என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பஸ்நிலையம்"
- திருச்சி பஞ்சப்பூரில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் ஆம்னி பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது
- விரிவான திட்ட அறிக்கை தயாரானது
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.
பின்னர் ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் ரெயில்வே நிர்வாகம் மற்றும் பஸ் நிலைய கதவுகளை அடைத்து விட்டது.
இதனால் தற்போது ஆம்னி பஸ்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்த நிலையில் பஞ்சப்பூரில் ரூ.349 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி ஒருங்கிணைந்த பஸ் முனையம் அருகில் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கு 2 ஏக்கர் பரப்பளவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பஸ் முனைய பகுதியில் டைட்டல் பார்க், ட்ரக் டெர்மினல், ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் போன்றவை வருகிறது.
இந்தப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளது.
ஆம்னி பஸ் நிலையத்துக்கு தனியாக இடமில்லாததால் திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலைய பகுதிகளில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த புதிய ஆம்னி பஸ் நிலையத்துக்கு ரூ. 18. 75 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்திற்கு நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை கேரளாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
- புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில் :
பூதப்பாண்டி அருகே உள்ள வீரவநல்லூர் பகுதி யைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை கேரளாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிவக்குமார் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவக்குமார் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அவரை பாளையங்கோட்டை ஜெய லில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோத னைக்கு பிறகு பாளையங்கோட்டைக்கு அழைத்து செல்வதற்காக போலீசார் சிவகுமாரை வடசேரி பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. போலீ சார் அவரை தேடினார்கள். அப்போது சிவக்குமார் தப்பி ஓடி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. சிவக்குமாரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், சிவக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் தப்பி ஓடிய சிவகுமார் மீது போலீஸ் ஏட்டு பிரேம்குமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கீழக்கரை பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- முக்கு ரோட்டில் இருந்து ஆட்டோவுக்கு ரூ.60 கொடுத்து வீடு செல்ல வேண்டி உள்ளது.
கீழக்கரை
கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வரு கின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன.
திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெப்போக்களில் இருந்து இயக்கப்படும் புறநகர் பஸ்கள் கீழக்கரை பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன. இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே அனைத்து பஸ்களும் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு இயக்க நிறுவன வழக்கறிஞர் சாலிஹ் ஹூசைன் கூறுகையில், அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து ரூ. 20 கொடுத்து டிக்கெட் எடுத்து கீழக்கரை வந்து சேரும் மக்கள் முக்கு ரோட்டில் இருந்து ஆட்டோவுக்கு ரூ.60 கொடுத்து வீடு செல்ல வேண்டி உள்ளது.
எனவே இந்தப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலையத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களும் வந்து செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது.
- பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
உடுமலை :
உடுமலையின் மையப்ப குதியில் மத்திய பஸ் நிலையம் உள்ளது. இங்கு இருந்து சுற்றுப்புற கிராமங்கள் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பஸ் நிலையம் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது. பஸ் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடி சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை ஒட்டியவாறு பஸ் நிலையத்திற்குள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதி ல்லை.இதனால் நடைபாதை அமைக்க ப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதும க்களுக்காக தொடங்க ப்படுகின்ற எந்த ஒரு திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருப்பது வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் தொடரும் அலட்சியம் காரணமாக ஏதும் அறியாத அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
எனவே சம்பந்த ப்பட்ட நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்து உள்ளனர்.
- இளையான்குடி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- கட்டுமான நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 18 வார்டுகளில் தினசரி சேகரமாகும். 5.100மெட்ரிக் டன் குப்பைகளை பேரூ ராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள 2.5 ஏக்கர் பரப்ப ளவில் அமைந்துள்ள வளமீட்புப் பூங்காவில் சேகரிக்கப்படுகிறது.
அதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய திடக்கழிவுகளை உரிய அகழ்வு முறையில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ரூ.44.27 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குப்பைகளில் இருந்து பிரிக்கப்பட்ட பழைய திடக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், திடக்கழிவுகளில் இருந்து தரம் பிரிக்கப்பட்ட கண்ணாடி பொருட்கள், தோல் பொருட்கள் ஆகிய வைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி உரிய பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இளையான்குடி பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மேம்பாட்டு வளர்ச்சிகாகவும் இந்த பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் புதிய பஸ் நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்ட 22.3.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தொடர்பா கவும், கட்டுமான நிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்ப ட்டது. பஸ் நிலைய சுற்றுச்சுவரின் வெளி ப்புறமும் நெடுஞ்சாலை வரை பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியும் மேற்கொ ள்வதற்கு அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. வருகிற மே மாதம் இறுதி க்குள் இந்த கட்டுமானப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிக்கு கொண்டு வர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இளையான்குடி பேரூராட்சிப் பகுதிக்கென புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 ஏக்கர் இடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் கள ஆய்வுகளும் மேற்கொ ள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, இளநிலைப் பொறியாளர் சந்திரமோகன், இளை யான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபி உள்பட பலர் உடனிருந்தனர்.
- பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
- 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
மாமல்லபுரம்:
சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் தற்போது வசதியான பஸ் நிலையம் இல்லை. இங்குள்ள தலசயன பெருமாள் கோவில் முன்புறம், குறுகிய திறந்த வெளி பகுதியே பஸ் நிலையமாக உள்ளது.
சென்னை மாநகர், அரசு, தனியார் பஸ்கள் நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் மாமல்லபுரத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாமலல்லபுரம் புறநகர் பகுதியில் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக அதிநவீன பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பினராலும் விடப்பட் டது.
இதை ஏற்று திருக்கழுக்குன்றம் சாலை பகுதி, பக்கிங்காம் கால்வாய் அருகில், 6.80 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பஸ் நிலைய கட்டுமானத்துக்காக ரூ.18 கோடியில், தனியாரிடம், 2019-ல் பணி ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதாக சென்னை பெருநகர திட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் உள்ளிட்டோருடன் ஆய்வு செய்து, ஓராண்டு கடந்தும் கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சட்டசபை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை எம். எல்.ஏ. பாலாஜி இத்திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என அறிவித்துள்ளார்.
- புதிய பஸ்நிலையம் கட்ட முதல் தவணையாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி ஆகும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் மாதாந்திர கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் அண்ணா சிலை அருகே கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைக்க தலைவர் கொண்டு வந்த தீர்மானத் திற்கு பா.ஜ.க. கவுன்சிலர் குமார் எதிர்ப்பு தெரி வித்தார். நகர் மன்ற தலை வரின் விளக்கத்திற்கு பின் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் குமார்: ராம நாதபுரம் நகரில் பாதாள சாக்கடை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க பல கோடி ரூபாயில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதனை கண்காணிக்க தனியாக பொறியாளர், அலுவலர்கள் நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன்: தற்போது தான் ராமநாதபுரம் சிறப்பு நகராட்சிக்குரிய அரசு உத்தரவு வந்துள்ளது இதன்படி புதிதாக அலுவ லர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த திட்ட பராமரிப்பிற்கு தனியாக பொறியாளர் நியமிக்க வேண்டும்.
ராஜாராம் பாண்டியன் (காங்) : முகவை ஊரணியில் வேலை இல்லாததால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இதே நிலை தொடர்ந்தால் எனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். நகராட்சி நிர்வாகம் பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.
கமிஷனர்: பாதாள சாக்கடை குழாயை மாற்றி புதிய குழாய் அமைப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. தற்போது முகவை ஊரணியில் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கவுன்சிலர் மணிகண்டன் (காங்) : காவிரி குடிநீர் முழுமையாக வராததால் எனது வார்டில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அல்லி கண்மாய் சுடுகாட்டில் போதுமான வசதிகள் இல்லை. ஓய்வு எடுக்க இடம் இல்லாததால் தகனம் செய்ய வரும் மக்கள் அவதிப்படு கின்றனர்.
தலைவர்: அல்லி கண்மாய் சுடுகாட்டில் ஓய்ெவடுக்கும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.குடிநீரை பொறுத்தவரை ராமநாதபுரத்திற்கு 33 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் 25 லட்சம் லிட்டர் தான் வருகிறது. அதனை வைத்து சப்ளை செய்து வருகிறோம். விரைவில் 55 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் ராமநாதபுரத்தில் புதிய பஸ்நிலையம் கட்ட ரூ.20 கோடியில் பணிகளை தொடங்க அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.30 கோடி யாக இருந்தாலும் முதல் கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய பஸ்நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு சந்தை கடை பகுதியையும் சேர்த்து விரிவாக்கம் செய்து புதிய பஸ் நிலையம் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
- கீழக்கரை பஸ் நிலையத்திற்கு புறநகர் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கீழக்கரை
கீழக்கரை நகரில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கீழக்கரை வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவைகளில் புறநகர் பஸ்கள் திருநெல்வேலி டெப்போ, தூத்துக்குடி டெப்போ, கன்னியாகுமரி டெப்போ கும்பகோணம் டெப்போ நாகப்பட்டினம் டெப்போ உள்ளிட்ட புறநகர் பஸ்கள் கீழக்கரை நகருக்குள் உள்ள பஸ் நிலையத்திற்கு வராமல் ஏர்வாடி முக்கு ரோடு வழியாக சென்று விடுகின்றன.
இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி பகுதிக்கு செல்ல வேண்டிய மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற னர்.
முதியவர்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோர் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே அனைத்து பஸ்கள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், இந்த பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் பெண்கள், முதியோர்கள், நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நகரில் உள்ள பஸ் நிலை யத்திற்கு அனைத்து புறநகர் பஸ்களையும் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்