search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் பறிமுதல்"

    • வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை சுங்கச்சாவடி அருகே சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மதுரை உத்தங்குடி பகுதியில் ஏடிஎம்-ல் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1.53 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.
    • போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை செயல்பட்டு வருகிறது.

    இந்த நகைக்கடையில் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், பிளாட்டினம், தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வு நடத்தினர். கடையில், இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் என்பது தெரியவந்தது. நள்ளிரவு நேரத்தில் புகுந்த கொள்ளையன் ஏ.சி. வெண்டிலேட்டரை உடைத்து கொண்டு கடைக்குள் சென்றுள்ளார்.

    அங்கு ஷோகேஸ்களில் இருந்த நகைகளை தேடி எடுத்து கடையில் இருந்த பையில் வைத்து எடுத்து சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    முகத்தை கேமிராவில் இருந்து மறைக்க தனது மேல் சட்டையை பயன்படுத்தி உள்ளார். எந்த இடத்திலும் முகம் தெரியாமல் இருக்க உஷாராக இருந்துள்ளான் கொள்ளையன்.மேலும் நகைகளை கொள்ளையடித்து விட்டு கடையில் இருந்து வெளியில் வந்து, சில அடி தூரம் நடந்து சென்றதும், பின்னர் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்று பொள்ளாச்சி பஸ்சில் தப்பி செல்வதும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதனால் கொள்ளையன் பொள்ளாச்சி, பழனி, உடுமலை போன்ற பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பொள்ளாச்சி, பழனி, உடுமலை, பெங்களூரு, சேலம், ஓசூர் போன்ற பகுதிகளுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.மேலும் கொள்ளையனின் உருவம், நடை, செயல்பாடு ஆகியவற்றை வைத்து அவர் பழைய குற்றவாளியா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    பொள்ளாச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில், கோவை நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் அடையாளம் தெரியவந்தது.

    நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய்(வயது28).இவர் மீது தர்மபுரி மாவட்டத்தில் கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பாக தர்மபுரி போலீசார் அவரை கைது செய்து, கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    அப்போது அவருக்கு கோவை மத்திய ஜெயிலில் போக்சோ வழக்கில் கைதாகி இருந்த ஆனைமலையை சேர்ந்த சுரேஷ் என்பவரின் நட்பு கிடைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஜெயிலில் இருந்து வெளியில் வந்தார். பின்னர் மீண்டும் தர்மபுரிக்கு சென்றார். அப்போது மீண்டும் அவரை வேறு வழக்கில் போலீசார் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும், விஜய் இங்கிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்பதால், வேறு எங்காவது செல்ல நினைத்தார்.

    அப்போது அவருக்கு ஜெயிலில் அறிமுகமான சுரேஷின் நினைவு வந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் தர்மபுரியில் இருந்து கோவைக்கு தனது மனைவியுடன் வந்த அவர், ஆனைமலையில் வீடு எடுத்து வாடகைக்கு தங்கி இருந்தார்.

    இங்கு வந்த பின்னரும், மீண்டும் விஜய் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளார். சிறியதாக திருடி சேர்க்க முடியாததால், பெரிதாக ஏதாவது திருட்டில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டுள்ளார்.

    அதன்படியே கோவையில் உள்ள நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தார். பின்னர் தான் கொள்ளையடித்த நகைகளில் பாதியை அரூரில் உள்ள தனது தாய் வீட்டிலும், மற்றொரு பாதியை ஆனைமலையில் உள்ள வீட்டிலும் வைத்தார்.

    இந்த நிலையில் ஆனைமலையில் விஜய் இருப்பதாக கோவை தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதேபோல் கோவையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளை பார்த்த தர்மபுரி போலீசாரும், விஜயை கைது செய்ய கோவைக்கு வந்தனர்.

    பின்னர் கோவை தனிப்படை போலீசார் மற்றும் தர்மபுரி போலீசார் இணைந்து ஆனைமலை பகுதிக்கு சென்றனர். அங்கு விஜய் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் அவரை வெளியில் வர எச்சரிக்கை விடுத்தனர்.

    போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும், விஜய் தனது வீட்டின் ஓட்டை பிரித்து மேல் பகுதி வழியாக வெளியில் வந்து, போலீசாரின் கண்ணில் படாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து போலீசார் அவரது மனைவியை பிடித்தனர். அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீடு மற்றும் அரூரில் விஜயின் தாய் வீட்டில் இருந்த 2¾ கிலோ நகையையும் மீட்டனர்.

    மேலும் விஜய்க்கு வீடு பார்த்து கொடுத்த சுரேஷ் என்பவரை பிடித்து நகை கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா? என விசாரித்தனர். விசாரணையில் அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரியவந்து.

    இதையடுத்து போலீசார் தப்பியோடிய விஜயை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளையன் சிக்கிய நிலையில் வீட்டை சுற்றி வளைத்த 2 மாவட்ட போலீசாரும் அவனை பிடிக்க முடியாமல் கோட்டை விட்டு விட்டனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர்.

    செங்கல்பட்டு:

    சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்வது வழக்கம். நேற்று காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள கழிவறை பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர். அவர்கள் கையில் ஒரு கைப்பை இருந்தது. அதை போலீசார் வாங்கி சோதனை செய்தனர்.

    அந்த பையில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த நபர்களிடம் கேட்டபோது அவற்றை தாங்கள் கடைகளுக்கு வியாபாரம் செய்ய எடுத்து செல்வதாக கூறினர். அவர்களிடம் தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

    இதையடுத்து அந்த நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 44) மற்றும் ராம்லால் (44) எனதெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ரெயில்வே போலீசார் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகளில் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
    • லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

    பாட்னா:

    லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வே பணியில் சேர அவரது குடும்பத்தினர் பெயரில் நிலம் லஞ்சமாக பெற்றது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரிதேவி, அவரது மகனும் பீகார் துணை-முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் 3 மகள்கள் வீடுகள் அவர்களுக்கு சொந்தமான 24 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.

    இந்த சோதனையில் லாலு பிரசாத் யாதவ் மகள்கள் வீடுகளில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப்பணம், 1 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    • போலீசாரின் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் நகைகள், ரொக்கப் பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
    • நகைகளை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட முகேஷ் பவர்லால் ஜெயின், சிக்கந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    சென்னையில் உள்ள சில நகைக்கடைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் நகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன.

    போலீசாரின் சோதனையின்போது இப்படி ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்படும் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் போலீசாரின் வாகன சோதனையின்போது ரூ.6 கோடி மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சவுகார்பேட்டை, ஆதியப்பா தெருவில் நேற்று இரவு யானைகவுனி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் ராஜ்குமார், போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பெரிய பைகளுடன் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தங்க நகைகளாக வளையல், செயின், மோதிரங்கள் உள்ளிட்டவை இருந்தன. மொத்தம் 14 கிலோ தங்க நகைகள் இருந்தன.

    விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த முகேஷ்பவர்லால் ஜெயின், சிக்கந்தர் என்பது தெரிந்தது.

    அவர்கள் மும்பையில் உள்ள ஒரு நகைக்கடையில் இருந்து தங்க நகைகளை வாங்கிக்கொண்டு, சவுகார்பேட்டை, என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு விற்பனை செய்ய எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.

    ஆனால் அவரிகளிடம் தங்க நகைக்கான எந்த ஆவணமும் இல்லை. அவர்கள் ஆவணங்கள் இல்லாமல் 14 கிலோ தங்க நகைகளை எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இதுபற்றி வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் நகைகளை பறிமுதல் செய்து இதுபற்றி மேலும் பிடிபட்ட முகேஷ் பவர்லால் ஜெயின், சிக்கந்தர் ஆகியோரிடம் விபரங்களை சேகரித்து வருகிறார்கள்.

    ×