என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ ஊசி"

    • கடந்த 15-ந்தேதி பொங்கலன்று சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 48). விவசாயியான இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும் இவருக்கு நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருந்து வந்தது.

    புரோக்கர் மூலம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லை சேர்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்தார். இருவரும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் சுப்பிரமணி தாயாருக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சுப்பிரமணியின் தாயார் அவரது மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதைத்தொடர்ந்து தேவி, சுப்பிரமணியிடம் தாயார், சகோதரியிடம் கையெழுத்து வாங்கி விட்டு 2 ஏக்கர் நிலத்தை விற்று விடுங்கள். நாம் திண்டுக்கல்லுக்கு சென்று வசிப்போம் என தெரிவித்துள்ளார். இதற்கு சுப்பிரமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    கடந்த 15-ந்தேதி பொங்கலன்று சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவருக்கு தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார். சுப்பிரமணி, எதற்காக ஊசி செலுத்துகிறாய் என்று கேட்ட போது காய்ச்சல் குணமாவதற்காக செலுத்துவதாக தெரிவித்துள்ளார். அந்த ஊசி செலுத்தியதும் சிறிது நேரத்தில் சுப்பிரமணி மயக்கமடைந்தார்.

    பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சுய நினைவை இழந்தார். இதையடுத்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுய நினைவு திரும்பியது.

    சுப்பிரமணிக்கு சுய நினைவு திரும்பாத வரை அவரது அருகில் இருந்து கவனித்து கொண்ட தேவி, சுய நினைவு திரும்பியதும் ஆஸ்பத்திரியில் இருந்து சென்று விட்டார். இது சுப்பிரமணியின் உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே இது குறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேவி எங்கு சென்றார் என்று விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    அவர் எதற்காக கணவருக்கு ஊசி செலுத்தினார்?, அது விஷ ஊசியா?, நிலத்தை அபகரிக்க விஷ ஊசி செலுத்தி கணவரை கொல்ல முயன்றாரா ? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
    • சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா்.

    இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

    இதையடுத்து தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாக தெரிகிறது. கடந்த 15-ந் தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி, கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு விரைந்துள்ளனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • முதியோர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும் பராமரிப்பதற்குரிய ஆட்கள் இல்லாததும் கருணை கொலைக்கு காரணமாய் அமைகிறது.
    • படுத்த படுக்கையாக உள்ளவர்களை கவனிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை கருணை கொலை செய்யும் அளவுக்கு வந்து விடுகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்து வருபவர் மோகன்ராஜ் (வயது 50).

    இவர் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களுக்கு பூச்சி மருந்து கொண்ட ஊசியை செலுத்தி கருணை கொலை செய்வதாகவும், இதற்காக அவர்களது உறவினர்களிடம் ரூ.5000 வரை பணம் பெறுவதாகவும், கடந்த 15 வருடமாக இது போல் 300 பேரை விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதை அறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் கூறுகையில், பணம் பெற்றுக்கொண்டு கருணை கொலை செய்வதாக பிணவறை தற்காலிக ஊழியர் மோகன்ராஜ் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வேறு யாரும் அவர் மீது புகார் கொடுக்கவில்லை. அவர் கருணை கொலை செய்தது உண்மை என விசாரணையில் தெரியவந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நேற்று முழுவதும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் விசாரணைக்கு அவரை அழைத்துள்ளோம்.

    அவர் மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் ஒரு பொருளை வைத்திருந்ததாக, தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் கூறுகையில், கிராமப் புறங்களில் வயது முதிர்ந்து படுத்த படுக்கையாய் உள்ளவர்களை கவனிக்க முடியாததால், அவர்களது குடும்பத்தினரே கருணை கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    முதியோர்களின் மருத்துவ செலவுகளை மேற்கொள்ள முடியாததும் பராமரிப்பதற்குரிய ஆட்கள் இல்லாததும் இதற்கு காரணமாய் அமைகிறது. படுத்த படுக்கையாக உள்ளவர்களை கவனிப்பது சிரமம் என்பதால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை கருணை கொலை செய்யும் அளவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்காக மோகன்ராஜ் போன்ற சிலரை பயன்படுத்தி சத்தம் இல்லாமல் கருணைக்கொலையை அரங்கேற்றி வருகிறார்கள்.

    இதேபோல போலி மருத்துவர்கள் சிலரும் பெரிய தொகையை பெற்றுக்கொண்டு கருணைக் கொலையை அரங்கேற்றி வருகிறார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிபாளையத்தில் பிணவறை ஊழியர் ஒருவரே 300-க்கும் மேற்பட்டோரை கருணை கொலை செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதும், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதும் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • எலிசபெத் 8 முறை மார்பிலும், 1 முறை கழுத்திலும் குத்தி கொல்லப்பட்டார்
    • 2022ல் ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த நரம்பு கிடைக்கவில்லை

    அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 27 மாநிலங்களில் கொடுங்குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது.

    மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டில் விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு, தூக்கு மற்றும் துப்பாக்கியால் சுடப்படுதல் ஆகியவை அனுமதிக்கப்பட்ட முறைகளாகும்.

    1988 மார்ச் 18ல் அமெரிக்க தென்கிழக்கு மாநிலமான அலபாமாவின் கோல்பர்ட் கவுன்டி (Colbert county) பகுதியில் 45 வயதான எலிசபெத் சென்னட் (Elizabeth Sennett) சுமார் 8 முறை மார்பிலும், ஒரு முறை கழுத்திலும் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கணவர் சார்ல்ஸ் சென்னட், ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார்.

    இக்கொலையை செய்ததாக கென்னத் யூஜின் ஸ்மித் (Kenneth Eugene Smith) மற்றும் ஜான் ஃபாரஸ்ட் பார்க்கர் எனும் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

    விசாரணையில் சார்ல்ஸ், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருந்ததாகவும், அதனை சமாளிக்க மனைவியின் காப்பீடு தொகையை பெற விரும்பியதாகவும், அதற்கு இருவருக்கும் தலா $1000 கொடுத்து தனது மனைவியை கொல்ல சொல்லி அமர்த்தியிருந்ததும் தெரிய வந்தது.

    விசாரணையின் போது சார்ல்ஸ் தற்கொலை செய்து கொண்டார்.

    1996ல் ஸ்மித்திற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

    2010ல் ஜான் பார்க்கருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    2022ல் அலபாமாவில், தண்டனையை நிறைவேற்றும் விதமாக அதிகாரிகள், ஸ்மித்திற்கு விஷ ஊசி செலுத்த முயன்ற போது, நரம்புகளை தேட முடியாமல் போனதால் அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவருக்கு "நைட்ரஜன் ஹைபாக்சியா" எனும் புதிய முறையில் மரண தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டது. அந்த தண்டனை ஜனவரி 25 நிறைவேற்றப்பட இருந்தது.

    ஆனால், இம்முறையில் தன்னை கொல்ல கூடாது என தற்போது 58 வயதாகும் ஸ்மித் தரப்பில் வாதிடப்பட்டது.

    நேற்று, இவ்வழக்கில் நீதிபதி ஆர். ஆஸ்டின் ஹஃபேகர் (Judge R. Austin Huffaker), "நைட்ரஜன் ஹைபாக்சியா முறையில் ஸ்மித்திற்கு தண்டனை நிறைவேற்றலாம்" என தீர்ப்பளித்தார்.

    இந்த புதிய முறையில் சுவாச முக கவசம் போல் ஒரு உபகரணத்தை குற்றவாளியின் மூக்கிலும், வாயிலும் வைத்து, அதில் நைட்ரஜன் வாயுவை உள்ளே செலுத்துவார்கள்.

    அலபாமா, மிசிசிபி மற்றும் ஓக்லஹாமா ஆகிய மாநிலங்கள் இந்த முறைக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் இதுவரை எந்த குற்றவாளிக்கும் இது பயன்படுத்தப்பட்டதில்லை.

    மரண தண்டனையை இந்த முறையில் நிறைவேற்றுவது மனிதத்தன்மையற்ற செயல் என ஸ்மித்தின் வழக்கறிஞர்கள் கூறினர். புதிய முறையை எதிர்த்து ஸ்மித் தரப்பில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படலாம் என தெரிகிறது.

    • அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர்
    • குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் வயிற்றில் விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பல் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட பாஜக தலைவரான 60 வயதான குல்பாம் சிங் யாதவ், நேற்று (திங்கள்கிழமை), ஜுனாவாய் அருகே தப்தாரா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். தகவலின்படி, நேற்று மதியம் ஒரு பைக்கில் மூன்று பேர் குல்ஃபாம் சிங் யாதவை சந்திக்க அடைந்தனர்.

    அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர். அப்போது மூவரில் ஒருவன் குல்பாம் சிங் எதிர்பாராத நேரத்தில் அவரது வயிற்றில் ஊசி ஒன்றை செலுத்தியுள்ளான். அதன்பின் உடனே அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.

    குடும்பத்தினர் அவரை குன்னூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால், அலிகார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அலிகார் செல்லும் வழியிலேயே குல்பாம் சிங் யாதவ் உயிர் பிரிந்தது.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து குல்பாமுக்கு போடப்பட்ட ஊசி கைப்பற்றப்பட்டது.

    ஊசியில் இருந்தது எந்த மாதிரியான மருந்து என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

    2004 குன்னூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் குல்பாம் சிங் யாதவ் போட்டியிட்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட செயல்பாட்டாளராகவும், பாஜக மாவட்ட பொதுச் செயலாளராகவும், மேற்கு உ.பி.யின் பாஜக துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். 

    ×