்தில் வழக்கமாக நடைதிறப்பதற்காக வந்தார்.
அப்போது ஆலய உண்டியல் உடைக்கபட்டது இருப்பது தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஆலயத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான ஏணி வைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசி பானையை திறந்து அதில் வைக்கபட்டிருந்த சாவிகளை எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சிறியதும் பெரியதுமான 2 உண்டியல்கள் உடைத்துள்ளனர். அதிலிருந்த ரூபாய்நோட்டுகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இருந்த சில்லறை காசுகளை கொள்ளையர்கள் விட்டுசென்றுள்ளனர் .
இத்திருக்கோவிலில் அன்னபூர்ணேஸ்வரி, இரண்டு யோகநரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி உட்பட 4 பஞ்சலோக விக்ரகங்கள் உள்ள நிலையில் உண்டியலை உடைத்து பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர் அங்கு வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் தூக்கிசென்றுள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 1992-ம் ஆண்டு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்று கோவிலில் இருந்த பெரும் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இப்போது மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்