search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் வெடிகுண்டு மிரட்டல்"

    • இ-மெயிலில் மிரட்டல் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய பிறகு ஜகதீஷ் உய்கே தலைமறைவாகி விட்டார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு ஜகதீஷ் உய்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் சில நாட்களாக உள்நாடு, வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. கடந்த 2 வாரங்களில் 400 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இந்த மிரட்டல்கள் இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்களில் வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் புரளி தொடர்பாக மைனர் சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் பின்னணியில் மகாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள கிழக்கு விதர்பா பகுதியை சேர்ந்த ஜகதீஷ் உய்கே (வயது 35) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் பயங்கரவாதம் குறித்து புத்தகம் எழுதியுள்ளார் என்றும், பிரதமர் அலுவலகம், மத்திய ரெயில்வே அமைச்சர், மகாராஷ்டிரா முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி, விமான அலுவலகங்கள், டி.ஜி.பி., ரெயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு ஜகதீஷ் உய்கே இ-மெயில்களை அனுப்பியதாகவும் தேசிய பாதுகாப்பு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து தனக்குள்ள அறிவு குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதேபோல் ரகசிய பயங்கரவாதக் குறியீடு பற்றிய தகவலை முன்வைக்க வாய்ப்பளிக்காவிட்டால் துணை முதல்-அமைச்சரும் உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்தார்.

    இ-மெயிலில் மிரட்டல் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை தொடங்கிய பிறகு ஜகதீஷ் உய்கே தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, கடந்த 2021-ம் ஆண்டு ஜகதீஷ் உய்கே கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும் போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.
    • கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன.

    சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இம்மாதம் 14-ந்தேதி முதல் நேற்று வரை 7 நாட்களில் கிட்டத்தட்ட 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பாதுகாப்புக்கே அரசின் முன்னுரிமை என்றும், அவ்வாறு மிரட்டல் விடுப்பவர்களை NO FLY LIST-ல் சேர்க்க விதிகள் திருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், உள்துறை அமைச்சத்துடன் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் நடக்கும் போது அதனை சரியான முறையில் கையாள வேண்டும்.

    இதெற்கென சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளன. கடந்த வாரம் மட்டும் 8 விமானங்கள் வரை திருப்பி விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சுறுத்தலும் தனித்தனியே கண்காணிக்கப்பட்டது. இந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாண்டுள்ளோம். அவை போலி வெடிகுண்டு மிரட்டல்களாக இருந்தபோதிலும் பாதுகாப்பில் நாங்கள் எந்த சமரசமும் செய்யவில்லை என்றார். 

    • கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார்.
    • கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது.

    பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

    அந்த விமானம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் கோவா டபோலிம் விமான நிலையத்துக்கு வந்து இறங்க வேண்டும்.

    இந்த நிலையில் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவா விமான நிலைய இயக்குனருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு இமெயில் மூலம இந்த மிரட்டல வந்தது. அஜூர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து அந்த விமானத்தை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது. அந்த விமானம உஸ்பெகிஸ் தானில் அவசரமாக தரை இறங்கியது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் தரை இறங்குவதையொட்டி உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

    விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சென்று சோதனை நடத்தினார்கள்.

    ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது 2-வது நிகழ்வாகும். கடந்த 9-ந் தேதி ரஷியாவில் இருந்து கோவா வந்த இந்த நிறுவனத்தை சேர்ந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது. சோதனைக்கு பிறகு மறுநாள் அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

    ×